Birdbath
– MARGARET SAINE
Tamil translation : Gouthama Siddarthan
பறவைக் குளியல்
– மார்கரெட் சைன்
நான் என் சாளரத்திலிருந்து பார்க்கிறேன்,
சிறு கிளைகளும் இலைகளும் அசையும்
பறந்து விரிந்த லாரல் மரத்தின் உயிர்ப்பை.
ஆகாசத்தின் நீலக் கண்ணாடியை அளந்தபடி
சிறகு விரித்த பறவைகளுக்கு
பூமியில் உள்ள நீர்நிலைகளின் நீலம் வசீகரிக்க,
அவைகளின் சிறகுகள் தாழ்கின்றன
தாகமும் ஸ்நானமும் சாந்தம் கொள்ள.
நான் உறக்கத்தில் சாந்தம் கொள்ளும் மரணத்தின்
ஆழ்ந்த நாளொன்றில்,
விழித்தெழச் சொல்கிறது என் தோட்டம்.
(தமிழில் : கௌதம சித்தார்த்தன்)
ஜெர்மனியில் பிறந்து கலிபோர்னியாவில் வசிக்கும் மார்கரெட் சைன் முதன்மையாக கவிஞர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் இதழாசிரியர். யேல் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி பட்டம் பெற்ற இவர், பிரெஞ்சு மற்றும் ஹிஸ்பானிக் இலக்கியங்களை கற்பித்துள்ளார். ஆறு மொழிகளில் பாண்டித்தியம் பெற்று விளங்கும் இவர், பல மொழிகளினூடே கவிஞர்களை மொழிபெயர்க்கிறார். தனது படைப்புகளாக, ஆங்கிலத்தில் ஐந்து கவிதை புத்தகங்களையும் ஜெர்மனியில் நான்கு புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார், மேலும் போருக்குப் பிந்தைய குழந்தை பருவ நினைவுக் குறிப்பையும் ஜெர்மன் மொழியில் வெளியிட்டுள்ளார். 2020 இலையுதிர்காலத்தில், அவர் ஸ்பெயினிலும் மற்றொரு புத்தகத்தை கனடாவிலும் வெளியிடுவார். அவர் 5,000 ஹைக்கூக்களை எழுதியுள்ளார் மற்றும் இத்தாலிய, பிரஞ்சு மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் பல கையெழுத்துப் பிரதிகள் நிலுவையில் உள்ளன. புகழ்பெற்ற கலிபோர்னியா கவிதை காலாண்டிதழின் ஆசிரியர்.
******************
Birdbath
– MARGARET SAINE
In it I see from my window
the twigs and leaves
of the immense laurel tree
Birds flying over
see a small blue mirror of sky
to them all water on earth is blue
so they plunge down from above
to drink and to bathe in
After I’ve practiced death in sleep
my garden tells me Wake up
it is day
Margaret Saine was born in Germany and lives in California. With a PhD from Yale University, she has taught French and Hispanic literature. She writes poetry in and translates poets between six languages. She has published five books of poetry in English and four in Germany, plus a postwar childhood memoir in German. In the fall of 2020, she will publish a book in Spain and another in Canada. She has written over 5 000 haiku and has several manuscripts in Italian, French and Spanish pending. She is an editor at the California Poetry Quarterly.
மகிழ்ச்சி பரவலான கவிதை அவரின் முக்கியத்துவம் கவிதை யில் ஊடாடுகிறது மகிழ்ச்சி /நன்றி