TAMILI

஥ தமிழி

I am a shadow   – Diane di Prima

 

I am a shadow
– Diane di Prima
Tamil translation : Gouthama Siddarthan

நான் ஒரு நிழலி
– தயான் டி ப்ரிமா

தயான் டி ப்ரிமா (ஆகஸ்ட் 6, 1934 – அக்டோபர் 25, 2020) ஒரு அமெரிக்க கவிஞர். ஜாக் கியூரேக், ஆலன் கின்ஸ்பெர்க், வில்லியம் பர்ரோஸ் ஆகியோர் உருவாக்கிய பீட் கவிதை இயக்கத்தின் முன்னணிக் கவி.  டி ப்ரிமா 40 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார், அவரது படைப்புகள் 20 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பீட் இயக்கத்தின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்த  டி ப்ரிமா, பீட் இயக்கத்திற்கும் பின்னர் வந்த ஹிப்பிகளுக்கும், அதே போல் கிழக்கு கடற்கரை மற்றும் மேற்கு கடற்கரை கலைஞர்களுக்கும் இடையில் ஒரு இணைப்புப் பாலம் என்பது போன்ற உருவகமாக இருந்தார்.

The Floating Bear என்னும் இதழில் ஆசிரியர் பொறுப்பில் இருந்தபோது, இரண்டு கவிதைகளை வெளியிட்டதற்காக 1961 ஆம் ஆண்டில் அவர் பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷனால் கைது செய்யப்பட்டார். டி ப்ரிமாவின் கூற்றுப்படி, அவரது கவிதைகளின் தன்மை காரணமாக போலீசார் தொடர்ந்து அவளைத் துன்புறுத்தினர்.

1974 முதல் 1997 வரை, 1974 முதல் 1997 வரை, ஜாக் கியூரேக் உலகப்புகழ் பெற்ற நரோபா இன்ஸ்டிடியூட்டில் உருவாக்கிய “Jack Kerouac School of Disembodied Poetics” என்னும் கவிதை முறையைக் கற்பித்தது தன வாழ்வில் மிக முக்கியமான தருணங்கள் என்கிறார்.

பீட் கவிதை இயக்கத்தின் மிக முக்கியமான கவியான இவர் இன்று (26 10 2020) அதிகாலையில் மரணமடைந்தார். பரிசோதனை முயற்சிகளை முன்வைத்து இயங்கிய கவிதை இயக்கத்தின் முன்னோடியான அவருக்கு தலைதாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது தமிழி இதழ். அவரது நினைவாக அவருடைய கவிதை ஒன்றை மொழியாக்கம் செய்து முன்வைக்கிறது.

*****************

நான் ஒரு நிழலி
– தயான் டி ப்ரிமா  

நான் உறை பனியைக் கடக்கும் நிழலி
நான் நீரில் அமிழ்ந்திருக்கும் துருவேறிய கத்தி
நான் உறைபனி கடித்த பேரி மரம்
நான் என் கரங்களில் மலையைத் தாங்குகிறேன்
என் பாதங்கள் கண்ணாடியால் வெட்டப்படுகின்றன
இருட்டிய பின் காற்று வீசும் காட்டில் நடக்கிறேன்
நான் ஒரு பொன் மேகத்தால் போர்த்தப்பட்டிருக்கிறேன்
என் சீழ்க்கையொலி பற்களினூடே நெகிழ்கிறது
என் தொப்பி சரிந்து வீழ்கிறது

என் கண்கள் கழுகுகளுக்கு உணவாக்கப்படுகின்றன
என் தாடை வெள்ளிக் கம்பியால் பூட்டப்பட்டுள்ளது
என் எலும்புகளில் சூப் தயாராகும் வரை
நான் எரிந்து கொண்டிருக்கிறேன்
நான் குன்றின் மீது நின்றிருக்கும் ராட்சதக் கற் சிலை.

உடைந்த அலமாரியில் இருந்து வெறித்துப் பார்க்கும்
நான் ஒரு பனிப்புயல் போன்ற பைத்தியம்.

I am a shadow  
– Diane di Prima

I am a shadow crossing ice
I am rusting knife in the water
I am pear tree bitten by frost
I uphold the mountain with my hand
My feet are cut by glass
I walk in the windy forest after dark
I am wrapped in a gold cloud
I whistle thru my teeth
I lose my hat

My eyes are fed to eagles & my jaw
is locked with silver wire
I have burned often and my bones are soup
I am stone giant statue on a cliff

I am mad as a blizzard
I stare out of broken cupboards

************

Diane di Prima (August 6, 1934 – October 25, 2020)

Feminist Beat poet Diane di Prima was born in Brooklyn, New York. She attended Swarthmore College for two years before moving to Greenwich Village in Manhattan and becoming a writer in the emerging Beat movement. There, she developed friendships with poets Amiri Baraka, Allen Ginsberg, Jack Kerouac, Frank O’Hara, and Audre Lorde. After joining Timothy Leary’s intentional community in upstate New York, she moved to San Francisco in 1968.

Di Prima’s poetry mixes stream-of-consciousness with attention to form and joins politics to spiritual practice. In an interview with Jacket magazine, di Prima spoke about her life as a writer, a mother, and an activist. “I wanted everything—very earnestly and totally—I wanted to have every experience I could have, I wanted everything that was possible to a person in a female body, and that meant that I wanted to be mother.… So my feeling was, ‘Well’—as I had many times had the feeling—‘Well, nobody’s done it quite this way before but fuck it, that’s what I’m doing, I’m going to risk it.’”

Di Prima has published more than 40 books. Her poetry collections include This Kind of Bird Flies Backward (1958), the long poem Loba (1978, expanded 1998), and Pieces of a Song: Selected Poems (2001). She is also the author of the short story collection Dinners and Nightmares (1960), the semi-autobiographical Memoirs of a Beatnik (1968), and the memoir Recollections of My Life as a Woman: The New York Years (2001).

With Amiri Baraka, she co-edited the literary magazine The Floating Bear from 1961 to 1969. She co-founded the Poets Press and the New York Poets Theatre and founded Eidolon Editions and the Poets Institute. A follower of Buddhism, she also co-founded the San Francisco Institute of Magical and Healing Arts.

Di Prima was named Poet Laureate of San Francisco in 2009. She has been awarded the National Poetry Association’s Lifetime Service Award and the Fred Cody Award for Lifetime Achievement and has also received grants from the National Endowment for the Arts, the Committee on Poetry, the Lapis Foundation, and the Institute for Aesthetic Development. St. Lawrence University granted her an honorary doctorate.

She has taught at the Jack Kerouac School of Disembodied Poetics at the Naropa Institute, the California College of Arts and Crafts, and in the Masters-in-Poetics program at the New College of California. Selections of her papers are held at the University of Louisville, Indiana University, Southern Illinois University, and the University of North Carolina at Chapel Hill’s libraries. Di Prima lives in Northern California.

unnatham

2 thoughts on “I am a shadow   – Diane di Prima

  1. தயான் டி பிரிமா என்ற பெரும் கவிக்கு – மலர் வணக்கம்

  2. தயான் டி பிரிமா என்ற பெரும் கவிக்கு – மலர் வணக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top