TAMILI

தமிழி

கௌதம சித்தார்த்தனும் நானும் – கௌதம சித்தார்த்தன்

 

பத்தியின் பொதுத் தலைப்பு : அயிரையிலிருந்து ஆக்ஸோலோடில் க்கு

முதல் அத்தியாயம் : கௌதம சித்தார்த்தனும் நானும்

  • கௌதம சித்தார்த்தன்

லத்தீன் அமெரிக்க வாசகர்களே!

எங்கள் நாட்டில் எவருக்குமே கிட்டியிராத ஒரு மகத்தான பாக்கியம் எனக்குக் கிட்டியிருக்கிறது. ஒரே நீரோட்டமாய் போய்க் கொண்டிருந்த உலக இலக்கியத்தின் போக்கையே தங்களது நிலத்தை நோக்கி திசை திருப்பிய லத்தீன் அமெரிக்க BOOM – அலையடிப்பு என் தமிழ் நிலமெங்கும் கரைபுரண்டோடியபோது, ஒரு அயிரை மீனாக மாறி, சுழன்று சுழன்று ஓடும் அதன் மந்திரச் சுழிப்புகளில் மூழ்கி முக்குளித்திருக்கிறேன்.

இப்போது அயிரையிலிருந்து Axolotl ஆக!

உலகின் தொன்மையான கலாச்சாரமும், Boom காலகட்டத்திலிருந்து Post boom க்கு வளர்ச்சியடைந்துள்ள தனித்துவமான கலை ரசனையும் கொண்ட மண்ணின் வாசகர்களோடு மாதம் தோறும் உரையாடும் ஒரு அற்புதமான வாய்ப்பை எனக்குத் தந்த இதழ் ஆசிரியருக்கும் குழுவினருக்கும் 2000 ஆண்டு தொன்மை மிகுந்த தமிழ் மொழியின் சார்பாக மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!

எங்கள் தொன்மையான தமிழ்ப் பண்பாடு, கலை, இலக்கியம், மொழிவளர்ச்சி, வாழ்வியல் அம்சங்களுக்கும், தொன்மையான லத்தீன் அமெரிக்க மண்ணுக்கும் உள்ள உறவை முன்வைத்து இவைகளினூடாக எல்லைகளற்று விரியும் சர்வதேச இலக்கிய நீரோட்டத்தை இணைத்து ஒரு புத்தம் புதிய பார்வையை உங்களிடையே பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்!

மாற்று மொழியின் தரமான இலக்கியக் கூறுகளை அங்கீகரிக்கும் அற்புதமான மனப்பான்மை கொண்ட இளம் தலைமுறையை ஸ்பானிய மண்ணில் உருவாக்கிய ஸ்பானிஷ் இலக்கிய ஆளுமைகளுக்கும், என் ஆதர்சமான போர்ஹேஸுக்கும் இந்த coloumn – ஐ சமர்ப்பணம் செய்கிறேன்!

இணைய வளர்ச்சியடையாத 1980 -90 காலகட்டத்தில், லத்தீன் அமெரிக்க புத்தகங்கள் எங்கிருந்தாலும் சோற்று மூட்டையைக் கட்டிக்கொண்டு அங்கு பயணம் போவதே என் வாழ்நாள் பயணங்களாக இருந்தன. ஸ்ரீரங்கம் டி.கண்ணனிடம் வாங்கிய போர்ஹேஸ் ஐ, ஸ்ரீரங்கத்தின் கோயில் பிரகாரத்தின் தூணில் சாய்ந்துகொண்டு படித்தபோது சட்டென கோயில் பிரகாரம் ஒரு labyrinth ஆக மாறிய கதையை ஸ்பானிஷ் வாசகா, உன்னிடம்தானே பகிர்ந்து கொள்ள முடியும்…

நான் முழுக்க முழுக்க லத்தீன் அமெரிக்க இலக்கியம் படித்து வளர்ந்தவன். உலக இலக்கியத்தின் போக்கையே மாற்றி அமைத்த ஜார்ஜ் லூயிஸ் போர்ஹேஸ், யுவான் ருல்ஃபோ, கார்லோஸ் ஃபுயூண்டஸ், பாப்லோ நெருடா, ஜூலியோ கொர்த்தஸார், கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், மரியோ வர்காஸ் லோசா, ஆக்டேவியோ பாஸ் மற்றும் ராபர்டோ பொலானோ.. போன்ற இலக்கிய ஆளுமைகள் எழுதிய மண்ணில் என் எழுத்துக்கள் வருவது எனக்கு ஜென்ம முக்தி!

ஜென்ம முக்தி என்பது எங்கள் வேதங்களும் இதிகாசங்களும் முன்னிறுத்தும் வாழ்வியல் கோட்பாடு! மறுபிறவியில் நம்பிக்கை கொண்ட கோட்பாடு அது! உயிர் என்னும் ஆன்மா என்றும் அழியாதது. ஒரு மானிட உயிரானது, இறந்ததும், மீண்டும் வேறொரு உயிராக உருவாகி மீண்டும் பிறக்கிறது. “புனரபி ஜனனம்.. புனரபி மரணம்..” என்று ஆதிசங்கரரின் ‘பஜகோவிந்தம்’ என்னும் எங்கள் பக்தி ஸ்லோகம் சொல்கிறது.

மனித ஆன்மா, ஒவ்வொரு பிறவியிலும் தான் செய்யும் தீய செயல்களுக்கேற்ப அதற்குரிய தண்டனைகளை, அடுத்தடுத்த பிறவிகளில் அனுபவித்து முடிக்கும்வரை, பிறவி தொடர்ந்து கொண்டேயிருக்கும். இதை கர்ம வினை என்று சொல்வார்கள். நற்செயல்களில் ஈடுபட்டால், ஜீவன் முக்தியடைந்து கடவுளிடம் சேர்ந்து விடும்.

உயர்ந்த மலைகளில் ஒளிந்தாலும், கடலின் ஆழத்தில் பதுங்கினாலும், பூர்வ ஜென்ம கர்மங்களிலிருந்து ஒரு மனிதன் தப்பிக்கவே முடியாது என்று சொல்கிறது எங்கள் கருட புராணம்.

இதை எங்கள் கி.மு 4 ஆம் நூற்றாண்டு தமிழ் அறிஞரான திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் என்னும் கவிதைப்பாடலில் “பிறவிப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார், இறைவன் அடிசேரா தார்.” என்று அவதானிக்கிறார்! ஒன்றரை அடிகள் மட்டுமே கொண்ட இந்த கவிதைப்பாடல்கள் ஜப்பானிய ஜென் கவிதைகளின் தோற்றம் கொண்டவை!

எனக்கு யதார்த்தத்தில், இது போன்ற கருத்துகளில் ஆர்வமில்லாவிட்டாலும் கூட, இவைகள் மீது பெரிதும் ஆர்வத்தை ஊட்டியது லத்தீன் அமெரிக்க மாந்திரீக யதார்த்தம்.

சாபம் பெற்ற Buendía family யில் பிறக்கும் குழந்தை பன்றியின் வாலுடன் பிறப்பதும், செத்துப்போன comala என்னும் நிலத்தில் பேய்கள் உலவுவதுமான மாந்திரீக யதார்த்தத்தின் தொப்புள் கொடி பந்தம் கொண்டது, எங்கள் நிலமும்தான்!

இந்த ஜீவன் முக்தி என்னும் தத்துவத் தேட்டத்தை ஒரு சுவாரஸ்யமான கதையாடலாக மாற்றி விளையாடிய போர்ஹேஸின் The other என்னும் சிறுகதை, என் குருதி ஓட்டத்தில் உடையாத ஒரு குமிழியாக மிதந்துகொண்டே இருக்கிறது. இந்தியத் தொன்மங்களிலும், தத்துவங்களிலும் போர்ஹேஸுக்கு பெரும் மயக்கம் இருக்கிறது என்பதை எனக்கு உணர்த்திய இக்கதை, நான் முதன்முதலாக வாசித்தது.

பாஸ்டன் வடக்கில் உள்ள கேம்பிரிட்ஜ் நகரின் சார்லஸ் நதிக்கரையின் பெஞ்சில் அமர்ந்தபடி 1969 ல் உள்ள ஒரு போர்ஹேஸும், ஜெனீவாவில் உள்ள ரோனே நகரத்தின் நதிக்கரையின் பெஞ்சில் அமர்ந்தபடி 1964 ல் உள்ள இன்னொரு போர்ஹேஸுமாக சந்தித்துக் கொள்ளும் சுவாரஸ்யமான காலவிளையாட்டை விளையாடிப் பார்க்கும் படைப்பு வெளி அது! labyrinth என்னும் புதிர்வழிப்பாதையின் மாயச் சுழல்வுகளுக்குள் நிகழ்த்தும் தத்துவ தரிசனம்!

கதையின் நாயகன், தன்னை மீண்டும் பார்க்கும் தத்துவம் கலந்த தன்மையை மிக அற்புதமான சுவாரஸ்யமான படைப்பாக நிகழ்த்தியிருப்பதைக் கண்டு பிரமித்துப் போனேன். ஒரு தத்துவத் தேட்டத்தை சுவாரஸ்யமான இலக்கியமாக மாற்றும் வல்லமை கொண்டவர் உலகளவில் போர்ஹேஸ் தவிர, வேறு யாருமில்லை!

Double என்னும் doppelgänger என்கிற ஒரு இலக்கியக் கோட்பாட்டு வகை, உலகம் முழுக்க பெரும் பிரபல்யம் பெற்றது. தன்னுடைய இன்னொரு உருவத்தை, Double -ஐ நேருக்கு நேராக சந்தித்துக் கொள்ளும் சுவாரஸ்யம் மிகுந்த ஒரு கலை இலக்கியக் கோட்பாட்டு உத்திமுறை. ராபர்ட் லூயி ஸ்டீவன்சன் எழுதிய Dr. Jekyll and Mr. Hyde நாவல் இந்த வகைக் கதையாடல்களில் பிரசித்தம் பெற்றது. தலை சிறந்த மாஸ்டர்களின் பெரும்பாலான கவிதைகளில் இந்த உத்தியைப் பயன்படுத்தியிருப்பார்கள். கதைகளில் தாஸ்த்யேவ்ஸ்கியிலிருந்து நபக்கோவ் வரை பலரும் இந்த வகையைத் தொட்டிருக்கிறார்கள்.

இந்த Double குறித்து இன்னொன்றும் சொல்வார்கள்: நீங்கள் உங்களது Double ஐ சந்தித்து விட்டால் உங்களது அந்திமக்காலம் வந்துவிட்டது என்று ஒரு நம்பிக்கை உண்டு! இந்த ஐரோப்பியப் பார்வையை முன்வைத்தே பெரும்பாலான விமர்சகர்கள் இந்தக்கதை குறித்து எழுதியிருக்கிறார்கள். இது முற்றிலும் தவறான பார்வை!

இந்த ஐரோப்பியப் பார்வை கொண்ட doppelgänger கதைப்பார்வை அல்ல போர்ஹேஸுடையது, மகத்தான இந்திய தத்துவதரிசனம்! அவர் இந்தக் கதைக்கு The Double என்று தலைப்பு கொடுக்கவில்லை, மாறாக, The other என்று கொடுத்திருக்கிறார்.

இதை புரிந்து கொள்ள வேண்டுமெனில், அவருடைய இன்னொரு கதையான The Secret Miracle -க்குள் நுழைய வேண்டும்.

கவிஞன் ஒருவனுக்கு தேசத்துரோகக் குற்றச்சாட்டு சுமத்தி மரணதண்டனை கொடுத்து விடுகிறார்கள். கவிஞனின் இறுதி ஆசை, தான் வெகுநாட்களாக எழுதிக் கொண்டிருக்கும் காவியத்தை எழுதி முடித்துவிட்டால் போதுமானது. ஆனால் அதற்கு முன்பே அவனுக்குத் தண்டனை முடிவாகிறது. இன்னமும் எழுதி முடிக்கப்படாத தனது காவியத்தை எழுதி முடிக்க வேண்டுமென்ற தகிப்புணர்வுகளுடன் கொலைக் களத்தில் நிற்கிறான் கலைஞன்.

இநத யதார்த்த வெளியைச் சுழற்றிப் போடுகிறான் போர்ஹேஸ். கவிஞன் கொலைக்களத்தில் மண்டியிட்டு நிற்க, அவனை நோக்கி துப்பாக்கி நீட்டப்படுகிறது. இன்னும் தனது காவியத்தை எழுதி முடிக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் ஆத்மார்த்தமாகக் கடவுளை வேண்டுகிறான். துப்பாக்கியிலிருந்து அவனை நோக்கிச் சீறிப் பாய்ந்து வரும் தோட்டா சமைந்து போகிறது ஒருகணம். பிரபஞ்சமெங்கும் காலம் சமைந்துபோக கலைஞனுக்கான காலவெளி தீராத பக்கங்களை அவன் முன்னே விரிக்கிறது. அந்த ஒருகணம் காலங்களற்று விரிகிறது. அந்த நீண்ட காலங்களற்ற காலத்தில் தனது உன்னதமான காவியத்தை எழுதி முடிக்கிறான் கவிஞன்.

இது ஒரு மாபெரும் இந்திய தத்துவ தரிசனம்!

இந்திய புராணிகமான மகாபாரதத்தில் வரும் “பகவத் கீதை” எனும் தத்துவ உரையாடல் நிகழ்வை போர்ஹேஸின் கதை தரிசனப்படுத்துகிறது.

உலக இலக்கியங்களில் சித்தரிக்கப்படும் புகழ்பெற்ற யுத்த களங்களுக்கெல்லாம் ஈடுஇணையற்ற யுத்தகளமாக விளங்குவது மகாபாரதத்தின் புகழ்பெற்ற “குருட்சேத்திர” யுத்த களம். காரணம், வெறுமனே மனிதஉயிர் குடிக்கும் போர்க்களமாக மட்டுமே இல்லாமல், அறம், வஞ்சகம், சூழ்ச்சி, நியாயம், நீதி, பந்தபாசம், துரோகம், கடமை, மண்ணாசை, பெண்ணாசை.. எனப் பல்வேறு பார்வைகளும், தத்துவ தரிசனங்களும் கட்டமைக்கப்பட்டிருக்கும் களம்.

குருட்சேத்திர யுத்தகளத்தில் பாண்டவ சேனை, கௌரவ சேனை ஆகிய இருதரப்பினரும் ஆள்படை அக்குரோணி சேனைகளாக அணிவகுத்து போருக்கான ஆயத்தத்துடன் நிற்கிறார்கள். அப்பொழுது பாண்டவ சேனையின் நாயகனான அர்ச்சுனன், “இத்தனை மனித உயிர்களைக் கொல்லக் கூடிய இந்த யுத்தம் வேண்டாம்..” என்று ஆயுதங்களை வீசியெறிந்து விட்டு தன் தேரை விட்டு இறங்குகிறான். ஆனால், தேரோட்டியாய் இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணன் அவனைத் தடுத்தாட்கொள்கிறார். நல்லவை, தீயவை என்றால் என்ன, தீய சக்திகள் தலை தூக்கும்போது, அவைகளை அழிப்பதுதான் தர்மம் என்ற தத்துவத்தை அர்ச்சுனனுக்கு உபதேசிக்கிறார். இந்துமதத்தில் மிகவும் புகழ்பெற்ற தத்துவமான “பகவத் கீதை” என்னும் இந்த கிருஷ்ண உபதேசம் காலங்களற்று பல மணி நேரங்கள் நீடிக்கிறது.

நுட்பமாகக் கவனியுங்கள்: இருதரப்பிலும் போருக்கு ஆயத்தமாக இருக்கும் பரபரப்பான நொடிப் பொழுதுகளில், பலமணிநேரங்கள் உபதேசிக்கும் “பகவத் கீதை” எவ்வாறு சாத்தியம்?

இது ஒரு அபூர்வமான தத்துவ தரிசனம்! ஒரு நல்ல விஷயம் செய்யும் பொழுது காலமும் கை கொடுக்கும் என்கிற இந்தியத் தத்துவ தரிசனம்!

காலத்தை Magical realism ஆக இந்தியத் தத்துவ மரபு மாற்றியது என்றால், பௌத்தத் தத்துவ தரிசன மரபு, காலத்தை, metaphor ஆக மாற்றுகிறது.

தாழ்த்தப்பட்ட குலத்தவனான அங்குலி மாலா வுக்கு வேத சாஸ்திரங்கள் கற்றுக் கொள்ள ஆசை. ஆனால், அவன் தாழ்த்தப்பட்டவன் என்கிற காரணத்தினால், வேத சாஸ்திரங்கள் கற்றுத்தர மறுக்கிறார் முனிவர். மனம் வெறுத்துப் போய் பெரும் கோபத்துடன், காட்டுக்குப் போகிறான். அந்த வழியாக வரும் முனிவர்களைக் கொன்று அவர்களது சுண்டு விரல்களை வெட்டி மாலையாக அணிந்து கொண்டு திரிகிறான்.

ஒருநாள் அந்தக் காட்டு வழியாக கௌதமபுத்தர் வருகிறார். அவரைக் கண்டதும் ஆவேசத்துடன் பாய்ந்து கொல்லத் துரத்துகிறான் அங்குலி மாலா.

இந்த இடத்தில் கால விளையாட்டைக் கவனியுங்கள்: புத்தர் நின்ற இடத்திலேயே நிற்கிறார். அங்குலி மாலா புத்தரைப் பிடிக்க ஓடிக் கொண்டேயிருக்கிறான். புத்தரின் காலநிலை சமைந்து நிற்கிறது. அங்குலி மாலாவின் காலமோ இயங்கிக் கொண்டேயிருக்கிறது. ஓடி ஓடிக் களைத்துப் போனவனாய், “சமணா, ஓடாதே, நில்..” என்கிறான் அங்குலிமாலா.

“நான் ஓடவில்லை, நீதான் ஓடிக்கொண்டிருக்கிறாய்.. உன் ஓட்டத்தை நிறுத்து” என்கிறார் புத்தர்.

அங்குலி மாலா தனது ஓட்டத்தை நிறுத்த, காலவெளியின் எல்லையற்ற பிரக்ஞை அவனுக்குள் ஊடுருவுகிறது.

இந்த இடத்தில் Back to the Future என்னும் ஒரு ஹாலிவுட் விஞ்ஞானப் புனைவு திரைப்படத்தில் வரும் ஒரு நிகழ்வை இணைத்துப் பார்க்கலாம்.

1985 இல் வசிக்கும் படத்தின் கதாநாயகனான ஆன Marty McFly, காலயந்திரத்தில் ஏறி 1955 க்கு வருகிறான். அங்கு தனது அப்பா அம்மா இருவரும் திருமணமாகாமல், மாணவப் பருவத்தில் இருக்கிறார்கள். அப்பா George McFly, அம்மா Lorraine Baines- ன் பின்னால் காதலுடன் சுற்றுகிறார். George ஐ உதாசீனம் செய்தபடி இருக்கிறார், Lorraine.

அந்தக் கட்டத்தில் அங்குவரும் Marty McFly ஐ பார்த்த Lorraine, அவன் மீது காதல் கொள்கிறாள். பதறிப் போகிறான் Marty. அம்மா தன்னைக் காதலித்தால் காலநிலை பிசகிவிடுமே.. Lorraine, George ஐ காதலித்து திருமணம் செய்தால்தான் Martyயே பிறக்கமுடியும். மிகுந்த முயற்சி எடுத்து, மிகவும் அல்லல் பட்டு தன் அப்பாவை, அம்மா விரும்பிக் காதலிக்கக் கூடிய தருணங்களை உருவாக்குகிறான் Marty!

இது எப்படி சாத்தியம்? இறந்த காலத்தில் என்ன நிகழ்ந்ததோ, அதுதானே மீண்டும் அதே காலத்தில் நடக்க வேணடும்? இயக்குனர் Robert Zemeckis கதையில் சுவாரஸ்யம் கருதி பெரும் பிசகு செய்துவிட்டார்.. என்று தமிழின் மாபெரும் கவிஞரான பிரமிளிடம் விமர்சனம் வைத்தேன்.

“உன் பார்வை முழுக்க இந்திய தத்துவ மரபு சார்ந்தது. இது யூதத் தத்துவ மரபு. இறந்த காலத்தில் என்ன நிகழ்ந்ததோ, அது மீண்டும் அதே காலத்தில் அப்படியேதான் நடக்க வேணடும் என்பதில்லை. மாறாகவும் நடக்கலாம் என்ற யூத மரபு சார்ந்த பார்வை அது” என்று அவர் விரிவாக விளக்கினார்.

இப்படியான பல்வேறு மரபுகளின் பார்வைகளிலிருந்துதான் போர்ஹேஸின் கதையை வந்தடைய முடியும்.

இன்னுமொரு உதாரணமாக, எங்கள் நாட்டுப்புறக்கதை ஒன்று இந்த கதையின் உள்ளடுக்குகளை மிக அற்புதமாகத் திறந்து காட்டுகிறது.

இந்திரன் என்னும் வேதகாலத்து மன்னன் ஒருவன், தான் ஜென்ம முக்தி அடைய, சதா கடவுள் நாமத்தை ஜபித்தபடியும், ஆலயங்களை புனரமைத்தபடியும் இருந்து வந்தான். குடிமக்களின் அன்றாட வாழ்வியல் குறித்த திட்டங்களில் கவனம் செலுத்தாததால் நாட்டில் கொலைகொள்ளைகள் அதிகமாகின. இதனால், திருடர்களை அடக்கவேண்டி மாறுவேடத்தில் நகர்வலம் வந்தான்.

ஓரிடத்தில், ஒரு இளைஞன் திருடர்களோடு வாள்போர் புரிந்து கொண்டிருந்தான். மன்னன், ஆர்வத்துடன் பாய்ந்து சென்று அந்த காட்சியைக் கண்டான். கையில் நீண்டவாட்களுடன் இருந்த 6 திருடர்களை அந்த இளைஞன் ஒருவனே தனது வாளால் மடக்கிக் கொண்டிருந்தான். அவன் வாள் வீச்சு பிரமிப்பாக இருந்தது. ஆனால், ஒரு வினோதமான கொடுமை என்னவென்றால், அந்த இளைஞன் உடல் முழுக்க பெரிய பெரிய இரும்புக் குண்டுகள் தொங்கிக் கொண்டிருந்தன. தனது வாள்வீச்சுக்கு அவை பெரிதும் இடைஞ்சல் செய்தபோதிலும் வாள் வீசிக் கொண்டிருந்தான்.

ஒரு கட்டத்தில் அவனைத் தாக்கிவிட்டுத் திருடர்கள் தப்பித்து ஓடிவிட்டனர். மன்னன் அந்த இளைஞனை பாய்ந்து சென்று தூக்கினான். “அடி பலமாகப் பட்டுவிட்டதா?” என்று கரிசனமாக வினவியவாறு, இரும்புக் குண்டுகள் தொங்கும் உடலை நீவிக்கொண்டே, “இந்த தேவையற்ற இரும்புக் குண்டுகளை முதலில் தூக்கியெறி.. இவைதான் உன் தோல்விக்கு காரணம்..” என்று வாஸ்தவமாகப் பேசினான்.

“முதலில் நீ சுமந்திருக்கும் குண்டுகளைத் தூக்கியெறி.. உன்னை நீயே அறிந்து கொள்வதுதான் ஜீவன் முக்தி” என்றான் அந்த இளைஞன்.

அப்பொழுதுதான் அந்த இளைஞனை முழுமையாகப் பார்த்தான் மன்னன். தான் இளமையான வயதில் இருந்தது போன்ற முகஜாடையுடன் அந்த இளைஞன் இருந்தான்.

திகைப்படைந்த மன்னன், “இளைஞனே நீ யார்?” என்று விசாரித்தபோது, தான், “இந்த நாட்டின் மன்னன் இந்திரன்” என்று அந்த இளைஞன் பதில் சொன்னான்.

இரு இந்திரன்களும் நின்றிருந்த இடத்தில், நிச்சலனமாய் அவர்களுக்கு முன்னால் இருந்த கோயில் குளத்தில், ஒரு இந்திரன் தனது உடலில் சுமந்து கொண்டிருந்த குண்டுகளை விட்டெறிந்தபோது அது கலங்கிய நீரில் பாய்ந்து சுழன்று எங்கோ ஆழத்தில் மறைந்து நீர் வட்டங்களை ஏற்படுத்திய சலனங்களும்,

இரு போர்ஹேஸ்களும் அமர்ந்திருந்த இடத்தில், நிச்சலனமாய் தங்களுக்கு முன்னால் இருந்த நீர்ப்படுகையில், ஒரு போர்ஹேஸ் நாணயத்தை வீசியெறிந்தபோது அது H2o வில் பட்டு எம்பி எம்பி காலப்படுகையில் ஏற்படுத்திய சலனங்களும், தத்துவத் தேடல்களில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

இந்த கதைத்துண்டு ஆதியிலே வேத சாஸ்திரங்களில் இருந்திருக்க வேண்டும், பின்னாளில், சனாதனிகள் வெட்டியெறிந்துவிட்டார்கள் என்று வேதங்களில் முக்கியத்துவம் பெற்று விளங்கும் இந்திரன் என்னும் மன்னனின் பெயரை வைத்து யூகிக்க வைக்கிறது. நாட்டுப்புறக் கதை மரபு சார்ந்து நிகழும் இதுபோன்ற தத்துவப் பார்வைகள் குறித்து ஒரு நீண்ட ஆய்வு செய்யும் போது இன்னும் பல பார்வைகள் தரிசனமாகும்.

இப்படி எங்கள் மரபில் மறைந்துபோன, மறைக்கப்பட்ட ஒரு அற்புதமான தத்துவத் தேட்டத்தை தேடிக் கண்டுபிடிக்கும் வழியை அமைத்துக் கொடுத்தவர் போர்ஹேஸ்!

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தத்துவப் பார்வையை வந்தடைந்த இத்தருணங்களில்தான், நான் இன்னொரு கௌதம சித்தார்த்தனைச் சந்திக்க நேர்ந்தது.

இந்தக்கட்டுரையில் ஜீவன் முக்தி பற்றிய பல்வேறு மதப்பார்வைகளை வைத்திருக்கிறாய். சரி, ஆனால், எங்கே சமூகம் சார்ந்த பார்வை? சமூக வாழ்வியலில் (social being) ஜீவன் முக்தி வகிக்கும் Role என்ன? யதார்த்த மனித வாழ்வியலில் அவனுக்கான உற்பத்திப்பொருள் அந்நியமாகிறது. வாழ்வு அந்நியமாகிறது, அவனுக்கு அவனே அந்நியமாகிறான்.. இக்கணத்தில் அவன் எதிர்பார்க்கும் ஜீவன் முக்தி என்பது என்ன?

ஜீவன் முக்தி என்பது, ஒரு தத்துவமாக, தொன்மமாக, லட்சியமாக, வாழ்வியல் கனவாக, கலைஇலக்கியக் கோட்பாடாக வரித்து வைக்கும் மதப்பார்வைகளைத் தாண்டி,

சமூகப்பார்வையில், ஒரு எளிய மானிடன் ஏங்கும் ஜீவன் முக்தி என்பது இம்மையில் கிடைக்கும் மானுடவிடுதலையா? அல்லது மறுமையில் கிடைக்கும் ஆன்ம விடுதலையா!

என்று பல்வேறு கேள்விகளை முன்வைத்து விரிவாகப் பேச ஆரம்பித்தான் அந்த இன்னொருவன்.

இந்தப் பக்கங்களை எழுதியவன் நானா என்னுடைய Other ஆ என்று தெரியவில்லை.

*********************

தமிழ் வாசகருக்கான குறிப்புகள் :

1. Axolotl என்பது மெக்ஸிக origin சார்ந்த ஒருவகை மீன், புகழ் பெற்ற லத்தின் அமெரிக்க எழுத்தாளர் ஜுலியோ கொர்த்தஸார் Axolotl என்ற தலைப்பில் ஒரு கதை எழுதியுள்ளார்.
அயிரை என்பது தமிழ் மரபு சார்ந்த ஒரு மீன் வகை, தமிழ் மரபிலிருந்து லத்தின் அமெரிக்க மரபுக்குத் தாவும் நீச்சல் என்னும் பதத்தில், பத்தியின் தலைப்பை அமைத்துள்ளேன்.

2. Buendía family : கேப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் நாவலான one hundred years of solitute – ல் வரும், பிரதான குடும்பத்தின் பெயர். இந்தக் குடும்பத்தில் பிறக்கும் ஒரு குழந்தை, பன்றி வாலுடன் பிறக்கும்.

3. comala : உலகப் புகழ்பெற்ற லத்தின் அமெரிக்க நாவலான, யுவான் ருல்ஃபோ வின்  “பெட்ரோ பராமோ” வில் வரும், பேய்கள் வசிக்கும் செத்துப் போன நகரம்.

4. உயிர் என்னும் ஆன்மா என்றும் அழியாதது : மேலை நாட்டினர் உயிர் என்பதையும் ஆன்மா என்பதையும் தனித்தனியாக பார்ப்பவர்கள். ஆகவே, அவர்களுக்கு புரியும் விதத்தில் தெளிவுபடுத்தியுள்ளேன்.

5. “இந்தப் பக்கங்களை எழுதியவன் நானா என்னுடைய Other ஆ என்று தெரியவில்லை” – இந்த வரி போர்ஹேஸ் எழுதிய The other கதையின் கடைசி வரி.

6. நான் இன்னொரு கௌதம சித்தார்த்தனை சந்திப்பதை இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம். கட்டுரை நீண்டுவிடும்  என்பதும் முதல் மாதத்திலேயே ஸ்பானிஷ் வாசகர்களை போரடிக்க வைத்து, பயமுறுத்தி ஓடவைக்கக்கூடாது  என்பதை நினைவில் கொண்டு சுருக்கிவிட்டேன்.

ஆனால், இரண்டாவது பதிப்பாக வெளிவந்த என் முதல் சிறுகதைத் தொகுப்பான “மூன்றாவது சிருஷ்டி” நூலுக்காக எழுதப்பட்ட முன்னுரை – “கௌதம சித்தார்த்தன் என்கிற மற்றவனின் கதை” – இந்த அம்சத்தை மையமாகக் கொண்டது என்பதை இங்கு குறிப்பிடலாம்.

(ஸ்பானிஷ் மொழியில் எழுதிக் கொண்டிருக்கும் பத்தியின் முதல் அத்தியாயம் – பிப்ரவரி – 2019)

**********************************

Título de la columna: De pez Locha a Axolotl

Capítulo 1 Título: Gouthama y yo

por Gouthama Siddarthan

¡Queridos lectores latinoamericanos!

Tengo una gran y rara oportunidad que nadie en mi región ha aprovechado. Cuando fue el boom de la literatura latinoamericana, la cual rompió con la monótona tendencia literaria global que cambió su curso hacia el suelo nativo de los escritores sudamericanos, y que también estaba haciendo olas en el paisaje tamil, me convertí en un pez locha y me dí un chapuzón en las caudalosas, arremolinadas y mágicas corrientes.

¡Ahora, de pez locha a Axolotl!

En nombre del idioma tamil de más de 2.000 años de edad, expreso mi más sincero agradecimiento al editor y al equipo editorial de la revista Círculo de Poesía por la valiosa oportunidad que me ha brindado de hablar con los lectores del país todos los meses, que tiene una cultura antediluviana, que progresó desde el período del boom hasta el post-boom y que tiene una sensibilidad artística única.
Debo compartir con ustedes una perspectiva totalmente nueva y fresca, desarrollada a partir de la ilimitada corriente literaria global, presentando la relación entre nuestra antigua cultura tamil, el arte, la literatura, el progreso lingüístico y los valores de la vida, y el suelo latinoamericano igualmente grande, dotado de una pasado antiguo.

Dedico esta columna a Borges, mi modelo a seguir y mi inspiración, y también a otros titanes literarios, quienes en España crearon y moldearon una mentalidad magnífica en las generaciones más jóvenes para reconocer las cualidades literarias de los escritos en otros idiomas también.

En la década de los ’90, cuando Internet y las redes sociales estaban más allá de la imaginación humana, solía viajar a dondequiera que se apilaban los libros latinoamericanos, con paquetes de comida en mis manos. Cuando recibí un libro de Borges de mi amigo T Kannan en Srirangam y lo revisaba atentamente, apoyado contra un pilar en las instalaciones del templo, los recintos de repente parecían haberse convertido en un laberinto borgiano.

¡Estimado lector latinoamericano! ¡Puedo compartir historias como ésta solo contigo!

Durante toda mi vida estuve imbuido del espíritu de la literatura latinoamericana. Es una salvación de mi nacimiento (llamada ‘Jeevan mukti’ en la literatura espiritual de la India) que mis escritos se publiquen en la región poblada por gigantes literarios que cambiaron el tono y el tenor de la literatura global, como Jorge Luis Borges, Juan Rulfo. Carlos Fuentes, Pablo Neruda, Julio Cortázar, Gabriel García Márquez, Mario Vargas Llosa, Octavio Paz y Roberto Bolaño … etc.

El ‘Jeevan mukti’ es una perspectiva de vida presentada por nuestros santos Vedas y epopeyas espirituales llamadas ‘Puranas’, que tiene una fe inmensa en el próximo nacimiento. Predica que el suelo es inmortal; Un alma humana, después de perder su forma física, toma otro nacimiento. “Punarabi jananam Punarabi maranam” (Nacido de nuevo, muere de nuevo), así es como un sloka en el “Bhaja Govindam” del sabio hindú Adi Shankara.

El ciclo de nacimientos continúa hasta que el alma humana termina con el castigo debido a los pecados cometidos en cada nacimiento. Esto es lo que se llama “karma”. Cuando el alma se purga de todos los pecados mediante acciones buenas y elevadas, se convierte en uno con el Todopoderoso y la unión se describe como “mukthi”.

Según nuestro “Garuda Purana”, un hombre no puede escapar a las consecuencias de sus antiguos karmas, incluso si se esconde en las profundidades de los océanos o en las cavidades de las grandes montañas.

Eso es lo que predica nuestro sabio tamil bardo Thiruvalluvar del siglo IV d.C. en su renombrada obra Thiruk kural. Él observa: “Solo aquellos capaces de cruzar el gran océano del nacimiento pueden alcanzar los pies de Dios”. Los pareados en la antigua obra tamil se asemejan a la nítida y estética poesía Zen.

Aunque no estoy, en realidad, inclinado hacia todo esto, es el realismo mágico latinoamericano el que me llevó a esas ideas metafísicas.

Nuestro paisaje nativo tiene un cordón umbilical ligado al realismo mágico, mundo poblado por un niño nacido con una cola de cerdo en la familia de Buendia y fantasmas que vagan por la tierra muerta de Comala.

La primera historia que leí del tesoro de Borges, “El Otro”, todavía está burbujeando en mi sangre, teniendo como resultado una narrativa interesante en la que el leitmotiv indio de “Jeevan mukti” (salvación del alma) ha cambiado. Es esta historia, que se convirtió en una especie de revelación, para mí que Borges estaba bastante fascinado con la filosofía india.

La historia es un espacio creativo del juego del tiempo y una visión filosófica que se desarrolla en el vórtice mágico del laberinto, que gira en torno a una reunión entre un Borges sentado en un banco a orillas del río Charles en Cambridge, al norte de Boston, en 1969, y otro Borges. sentado en un banco a orillas del río Ronne, en Ginebra, en 1964.

Me sorprendió la forma en que el material filosófico del protagonista que se ve de nuevo a sí mismo se ha convertido en una obra de arte curiosamente maravillosa. Ninguno iguala a Borges en el arte de transformar una búsqueda filosófica en una maravillosa obra literaria.

La teoría literaria del doppelgänger es de renombre mundial; es una técnica artística muy apreciada que se usa de manera interesante para sacar el aspecto de la persona misma. En El Dr. Jekyll y Mr. Hyde, Robert Stevenson toma la idea del otro diabólico. Esta técnica se puede ver utilizada en la poesía de grandes artesanos. En lo que se refiere a la ficción, grandes maestros desde Dostoievski a Nabokov la han utilizado con maestría.

Hay otra cosa que se suele decir acerca de esta teoría del “doble”. Existe la creencia generalizada de que si te encuentras con tu doble, eso significa que te estás acercando a tu ocaso. La mayoría de los críticos han escrito mucho, basados ​​en esta perspectiva europea. Pero desafortunadamente, esto es totalmente erróneo.

La perspectiva de Borges en este cuento no es la variedad habitual de doppelgänger. La suya es una perspectiva similar a la visión filosófica india. Él no le ha dado el título ‘El Doble’ a su historia; en cambio, ha subtitulado su historia como “El Otro”.

Para entender su punto de vista, en este sentido, debemos entrar en su otra historia, ‘El milagro secreto’. La historia es la siguiente:

Un poeta es condenado a muerte, acusado de sedición. Su último deseo es completar la epopeya que lleva escribiendo. Producir una epopeya completa es su sueño. Pero, desafortunadamente, él debe dar su vida antes de que su sueño se haga realidad. Los sentimientos sobre el deseo no cumplido que enfurece por dentro, él está esperando la ejecución de la sentencia de muerte.

Borges se sumerge en esta escena realista.

El poeta se arrodilla ante el arma que sobresale, rezando con alma y tristeza a Dios, no, no por su vida, sino por su epopeya inacabada. Una bala que sale del arma se congela en el aire a mitad del recorrido. Por un momento, el tiempo y el espacio también se congelan. El espacio-tiempo se despliega ante el poeta, extendiendo páginas tras páginas. Ese momento se expande sin tiempo. En ese tiempo atemporal, se recupera y termina con éxito su incompleta y excelente épica.

Esta es una gran visión filosófica india.

La historia de Borges muestra visiones del discurso filosófico del “Bhagavad Gita” en la epopeya mitológica india “Mahabharata”.

El campo de batalla “Kurukshetra” en ‘Mahabharata’, no tiene parangón con los campos de batalla ampliamente reconocidos que se describen en la literatura mundial, porque no es un campo de batalla habitual lleno de sangre, sino que está lleno de perspectivas filosóficas sobre ética, traición, justicia, afectos humanos, deberes, locuras por los propietarios de la tierra, lujuria etc.

En el campo de batalla de Kurukshetra, los ejércitos de Pandavas y Gauravas están parados frente a frente, divididos en formaciones conocidas como “akshauhinis”, listas para una batalla campal. (Un ‘akshauhini’ – palabra sánscrita – significa aproximadamente cinco guerreros lakh, que consisten en carros, elefantes, caballería e infantería). Arjun, héroe de los Pandavas, se siente desanimado ante la posibilidad de matar a innumerables seres humanos, deja caer sus armas y se baja del carro. Pero el conductor del carro Sri Krishna lo bloquea y lo toma bajo su control. El consejo de Sri Krishna comienza; reflexiona largamente sobre lo que es bueno y lo que es malo, y le enseña al guerrero no dispuesto la filosofía que propugna el dharma de destruir al mal que levanta su cabeza fea. Esta consejería de Sri Krishna, conocida como “Bhagavad Gita”, se ha llevado a cabo durante horas y horas sin problemas.

Mira esto con ojos perceptivos.

En un momento en que dos lados se ponen cada vez más tensos, preparándose para librar una batalla, ¿cómo es posible que un discurso filosófico como Gita tenga lugar durante horas, que parecen siglos, en el frente de batalla?

Aquí hay una rara visión filosófica. Es una perspectiva India en la cual tácitamente propone que, cuando las cosas buenas están sucediendo, incluso el tiempo puede ser útil.

La tradición filosófica india ha cambiado el tiempo al realismo mágico, mientras que la tradición budista de la filosofía lo ha transformado en una metáfora.

Según la tradición budista, Aṅgulimāla, proveniente de una comunidad oprimida, quiere aprender los Vedas. Pero un sabio se niega a obligarlo, citando su nacimiento, en una casta baja. Aṅgulimāla, molesta y molesta, sale a un bosque y se convierte en un bandolero, cortando los dedos de todos los sabios que pasan y tejiéndolos a todos en una guirnalda que lleva alrededor de su cuello.

Un día, Gouthama Buda pasa por el camino. Aṅgulimāla, al verlo, se abalanza sobre él para agredirlo y matarlo.

Aquí es un juego de tiempo sutil digno de un reloj preciso. Paradójicamente, Buda está parado donde está, estacionario y sólido, y es el bandolero del bosque quien sigue corriendo para agarrarse a Buda. Mientras que el tiempo de Buda está congelado, el de Aṅgulimāla está funcionando a la perfección. Cansados ​​de correr y perseguir, el bandido grita: “¡Oh! Jain, no corras, detente”.

Pero Buda dice: “Será mejor que dejes de correr porque eres tú el que corre, no yo”.

Cuando Aṅgulimāla se detiene, la conciencia del espacio-tiempo ilimitado sigue creciendo en su interior.

En esta coyuntura, podemos relatar una escena de la película, ‘Regreso al futuro’.

El protagonista principal de la película, Marty McFly, que vive en 1985 aborda la máquina del tiempo y viaja a 1955. Allí, por casualidad, ve a sus padres viviendo sus días de estudiantes, ambos solteros. Su padre, George McFly, va tras su madre Lorraine Baianes, cortejándola con fervor. Ella simplemente lo ignora.

Pero al ver a Marty McFly (el hijo), a Lorraine, le gusta. Tiembla de miedo de que si el amor se hace realidad, el curso del tiempo se descarrilará. Solo si Lorraine ama y se casa con George, el nacimiento de Marty será posible. Entonces, con esfuerzos arduos, crea momentos oportunos para que ambos se amen y se casen.

Mientras miraba la película, me preguntaba cómo era posible. ¿No es natural que los incidentes pasados ​​vuelvan a ocurrir como lo hicieron en el pasado? Para que el proceso fuera bastante interesante, el director Robert Zemeckis debió haber cometido un error, pensé.

El gran poeta Tamil Pramil fue quien me explicó, y me dijo: “Tu perspectiva está totalmente en consonancia con la tradición filosófica india. Pero lo que se muestra en la película es puramente una tradición judía. Lo que sucedió en el pasado no necesita volver a suceder como sucedió. Puede suceder lo contrario. Es la escuela de pensamiento tradicional judío “.

Solo después de nadar junto con varias corrientes de perspectivas tradicionales, finalmente podemos llegar a la historia de Borges.

Como otro ejemplo más, un cuento popular que prevalece en nuestra región abre varias capas contenidas en él.

Un rey de la era védica, conocido como Indran, siempre recitaba el nombre de Dios y renovaba los templos después de los templos para lograr lo que se llama “Jeevan mukti” en la tradición filosófica india. Como no podía concentrarse en la administración cívica, los robos y los asesinatos estaban en alza. Así que, una noche, emprendió un recorrido por la ciudad, totalmente disfrazado.

En un lugar, vio a un joven peleando con un grupo de ladrones. El rey miraba el espectáculo con mucha curiosidad. Sosteniendo una sola espada en la mano, el joven estaba dominando lentamente a los ladrones. La forma en que agita y hace girar la espada fue inspirador e impresionante. Pero lo que era particularmente cruel fue que los jóvenes seguían luchando incesantemente, a pesar de que grandes cáscaras de hierro que colgaban de sus extremidades causaban un inconveniente.

En un momento dado, los ladrones huyeron, dejando al joven herido. El rey se acerca a él y lo levanta amablemente, y le pregunta: “¿Estás gravemente herido?”, Acariciando las cáscaras de hierro, dijo con naturalidad: “Primero, tiras estas cáscaras de hierro. Son estas cosas las que te han llevado a la derrota “.

“Lanza tus caracoles de hierro que te encadenan. `Jeevan mukti` es conocerse a sí mismo “.

Sólo entonces el rey miró a los jóvenes de pies a cabeza. El joven parecía la versión juvenil del rey, con la misma cara y las mismas características.

Sorprendido, el rey le preguntó: “¡Oh, joven! ¿Quién eres tú?”

El joven respondió: “Soy Indran, el rey de este país”.

En el lugar donde los dos indios estaban de pie, había un tanque del templo mágicamente inmóvil; uno de ellos arrojó al agua las cáscaras de hierro que llevaba sobre su persona. Estaso cayeron al aguas arremolinadas y desaparecieron en las profundidades del cuerpo del agua, creando ondas detrás.

Al mismo tiempo, en el lugar donde se reunieron los dos borges, uno de ellos arrojó una moneda a un silencioso cuerpo de agua. La moneda se rompió y saltó en el H2o, creando ondas en la cama del tiempo.

Las ondas creadas en estos dos episodios metafísicos son bastante esenciales para la persecución de búsquedas filosóficas.

El episodio de Indran debe haber sido parte integral de la literatura védica antigua. Al mencionar el nombre del rey, “Indran”, en la tradición védica, se puede suponer que más tarde, este episodio debe haber sido una versión de los sastras sagrados por algunos estudiosos. Si se lleva a cabo una investigación sobre las perspectivas filosóficas basadas en la tradición del folklore, se pueden descubrir muchas teorías y perspectivas.

Hablando personalmente, es Borges quien me puso en el camino de una hermosa visión filosófica oculta y hecha para ocultarse en nuestra antigua tradición.

En el momento en que llegué a esta histórica visión filosófica, me encontré con otro Gouthama Siddarthan dentro.

“Está bien que presentes varias perspectivas religiosas sobre el ‘Jeevan mukti’. ¿Pero dónde está la perspectiva social? ¿Cuál es el papel de ‘Jeevan mukti’ en el ser social? En esta dura y cruda realidad de la vida humana, sus productos se alienan. La vida se ha convertido en una de alienación. El hombre se aliena de sí mismo. En esta coyuntura, ¿qué es el “Jeevan mukti” que está esperando?

“Jeevan mukti” es una filosofía, un mito, un ideal, un sueño de vida y un principio del arte y la literatura. Pero, más allá de la perspectiva religiosa, ¿significa ‘Jeevan mukti’ la liberación humana en este nacimiento, que un simple ser humano ha estado anhelando? ¿O significa que la liberación del alma es posible solo en el próximo nacimiento? ”

Esa otra persona comienza a hablar planteando varias preguntas.

No sé quién ha escrito todas estas páginas: ¿yo o el otro?

Traducción del inglés al español: Enrique Solinas.

***********************
1. El pez locha, también llamado pez payaso, es un pez de rio. Pero también se le dice pez locha a la brótola, que es de mar. Aquí el autor hace alusión al pez de rio, ya que de esta manera relata cómo de su pueblo en la India hoy escribe para los lectores mexicanos y latinoamericanos, es decir, se transforma en Axolotl.

***********************************

Column Title : From loach to Axolotl

1st chapter Title : Gouthama and I

Gouthama Siddarthan

Dear Latin American readers!

I have got a great and rare opportunity that none in my region has grabbed. When there was a boom in the Latin American literature, which set the monotonous global literary trend changing its course towards the native soil of the South American writers, and which was making waves on the Tamil landscape too, I changed into a loach fish and took a dip into the magically swelling and swirling currents.

Now from loach fish to Axolotl!

On behalf of the over 2,000-year-old Tamil language, I convey my heart-felt thanks to the editor and editorial team of Círculo de Poesía magazine for the precious opportunity he has given me to speak to the readers of the country, every month, which has an antediluvian culture, progressed from the period of boom to the post-boom era and has a unique artistic sensibility.

I am to share with you a totally new and fresh perspective evolved out of the boundless global literary mainstream, putting forward the relation between our ancient Tamil culture, art, literature, linguistic progress and life values and the equally great Latin American soil endowed with a hoary past.

I dedicate this column to Borges, my role model and my inspiration, and to other literary titans too, who, in the Spanish land, created and moulded a magnificent mindset in the younger generation to recognize the literary qualities of writings in other languages too.

In the 1990s when internet and social media were beyond human imagination, I used to travel wherever Latin American books were stacked, food packets bundled in my hands. When I got a Borges’ book from my friend T Kannan in Srirangam and was going through it intently, leaning against a pillar at the temple premises, the precincts suddenly seemed to have metamorphosed into a Borgesian labyrinth.

Dear Latin American reader! I can share tales like this only with you!

I have, all through my life, imbued the spirit of the Latin American literature. It is a salvation of my birth (called ‘Jeevan mukti’ in the Indian spiritual literature) that my writings get published in the region peopled by literary giants who changed tone and tenor of the global literature, such as Jorge Luis Borges, Juan Rulfo, Carlos Fuentes, Pablo Neruda, Julio Cortazar, Gabriel Garcia Marquez, Mario Vargas Llosa, Octavio Paz and Roberto Bolaño… etc.

The ‘Jeevan mukti’ is a life perspective put forward by our holy Vedas and spiritual epics called ‘Puranas,’ which has an immense faith in next birth. It preaches that soil is immortal; a human soul, after shedding its physical form, takes another birth. ‘Punarabi jananam Punarabi maranam’ (Born again, die again,) so goes a sloka in Hindu sage Adi Shankara’s ‘Bhaja Govindam.’

The cycle of births continues till human soul is done with undergoing due punishment for its sins committed in each birth. This is what is called ‘karma’. When soul is purged of all sins by good and lofty actions, it becomes one with the Almighty and the union is described as ‘mukthi’.

According to our ‘Garuda Purana,’ a man can’t escape the consequences of his ancient karmas even if he hides in the depths of oceans or in the cavities on big mountains.

That is what is preached by our Tamil sage-bard Thiruvalluvar of the 4th century AD in his renowned work ‘Thiruk kural’. He observes, “Only those able to cross the great ocean of birth can attain the feet of the God.” The couplets in the ancient Tamil work resemble the aesthetically loaded crisp Zen poetry.

Though I am not, inreality, inclined towards all this stuff, it is the Latin American magical realism that brought me round to such metaphysical ideas.

Our native landscape has an umbilical cord-like attachment to the magically realistic world peopled by a child born with a pig-tail in the family of Buendia and ghosts roaming about in the dead land Comala.

The first story that I happened to read from the Borges treasure, ‘The Other’ is still bubbling in my blood, having as it does an interesting narrative that the Indian leitmotif of ‘Jeevan mukti’ (soul salvation) has changed into. It is this story that became a revelation of sorts for me that Borges was quite fascinated with the Indian philosophy.

The story is a creative space of time game and a philosophical vision playing out in the magical vortex of labyrinth, revolving around a meeting between a Borges sitting on a bench on the banks of the Charles river in Cambridge north of Boston in 1969 and another Borges sitting on a bench on a riverbank in Ronne in Geneva in 1964.

I was awed by the way the philosophical stuff of the protagonist seeing himself again has been converted into an interestingly marvelous work of art. None equals Borges in the art of transforming a philosophical search into a wonderful literary piece.

The literary theory of doppelgänger is a world renowned one; it is a highly prized artistic technique interestingly used to bring one’s look-alike out of the person himself or herself. Robert Stevenson’s Dr. Jekyll and Mr. Hyde takes a cake in this genre. This technique can be seen deftly used in the poetry of great craftsmen. As far as fiction is concerned, greats ranging from Dostoevsky to Nobokov have used this masterfully.

There is another thing usually said about this ‘double’ theory. There is a widespread belief that if you happen to meet with your double, then it means you are drawing close to your twilight period. Most of the critics have written a lot, based on this European perspective. But unfortunately, this is totally wrong.

Borges’ outlook on this count is not the usual doppelgänger variety. His is a perspective akin to the Indian philosophical vision. He has not given the title ‘Double’ to his story; instead, he has captioned his tale as ‘The Other.’

To understand his outlook in this regard, we must get into his another story, ‘The Secret Miracle.’ The story goes as follows:

A poet is sentenced to death, charged with sedition. His last wish is to complete the epic he has long been writing. To produce a complete epic is his dream. But unfortunately, he is to lay down his life before his dream comes true. Feelings over unfulfilled wish raging within, he is waiting for execution of death sentence.

Borges dives into this realistic scene.

The poet goes down on his knees before the protruding gun, praying soulfully and sadly to the God, nay, not for his life, but for his unfinished epic. A bullet whizzing out of the gun through the air gets frozen midway. For a moment, time and space are also frozen. The time-space unfolds before the poet, holding out pages after pages. That moment expands timelessly. In that timeless time, he pulls himself together and successfully finishes his incomplete and excellent epic.

This is a great Indian philosophical vision.

Borges’ story throws up visions of the philosophical discourse in ‘Bhagavad Gita’ in the Indian mythological epic ‘Mahabharata.’

The “Kurukshetra” battlefield in ‘Mahabharata’ is unmatched by greatly renowned battlefields described in the global literature because it is not an usual battlefield dripping with blood, but brimming with philosophical perspectives about ethics, treachery, justice, human affections, duty, madness for landed properties, lust etc.

On the battlefield of Kurukshetra, the armies of Pandavas and Gauravas are standing, facing off each other, divided into formations known as ‘akshauhinis’, ready for a pitched battle. (An ‘akshauhini’ – Sanskrit word – means approximately five lakh warriors, consisting of chariots, elephants, cavalry and infantry). Arjun, hero of the Pandavas, who feels dejected at the prospect of killing countless human beings, drops his weapons and gets down from the chariot. But the chariot driver Sri krishna blocks him and takes him under his control. Sri Krishna’s counseling begins; he dwells at length on what is good and what is bad and teaches the unwilling warrior the philosophy that propounds the dharma of destroying the evil raising its ugly head. This Sri krishna counseling well-known as ‘Bhagavad Gita’ has been going on for hours on end, seamlessly.

Look at this with perceptive eyes.

At a time when two sides are growing tense, getting ready for waging a war, how is it possible for a philosophical discourse like Gita to take place for hours that feel like ages on the battle front?

Here is a rare philosophical vision. It is an Indian outlook which tacitly propounds that when the good things are taking place, even time will extend a helping hand.

The Indian philosophical tradition has changed time into magical realism whereas the Buddhist tradition of philosophy has transformed it into a metaphor.

According to the Buddhist lore, Aṅgulimāla, hailing from some downtrodden community, wants to learn Vedas. But a sage refuses to oblige him, citing his birth into a low caste. Aṅgulimāla, vexed and peeved, goes out into a forest and turns a brigand, cutting fingers of all sages passing by and weaving them all into a garland that he wears around his neck.

One day, Gouthama Buddha happens to pass by on the way. Aṅgulimāla, seeing him, pounces on him to assault and kill him.

Here is a subtle time game worth a keen watch. Paradoxically, Buddha stands where he does, stationary and solid and it is the forest brigand who keeps on running to catch hold of Buddha. While the time of Buddha is frozen, that of Aṅgulimāla, is operating seamlessly. Tired of running and chasing, the brigand shouts, “O! Jain, don’t run, stop.”

But Buddha says, “You had better stop running for it is you running, not me.”

As Aṅgulimāla stops, an awareness of the boundless time-space keeps swelling within him.

At this juncture, we can relate a scene from the film, ‘Back to the Future’.

The main protagonist of the film, Marty McFly, living in 1985 boards the time machine and travels back to 1955. There he happens to see his parents living out their student days, both unmarried. His father George McFly goes after his mother Lorraine Baianes, wooing her fervently. But she just ignores him.

But on seeing Marty McFly (son), Lorraine takes a liking for him. But he trembles with fear that if the love becomes true, the time course will get derailed. Only if Lorraine loves and marries George, Marty’s birth will become possible. So, with strenuous efforts, he creates opportune moments for both to love and marry.

While watching the film, I was wondering how it was possible. Is it not natural that the past incidents should take place again as they did in the past? For the sake of making the proceedings quite interesting, the director Robert Zemeckis must have erred, I thought.

It was great Tamil poet Pramil, who explained, telling me, “Your outlook is totally in keeping with the Indian philosophical tradition. But what is shown in the film is purely a Jewish tradition. What happened in the past need not happen again as it did in the past. It may happen to the contrary. It is the Jewish traditional school of thought.”

Only after swimming along with various currents of traditional perspectives, we can finally arrive at Borges’ story.

As yet another example, a folk tale prevalent in our region opens up various layers contained in it.

A king of the Vedic age, known as Indran, was always reciting the name of the God and renovating temples after temples in order to attain what is called ‘Jeevan mukti’ in the Indian philosophical tradition. As he could not focus on the civic administration, robberies and murders were on the upswing. So, one night, he set out on a tour of the city, totally in a disguise.

At a place, he happened to see a youth fighting with a battery of thieves. The king was watching the spectacle very curiously. Holding a single sword in hand, the youth was slowly overpowering the thieves. The way he swishes and swirls the sword was awe-inspiring and impressive. But what was peculiarly cruel was that the youth kept on fighting incessantly, despite large iron shells dangling from his limbs causing an inconvenience.

At one point, the thieves fled, leaving the youth injured. The king goes near him and lifts him kindly, asking, “Are you heavily injured?” Fondling the iron shells, he said matter-of-factly, “First, you throw these iron shells. It is these things that have landed you in defeat.”

“First, you throw your iron shells shackling you. ‘Jeevan mukti’ is to know thyself.”

Only then the king looked at the youth from top to toe. The youth looked like the king’s youthful version, with the same face and the same features.

Startled, the king asked him, “O, youth! Who are you?”

The youth replied, “I am Indran, the king of this country.”

At the spot where the two Indrans were standing, there was a temple tank magically motionless; one of them threw the iron shells he was carrying on his person into the water. The iron shells fell into the swirling waters and disappeared into the depths of the waterbody, creating ripples behind.

At the same time, at the venue where the two Borgeses met, one of them tossed a coin about into a silent waterbody. The coin snapped and hopped into the H2o, creating ripples on the bed of time.

The ripples created in these two metaphysical episodes are quite essential to the pursuit of philosophical searches.

The Indran episode must have been part and parcel of the ancient Vedic literature. Going by the mention of the name of the king ‘Indran’ in the Vedic lore, one can presume that later, the Indran episode must have been edited out of the sacred sastras by some scholars. If a research is conducted on the philosophical perspectives based on the folklore tradition, lots of theories and outlooks can be ferreted out.

Personally speaking, it is Borges who has set me on the trail of a beautiful philosophical vision hidden and made to be hidden in our age-old tradition.

At the moment when I arrived at this historic philosophical vision, I happened to meet yet another Gouthama Siddarthan within.

“It is okay that you put forward several religious outlooks about the ‘Jeevan mukti’. But whither is the social perspective? What is the role of ‘Jeevan mukti’ in the social being? In this hard, stark reality of human life, his products get alienated. Life has become one of alienation. Man gets alienated from himself. At this juncture, what is the ‘Jeevan mukti’ that he is expecting?

‘Jeevan mukti’ is a philosophy, a myth, an ideal, a life’s dream and a principle of art and literature. But going beyond the religious outlook, does ‘Jeevan mukti’ mean human liberation in this birth itself, which a simple human being has been longing for? Or does it mean the soul’s liberation possible only in the next birth?”

That other person begins to speak by putting forward various questions.

I do not know who has written all these pages: me or the other?

Translated by : Maharathi

*********************************

unnatham

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top