TAMILI

தமிழி

கௌதம சித்தார்த்தன் : ஆறு கவிதைகள், தமிழ் – ஆங்கிலம் – ஹீப்ரு

 

 

Gouthama Siddarthan Six Poems : Tamil, English, Hebrew.
கௌதம சித்தார்த்தன் : ஆறு கவிதைகள், தமிழ் – ஆங்கிலம் – ஹீப்ரு

From Tamil to English Translation : Maharathi
தமிழிலிருந்து ஆங்கில மொழியாக்கம் : மஹாரதி
תרגום מטאמילית לאנגלית : מאהאראטי

இதில் உள்ள 5 கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர் மஹாரதி

ஆரஞ்சு என்ற ஒரு கவிதையை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர் எஸ்.பாலச்சந்திரன்

From English to Hebrew Translation : Isaac Cohen
ஆங்கிலத்திலிருந்து ஹீப்ரு மொழியாக்கம் : ஐஸாக் கோஹன்
תרגום מאנגלית לעברית : יצחק כהן

 

மஞ்சள் பூ

 

ஒரு கோப்பைத் தேநீர் அருந்த அலுவலகத்தை
விட்டு வெளியே வருகிறேன்
என் கபாலத்தைத் துளைத்துப் பாய்கின்றது கோடை
வான் முகட்டும் கட்டிடங்களின் நிழலில்
ஒதுங்கி நடக்கிறேன்
கட்டிட முகப்பில் தொங்கியபடி வேலை செய்து கொண்டிருக்கும்
ஒரு தொழிலாளியின் நிழல் என்மேல் கடந்து போகிறது
நல்ல வெயிலில் உழுது விட்ட நிலம் போல
மணம் பரப்பும்
அவனது உடலின் வாசனை
என் கபோலத்தில் முத்தியெடுக்கிறது
அக்கணம், காங்கிரீட் காட்டின் நிழல்கள் மறைந்து
ஒரு மஞ்சள் பூ பொக்கென வெடிக்கிறது.

**********************

Yellow flower

 

I come out of office for a cup of tea
Summer beats down on my skull
I walk along the shadows of skyscrapers
The shadow of a worker hanging precariously
From the dome of a building passes over me
His body odour akin to that of ploughed land in scorching sun
Wafts and kisses into my skull
Then, the shadows of the concrete jungle vanishing,
A yellow flower in an instant bursts out.

*****************

פרח צהוב

 

יצאתי מן המשרד לכוס תה
קיץ נקש על קרקפתי
אני הולך בצמוד לצללי גורדי השחקים
הצל של העובד תלוי בצורה מסוכנת
מכיפת הבניין עובר מעליי
ניחוח גופו קרוב לאדמה החרושה מצריבת השמש
מרחף ומנשק בתוך קרקפתי
בזמן, הצללים של יער הבטון נעלמים ,
הפרח הצהוב יוצא בהתפרצות מהירה.

****************

 

மூன்று மலர்கள் 

மெல்லிய சாம்பல் புகை கமழ மூன்று கோப்பைகளில் தேநீர் மணக்கிறது.
அவர்களின் வருகைக்காகக் காத்திருக்கிறேன்
காலமும் வெளியுமற்ற ஒரு புதிய திணையில்

ஒரு கோப்பை எனக்கானது.
மற்றொரு கோப்பை உனக்கானது பர்ரா..
‘வெற்றுத் தாளை மேம்படுத்துவதே கவிதை’
என்று சொல்லும் உன் எதிர்க் கவிதைக்கானது.

‘மற்றைநம் காமங்கள் மாற்றேல்’ என்று பிரகடனமிட்ட
ஆண்டாளுக்கானது இன்னொரு கோப்பை.

*அகேசியா மலர்கள் மலர்ந்து விட்டன பர்ரா..
பூக்களின் மணம் தேநீரின் மணத்தோடு இணைந்து கமழ்கின்ற
வாசத்தை அந்த தேநீர் விடுதியின் குளிர் உணர்த்துகிறது.

நளிரின் வெம்மை மாறுகிறது.
சுழன்றடித்தேகுகிறது *முல்லையின் வாசம்
அதோ வந்துவிட்டாள் ஆண்டாள்.

என்சட்டையில் அலர்ந்து நிற்கும் *மைத்ரேய மலர்.
மணந்து ஜாஜ்வலிக்கிறது.

தேநீர் இப்பொழுது கதகதப்பான பானகமாக மாறுகிறது.

*******

அகேசியா: அகேசியா மலர்கள் மலரும் பருவத்தில் மலர்களின் மணத்தை அனுபவித்துக் கொண்டிருந்த தருணத்தில் நிகனோர் பர்ராவின் காதல் முறிவு ஏற்பட்டது. ஒவ்வொரு அகேசியா பருவத்திலும் பர்ராவுக்கு தன காதலின் நினைவு ஆட்கொள்ளும்.

முல்லை: முல்லை மலர்களைக் காணும்போதெல்லாம், தனது காதலனின் ஞாபகம் வந்துவிடுகிறது ஆண்டாளுக்கு.

மைத்ரேய: எங்கள் காதல், செவ்வியல் நாடகபாணியில் பிரியும் பொழுது, நான் அவளுக்கு அளித்த செவ்வந்திப் பூ என்னும் மைத்ரேய மலர்.

 

*****************************

 

Three flowers

Three cups feel aromatic with foamy tea,
Tender, grey steam billowing
I’ve been waiting for them
In a landscape sans space and time

One cup is meant for me;
Another, for you, Parra!
That is, for your anti-poetry
That defines poetry as
‘Refining an empty paper’

And yet another cup for
Andal who proclaimed
“We won’t change our lusty love.”

Acacia flowers bloomed, Parra!
The coldness of the tea-house
Carries the fragrance of the flowers
Mingling with the aroma of tea.

The heat of coldness changes,
Swirls and exits.
The fragrance of ‘mullai’ flower wafts

Lo, yonder comes in Andal.

The maitreya flower blooming in my pocket
Glitters, emitting sweet odour
Now tea turns into warm syrupy beverage.

NOTES:

Acacia: Chilean poet Nicanor Parra had a break-up of affair when he was enjoying the fragrant acacia flowers. Every season when the flowers bloomed, sad memories of separation flooded his mind.

Mullai: Native flowers of Tamil Nadu. Andal, an ancient Tamil poetess, who had a devotion tinged with love to Lord Perumal (Hindu deity), composed a corpus of songs that more or less sound like romantic poetry. The sight of ‘mullai’ flowers in abundance reminded her of her lover, that is, Lord Perumal. Legend has it that she wove the flowers into a garland and presented it to Him, only after wearing it herself.

Maitreya flower: Poetic alternative to marigold flower called ‘sevvanthipoo’ in Tamil, which I presented her when we two parted in the classical dramatic style.

 

**********************

שלושה פרחים

 

שלוש כוסות חשו ניחוח עם תה מוקצף,
עדין, אדים אפרוריים מתנשאים
אני מחכה להם
בנוף בלי מקום וזמן

כוס אחת מיועדת עבורי;
אחרת , עבורך, פאררה!
זה, עבור גישתך המתנגדת לשירה
שמאפיינת שירה כליטוש
של דף ריק

ועוד כוס אחרת
עבור אנדל שהצהיר:
איננו רוצים לשנות אהבה בריאה שלנו.””

פרחי שיטה לבלבו , פאררה!
הקרירות של בית התה
הובילה את הניחוח של הפרחים
להתערבב עם הארומה של התה.

החום של הקרירות המשתנה
התערבל ויצא.
הניחוח של פרח ה”מולאיי”
נישא באוויר.

הבט , שם בא אנדל.

ניחוח פרחי ציפורני חתול בכיסי
נצנצים פולטים ניחוח מתוק
עתה תה הופך לסירופ של משקה חמים

הערות:
:ACACIA-שיטה-
המשורר הציילוניניקנורפאררה, פרק רומן, כאשר הוא נהנה מפרחי השיטה הריחניים.
בכל עונה, כאשר הפרחים לבלבו , זיכרונות עצובים ,הציפו את תודעתו.

:Mullai
פרחים מקומיים באזור הטאמילי. אנדל , משוררת טאמילית עתיקהשהייתה
לה דבקות לאל פרומאל , אחד מאלי ה”הינדו”. היא חיברה קורפוס של שירים
שפחות או יותר נשמעים כמו שירה רומנטית. הראייה של פרחי המולאיי ,
שפע של אהבה שהוא האל פרומאל. האגדה מספרת שהיא שזרה
את הפרחים לזר והציגה לו את זה אחרי שחבשה בעצמה.

Maitreya flowers:
שירה אלטרנטיבית, לפרח “ציפורני חתול ” הנקרא: “sevvanthipoo” בשפה
הטאמילית, שהצגתי לה, כאשר שניים נפרדו , בסרט הדרמטי הקלאסי.

 

*****************

 

கண்ணாடி

 

ஏன் அப்படிப்பட்ட முகத்தை என் கண்ணாடி காட்டியது?
கண்ணாடியில் நான் பார்த்த நான், நான் அல்ல

ஓயாமல் அக்கண்ணாடியைக் கொத்திக்கொண்டிருக்கும் மரங்கொத்தியின்
ரிதமான கொத்தலில் ஒரு இசைத்துணுக்கு தோற்றம் கொள்வதை அவதானிக்கிறேன்.
அதை நான் ஏற்கனவே கேட்டு அனுபவித்திருக்கிறேன்.
எங்கே? எப்போது?

என் தலைக்கு மேலாக ரீங்கரித்தபடி சுற்றிய வண்டு ஒன்று.
கண்ணாடிச் சதுரத்தில் பாய்ந்து, என் காதுகளுக்குள் நுழைந்து அதிர்வதை நான் பார்க்கிறேன்..
இசை ஒரு தண்ணீரைப்போல மாறிய எல்லையற்ற குமுக்கலில்
நீந்திக் கொண்டிருக்கும் என்னை வேறொரு நான் என்று கனவு காணாதே என்கிறது
என் முடிக்கற்றைகளை கலைத்துப் போடும் காற்று.

நதி தீரத்தின் அலைமேடுகளில் மீண்டும் என்னைப் பார்க்கிறேன்.
மிக நிச்சயமாக நானல்ல அது.
முடிவாக நான் பார்க்கிறேன், நானற்ற நானை.
நீண்டு கிடந்த நதிக்கரைமணலில் இறைந்து கிடக்கின்றன கிளிஞ்சல்கள்.

கேள் : அவைகளின் சீழ்க்கையை
ஏதோ ஒரு முக்கியமான விருந்தாளியின் வருகைக்கான கட்டியமாக இருக்கிறது அது.
ரத்தம் கக்கிச் சாகும் அந்திச் சூரியனின் நிறமாலையில்
அலர்ந்த மலர்களில் தேன் பருகிக் களிக்கும் வண்ணத்திகளின் நடுவே
நான் அதைப் பார்த்தேன்.
ஒருபோதும் பார்த்திராத மஞ்சள் கோத்தும்பியை நான் பார்த்தேன்.

காலநிறமாற்றத்தில் உடல் கொள்ளும் அதன் ஓயாத பறத்தலில்
மழைநீராய் வழிகின்றது காலம்.
நீர்ச்சிதறல்கள் எளியவையெனினும்
அதன் சிக்கலான ஸ்படிகங்களை உடைத்து உடைத்து அழைத்துச் செல்கிறது
கண்ணாடிகளின் உலகத்திற்கு.

நிறமாலைகள் இசைகின்றன. தீராது ஒளிர்கின்ற எல்லையற்ற கண்ணாடியில்
ஓயாது கொத்திக் கொண்டிருக்கிறது மரங்கொத்தி.
எல்லையற்ற ஸ்படிகப்பரப்பில் என்னை நானே பார்த்துக்கொண்டிருப்பதை
பார்த்துக் கொண்டிருப்பது நானா? இன்னொரு நானா?

ஏன் அப்படிப்பட்ட பிம்பம் என் நினைவிலியில் இருக்கின்றது?

 

******************

Mirror

 

Why did my mirror show such a face?
Myself I saw in the mirror is not me

I reflect a piece of music appearing
In the rhythmic pecking of a woodpecker
Constantly pecking at the mirror

I have already experienced it.
Where? When?

I watch a beetle humming over my head
Pouncing into the square of mirror and
Vibrating in my ears it has entered into
As I am swimming in the bubbling water
That the music has transformed into,
The winds, ruffling my hair strands,
Tell me not to dream of myself
being some other me

I again look into the crests of waves
Lashing out at the riverbank
It is certainly not me;
Eventually I look at myself being not myself;

The river sandy stretch is littered with shells
Lo, lend ears to their whistling noise,
A harbinger of some important guest’s advent.

In the garland of hues of the sun bleeding to death
In the twilight,
Amid the butterflies eating with relish the honey
From the blossoming flowers
I saw that,
That never-seen yellow kingly beetle.

Times flows as rainwater
In the non-stop flying of the beetle
That takes flesh from the
Changing colours of time
Though splattered waterdrops are quite simple,
It breaks and breaks their complex crystals
Ushering in the world of mirrors

The garlands of colours sway;
The woodpecker is seamlessly pecking at
The inexhaustibly reflecting and boundless mirror

Is it I who watch me looking at myself in the boundless
Crystal space Or another me?

Why does such an image exist in my unconscious mind?

 

********************

מראה

 

מדוע המראה מראה לי פנים כאלו?
העצמי שאני רואה במראה אינו אני.

אני משקף פיסה של מופע מוסיקלי
בריקוד ניקור של נקר
ללא הרף מנקר במראה
כבר התנסיתי בזה.
איפה? מתי?

אני רואה חיפושית מזמזמת מעל ראשי
דופקת על ריבוע של המראה ומרטיטה
באוזניי, נכנסת פנימה כמו שאני שוחה
בתוך מערבולת מים שהמוסיקה
מעבירה בתוכי.
הרוח פורעת את בלוריתי.
ספר לי לא לחלום של עצמי
שהוא אחר ממני.

אני רואה שוב את בלוריתי מתנפנפת
משתלחת על גדת הנהר
זה בוודאות לא אני;
באופן ברור אני מסתכל
על עצמי שאני לא עצמי;

חולות הנהר מלוכלכים בצדפות
הבט, באוזן יש רעש שריקות
הכרוז של התגלות חשובה.

זר של גוונים ,שמש מדממת למוות
בדמדומי בין ערביים.
בין הפרפרים אוכלים בתענוג דבש
מפרחים מלבלבים.
ראיתי זאת
חיפושית מלכותית צהובה שטרם נראתה.

זמנים זורמים כמי גשמים
בתוך מעוף בלתי פוסק של החיפושית.
לוקחים בשר
מחליפי צבעים של הזמן
מתיזים מים , פשוט לחלוטין.
זה שובר ומנפץ את הקריסטלים המסובכים
שמוביל את העולם של המראות.

הזרים של הצבעים מתנדנדים.
הנקר מנקר כיחידה אחת.
ההחזר אינסופי ומראה בלי גבול.

האם זה אני, שמביט עלי
רואה עצמי בלי גבולות
מרחב בדולח או אני אחר?

מדוע דימוי כזה מתקיים בתת המודע של תודעתי?

***************

 

ஒரு புதிய பானகம்

 

பெண்ணே, இந்தத் தேநீர் விடுதியில்
நீயும் நானும் பலமுறை தேநீர் அருந்தியிருக்கிறோம்
உன் கோப்பையில் இதழ்களைப் பொருத்தி
உறிஞ்சி ருசிக்கும் நீயும்
என்கோப்பையில் நானும்

அதன் கதகதப்பான ருசி
உன் இதழ்களின் ஓரத்தில் தேங்கியிருக்கும்
புத்துணர்ச்சியைப் போன்றதென
நான் சுவைத்திருக்கிறேன்
என் அதரங்களின் கணப்பைப் போன்றதென
நீயும் கவிதை எழுதியிருக்கிறாய்

ஆனால் பெண்ணே..
இன்னும் எத்தனை யுகங்கள்தான்
இந்தத் ருசியையே சுவைத்துக் கொண்டிருப்பது?
குறிஞ்சித் திணையில் ஒழுகும் பசலை நீரைப் பருகியிருக்கிறோம்.
காய்கனிச் சாற்றை களித்திருக்கிறோம்
இவையெல்லாமே ஏற்றி வைக்கப்பட்ட ருசிகள்
இந்த நவீன யுகத்தில் யாருமே ருசிக்காத ஒரு சுவையை
நானுனக்கு சொல்கிறேன் வா

உனக்குத் தெரியுமா பெண்ணே?
நானும் என் இளம்பருவத் தோழியும்
நதியோரம் பொறுக்கியெடுத்த கூழாங்கற்களின்
குளுமை பற்றி
அவைகளை தன் வாய்க்குள் வைத்து எச்சில் சுவைத்து
எனக்குத் தந்த அபூர்வ ருசி பற்றி
என் வாய்க்குள் அப்போது இறங்கியது
தோழியின் எச்சில் அமுதம் மட்டுமேயல்ல
உடல் சார்ந்த ஈர்ப்பு வேட்கையும் அல்ல
கூழாங்கல்லின் சில்லிட்ட குளுமை

அது ஒரு காவிய மரபு
அது ஒரு வேர்கள் தேடும் வேட்கை
அது ஒரு பண்பாட்டு அசைவியக்கம்
அது ஒரு செவ்வியல் ருசி

எழுது பெண்ணே
தமிழியலின் ஒரு புதிய ருசியைப் பற்றி.
ஒரு புதிய பானகத்தைப் பற்றி.

*********************

A new beverage

Lass!
Here in this tea-house
You and I took tea several times,
You pressing your lips to the cup
And sipping with relish
And I at my cup

I tasted its taste of warmth
As a refreshing feel stored
In the corners of your lips
You too penned poetry
Comparing it to the hearth of my lips

But, lass!
Still how many eons
Should we be relishing this taste?

We have gulped down the water
Of love-sick sallowness oozing
Down the mountainous landscape

All these tastes are celebrated ones
But I will tell you a peculiar taste
Tasted by none in this modern age

Come!
Do you know, lass!
About the coolness of pebbles
my ‘saki’ and I
Collected from the riverbanks?
About the precious taste of
The pebbles she put into her mouth
And returned them to me, saliva-ridden

It was not only my saki’s nectar of saliva
That oozed down into my mouth;
It was not only the horny longing
Of physical attraction,
But also the chilled feel of pebbles.

That is an epic tradition;
That is the longing of roots;
That is a cultural movement
That is a classical taste

Lass!
Write about a new taste of Tamilism
About a new beverage!

****

Note:
The classical, ancient Tamil tradition divided the landscape into five, out of which Kurinji referred to the mountainous region. The literature also had matching divisions, with unique flavours. In Kurinji literature, a girl who experiences deep love towards her match, suffers from Pasalai, which indicates the pangs of separation.

 

***************

משקה חדש

 

אהובה!
כאן בבית תה זה
את ואני לקחנו תה מספר פעמים,
הצמדת את שפתותייך לכוס
ולגמת בהנאה
אני בכוס שלי.

אני טעמתי את טעם החמימות
כרעננות המאוחסנת
בפינות של שפתייך
את משכת בעט השירה
משווה זאת ללהט של שפתיי.

אבל, אהובה,
עדיין כמה עידנים
אנו חייבים להתענג על טעם זה?

הערינו למטה את המים
חיוורון חולי אהבה
לרגלי הנוף ההררי.
כל הטעמים האלה מיוחדים במינם
אבל אני רוצה לספר לך על טעם מיוחד
טעם לא ידוע בזמן המודרני.

בואי!
האם את יודעת, אהובה
על הקרירות של חלוקי נחל?
משקה ה”סאקי “שלי ואני
ביחד על שפת הנהר?
בקשר לטעימה יקרת ערך.
חלוקי הנחל שהיא שמה בפיה
חוזרים אליי רווי רוק.

זה לא רק רוק צוף ה”סאקי”
שנשפך לפי;
זה לא רק תאוות תשוקה
של משיכה פיזית,
אבל גם תחושת הקרירות
של חלוקי נחל,
זו מסורת אפית;
התשוקהלשורשים.
זו תנועה תרבותית
זה טעם קלאסי(טיפוסי).

אהובה!
לכתוב על טעם חדש של טאמיליזם
על משקה חדש!

הערה:
המסורת הקלאסית, הטאמילית הקדמונית חילקה את הנוף לחמישה מתוכם קורינג’י מתייחס לאזור ההררי.
בספרות היו גם חלוקות תואמות. בספרות של קורינג’י נערה שהתנסתה באהבה עמוקה לאהוב שלה סבלה מחרדה
שמצביעה על ייסורי פרידה.

 

******************

 

கண்ணாடியுள்ளிருந்து

 

நான் பார்த்துக் கொண்டிருக்கும் கண்ணாடியில்
என்னைப் பார்த்துக் கொண்டிருப்பவன்
ஒரு வெருகு பூனையாகத்தானிருக்க வேண்டும்

அதன் கண்களில் காலத்தில் தொலைந்துபோன
ஒரு இரவும் ஒரு பகலும் வேட்கையுடன் மியாவுகிறது

கண்ணாடியாளனையும்
என்னையும்
காலமற்ற ஒரேமாதிரியான தோற்றங்களாக உருவாக்குகிறது காலம்.

இடைவெட்டிக்கிழிக்கும் கண்ணாடியின் ரஸவாதமோ
இருவேறு காலங்களை இழைத்துப் பார்க்கிறது.
அதன் நீண்ட மீசை என் கழுத்தைச் சுருக்கிட்டு இறுக்குகிறது

ரசம் கழன்று விழுந்து நெளிகின்றன குற்றபிம்பங்கள்

அதன் எதிரேயிருக்கிற நான்
காலத்திற்கு அப்பாலான அதனின் பிம்பம்தானென்று
யாரதற்குச் சொல்வது?

என்னைக் கவனித்துக் கொண்டிருப்பதான வெருகு
கண்ணாடியின் ஒரு தாபவேட்டையென்று
எனக்குச் சொல்வதும் யார்?

 

****************

 

From within the mirror

 

The person staring at me from the mirror
I am looking into
Must be a tom-cat

It meows with an intense longing,
Eyes full of a night and a day
Lost in time

Time shapes the mirror-person
And me as timeless, identical images

The quicksilver coating
penetrating into the mirror
weaves in two different Times
its long moustache tightens
my neck like a noose

As the quicksilver coating
Gets peeled off and falls down
The images of crimes
Slither along

Who is to tell it
That sitting opposite it,
I am its reflected image
Beyond the pale of time
The tom-cat watching over me
Is the mirror’s lusty hunting;
Who tells me that?

 

*****************

מתוך המראה

 

האדם בהה בי מבעד למראה
הבטתי לתוכו
חייב להיות חתול זכרי

הוא מייללבתאווה אינטנסיבית
עיניו מכילות לילה ויום
אבוד בתוך הזמן.

צורות הזמן של מראת האדם
ואני כנצחי, דמות זהה

ציפוי הכספית חודר לתוך המראה
נארג בשני זמנים שונים.
שפמו הארוך מהדק
את צווארי כמו לולאת חנק.

כמו ציפוי הכספית
מתקלף ונופל לארץ.
דימוי הפשעים
מחליק לצדי

מי יספר זאת
שישיבה מנוגדת אליו
אני מחזיר דימוי
מבעד לזמן החיוור.
החתול הזכרי מביט מעבר אליי
האם המראה התאוותנית תצוד
מי סיפר לי זאת?.

***************

 

ஆரஞ்சு

இன்று காலையிலிருந்தே
ஆரஞ்சுப் பழம் சாப்பிடவேண்டும் என்ற ஆசை மீதூறுகிறது.

அதனுள் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருக்கும்
விதைகளைப்போன்ற ஊணின் சுவை
நாவைச் சுழட்டுகிறது
இன்று எதனால் இந்த ஆசை எழுந்தது?

அன்பே
அன்று நம் முதல் புணர்ச்சிக்குப் பின்
படுக்கை முழுக்கக் கசிந்த மணத்தின்
ருசியை
அடங்காத தாபவேட்கையை
நீ தொளித்துத் தந்த சுளைகள் உடலெங்கும் ஏற்றுகின்றன.

அந்த ஆரஞ்சின் தொலியை பிய்த்து
உனது உடலின் நிர்வாணத்தை போர்த்துகிறேன்
உனது உடல் ஒரு பெரும் ஆரஞ்சுப் பழமாக மாறுகிறது

கானகமாக மாறிய படுக்கையறையில்
ஆரஞ்சு வாசனையை உருவி எடுத்து
உன் உடலைக் காணும் களைப்பில்
மற்றொரு உடலை
அடையாளப் படுத்தித் தருகின்றது ஆரஞ்சு.

ஒரு பழத்திலிருந்து இன்னொரு பழத்திற்கு
ஒரு உடலிலிருந்து இன்னொரு உடலுக்கு….

இன்று
ஆரஞ்சுப் பழத்தின் நறுமணத்துடன்
வெயில் என்மேல் கவிகிறது
தலைக்கு மேலே கனிந்து தொங்குகிறது ஆரஞ்சு.

 

*******************

 

Orange Fruit

 

From the morning
Burgeons my craving
To eat Orange fruit.

The taste of the pulp-segments
Arranged elegantly inside it
Like seeds
Stimulates my tongue.
Why this yearning came up today?

My love,
The fruit pulps
Peeled and handed by you
Augment
The unsatiated desire and
The taste of the fragrance
That spread all over the bed
After our first copulation
On that day.

I cover your body
With the zest peeled
From that Orange fruit.
Your body becomes
A magnificent Orange fruit.

At the point of exhaustion
Having pulled out
The fragrance of
The Orange fruit
In the bedroom that became the forest
And after looking at your body
The Orange fruit marks
Another body.

From one fruit to another one
From one body to another one.

Today
The sunlight envelopes me
With the fragrance of
The Orange fruit.
The Orange fruit becomes ripe
And hangs over my head.

 

*********************

פרי תפוז

 

מן הבוקר בצבצו
תחושות השתוקקות
לאכול פרי תפוז.

הטעם של מקטעי הציפה
מסודרים באלגנטיות בתוכו.

כמו זרעים
המגרים את לשוני.

מדוע כמיהה זו עולה היום?
אהובתי,
ציפת הפרי מקולפת
ומועברת על ידך
מגבירה את התשוקה
הבלתי משביעה.
הטעם של הניחוח שפרשנו מעל למיטה
אחרי ההזדווגות הראשונה באותו יום.

עטפתי את גופך
עם קליפת תפוז קלופה
מפרי תפוז.
גופך הפך לפרי תפוזמפואר.

בנקודת התשישות
יצא החוצה
הניחוח של
פרי תפוז.
בחדר השינה שהפך ליער
ואחרי מבט בגופך
פרי תפוז מסמן
גוף נוסף.

מפרי אחד לפרי אחר
מגוף אחד לאחד נוסף.

היום
אור השמש עוטף אותי
עם הניחוח שלך.

פרי התפוז
פרי התפוז מבשיל
ותלוי מעל ראשי.

 

***************************

תרגום מאנגלית לעברית : יצחק כהן

תודה רבה לגברת רות טננבאום ,מתרגמת מדופלמת , על עזרתה.

 

unnatham

One thought on “கௌதம சித்தார்த்தன் : ஆறு கவிதைகள், தமிழ் – ஆங்கிலம் – ஹீப்ரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top