TAMILI

தமிழி

Emanuela Valentini : Microfiction

 

Bea’s Egg
– Emanuela Valentini

English translation : Sarah Jane Webb 
Tamil translation : Gouthama Siddarthan

பியா வின் முட்டை
அறிவியல் புனைவு நுண் கதை
– இமானுவேல் வாலண்டினி 

இத்தாலியிலிருந்து ஆங்கிலத்தில் : சாரா ஜேன் வெப் 
தமிழில் : கௌதம சித்தார்த்தன் 

******

பியா வின் முட்டை (Bea’s Egg)

அண்டத்தின் ஆழத்திலிருந்து கள்ளமாய் கடத்தப்பட்ட கனிமத்துடன், உலகளாவிய மார்க்கெட்டிலிருந்து, மனை திரும்பியிருந்தாள் பியா. பிறகு, இரவு நேரத்தில், அந்த ஒலியைக் கேட்டாள்: டிக்-டிக்-டிக் . அவள் மெல்ல எழுந்து, மூச்சை அடக்கியவாறு,படுக்கையின் விளக்கைப் பொருத்தினாள். பாறை வழியாகத் துளைத்துப் பாய்ந்த ஒளி, அதன் ரகசிய வாழ்க்கையை வெளிப்படுத்தியது.

“அது ஒரு முட்டையா?”

வெளிச்சத்திற்கு எதிராக,  சிறிய சிறகுகள் கொண்ட ஒரு உயிரினத்தைக் கண்டாள் பியா.

“அது ஒரு சிறிய பறவையா?”

இரு நாட்களுக்கு முன்பு,  அவளது இணையர்  இறந்துவிட்டார். அவள் ஓயாது அழுதிருந்தாள்.

“நீங்கள் ஆபத்தானவர் இல்லைதானே, யார் நீங்கள்?”

முட்டையின் உள்ளே இருந்த அந்த உயிரினம், ஒரு பூவாக மாறியது.

“உங்களால் நான் பேசுவதைக் கேட்க முடிகிறதா?!”

ஒரு பனிச் செதில். பிறகு இரண்டு, பின்னர் பற்பல.

மெல்ல நகர்த்தி, அதன் மார்பில் தொட்டாள். கழிந்த ஒரு கணம், ஒரு சிறு இதயத் துடிப்பு அதனுள்ளே. டிக்-டிக்-டிக்.

“ஒரு பரிவுணர்ச்சி கொண்ட முட்டை ” தனக்குள் வியப்புடன் சொல்லிக் கொண்டாள் பியா. ” என்ன ஒரு அதிசயம்?”

அவள் அதைத் தொட்டிலிலிட்டு தாலாட்டத் தொடங்கினாள், மேலும் ஒரு தாலாட்டு ராகத்தைக் கிசுகிசுத்தாள் –  ஒருபோதும் இல்லாத குழந்தைக்கான பாட்டு அது.

டிக்-டிக்-டிக், முட்டை ஆடியது. பியா அதை வெளிச்சத்திற்கு உயர்த்தினாள்: அதற்குள் ஒரு சிறிய குழந்தை மிதந்தது, அதன் சிறிய தோற்றத்தைத் தவிர்த்து, ஒரு மனிதனைப் போல எல்லா வகையிலும், இன்னும் இறகு முளைக்காத, தோள்பட்டைகளுடன்.

*************

குறிப்புகள் (Notes) :

பரிவுணர்ச்சி (empathetic) என்ற சொற்பதம், 1858 ஆம் ஆண்டில் ஜெர்மன் தத்துவஞானி Rudolf Lotze என்பவரால் உருவாக்கப்பட்ட அர்த்தச் செறிவு. நீங்கள் ஒரு கலைப் படைப்பைப் பார்க்கும்போது, உங்கள் சொந்த உணர்ச்சிகளை அதில் முன்வைக்கிறீர்கள் என்று லோட்ஸ் நம்பினார். ஆகவே, இறந்துபோன தன் காதலனைப் பற்றி அழுகிற ஒரு பெண்ணின் ஓவியத்தைக் காணும்போது, உங்களுக்கு வருத்தமாக இருந்தால், அதற்குக் காரணம், நீங்கள் விரும்பிய ஒருவரின் இழப்பை, என்னவென்று நீங்கள் உணரும் தன்மை என்கிறார் லோட்ஸ்.

ஒரு பரிவுணர்வுள்ள நபர் என்பது மற்றொரு நபரின் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு இணையர்.  இந்தக்கதையில் தன் இணையரை இழந்த கதாநாயகியின் பரிவுணர்வு, ஒரு முட்டையைத் தத்தெடுக்க வைக்கிறது. எல்லா உணர்வுகளும் இயந்திர மயமாகிப்போன எதிர்காலத்தில் பரிவுணர்வு என்பது மட்டுமே மனிதத்தை மீட்டெடுப்பதாக இருக்கும் என்ற ஒரு வலுவான கருத்தாடலை முன்வைக்கிறார் ஆசிரியர்.

*************************

தற்கால இத்தாலிய எழுத்தாளரான இமானுவேல் வாலண்டினி  (Emanuela Valentini) அறிவியல் புனைவுகளில் கவனம் பெற்று வருகிறார். Grotesquerie, Red psychedelia, La bambina senza cuore, Angeli di Plastica  போன்ற பல அறிவியல் புனைவுநூல்களை எழுதியுள்ளார். Robot Award  மற்றும் Chrysalide Mondadori Award  போன்ற பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார், மேலும் அவரது படைப்புகள் யுரேனியா விருதுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

Emanuela Valentini was born in and resides in Rome. She is the author of La bambina senza cuore, Ophelia e le officine del tempo, Angeli di Plastica, and the Red Psychedelia series, a cyberpunk retelling of Little Red Riding Hood. She has received the Robot Award and the Chrysalide Mondadori Award, and her work has been shortlisted for the Urania Award.

 

Words Without Borders இதழில் வெளியிட்டிருக்கும் இந்த அறிவியல் புனைவு நுண் கதை, தமிழில் மொழியாக்கம் செய்து இங்கு தரப்பட்டுள்ளது. இதழுக்கு நன்றி!

Courtesy Source : Words Without Borders

 

unnatham

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top