TAMILI

தமிழி

BIRDS – Xi Chuan

 

பறவைகள்
– ஷீ சுவான்

பறவைகள் வானத்தின் மொழி
ஒரு அமைதியைக் கொண்டுள்ள அவைகளின் பாடலில்
திடீரென்று தோன்றக்கூடும், கரும் பறவைக் கூட்டம்
ஆனால் அந்த அளைவு,
காயமுற்ற மற்றும் தனிமை கொண்ட பறவைகள்
எங்காவது ஒன்றாக அடைந்துகொள்வதிலிருந்து
எந்தவகையிலும் தடுக்காது.

 

சூரிய ஒளியில் பறவைகள்
நிலவொளியில் பறவைகள்
மண் புழுதியாக உயரும்
நினைவின் ஸ்படிகங்கள்
தீப்பிழம்புகள் இறக்கைகளளவு உயர முடியாது
அன்றி, வானம் தாழ்வாகவும் இருக்க முடியாது.

பறவைகளின் பறத்தலில்
மரங்கள் பூமியிலிருந்து மேலேறுகின்றன
பறவைகளின் பறத்தலில்
பழங்கள் மேகங்களுக்குள் செல்கின்றன
பாறை அடுக்குகளால் கட்டப்பட்ட நகரம்
அவைகளின் பறத்தலுக்கு ஓய்வை அளிக்கிறது.

தங்களது அலகுகளில் தானியத்தைக் கவ்வியபடி என் பார்வைக்கு வெளியே பறக்கின்ற
அத்தகைய பறவைகளை நான் பார்க்கிறேன்
ஆனால், அனுதினமும் காலையில்
என் தலைக்கு மேலே வட்டமிட்டு
ஒரு பிரகாசமான கவசத்தை
எனக்கு அணிவிக்கும் அந்தப் பெரிய பறவை ஒரு தேவதை.

அது என் கனவுகளில் உள்ள பறவை
அதன் பணி பூமியைக் கண்காணிப்பது
அதன் மூலம் நட்சத்திரங்கள் வெளிப்படுகின்றன
ஒரு மனித உலகம்
ஒரு தெய்வீக உலகத்தை இணைக்கிறது
வழி தவறிச் செல்லும் பாதங்களை ஒழுங்கு படுத்தும் பரவசம் அது.

 

தமிழில் : கௌதம சித்தார்த்தன்

 

 

BIRDS
– Xi Chuan

 

Birds are the sky’s language
Their song holds a stillness
Black flocks may appear suddenly
But this in no way prevents
Injured and solitary birds
From huddling together somewhere

Birds in the sunlight
Birds in the moonlight
Soaring lumps of mud
Crystals of memory
Flames can rise no higher than wings
Nor can the sky be lower

In the yearning of birds
Trees ascend from the earth
In the yearning of birds
Fruit towers up into the clouds
A city built of layers of rock
Gives them a holiday for love

I see such birds
Flying out of sight with grain in their beaks
But every morning
There is a big bird
Circling over my head
It is an angel dressed in splendid armour

It is the bird in my dreams
Its task is to keep watch over the earth
Through it stars emerge
A human world
Adjoins a divine world
Our ecstasy is our going astray

Translation : Tao Naikan and Tony Prince

தற்கால சீனாவில் மிகவும் செல்வாக்கு மிக்க கவிஞர்களில் ஒருவரான ஷீ சுவான் (Xi Chuan : 1963 – ), கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர். 1981 முதல் 1985 வரை பீக்கிங் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் பயின்றார், 1988 ஆம் ஆண்டில், அவர் நண்பர்களுடன், அதிகாரபூர்வமற்ற கவிதை இதழ் (Qingxiang) ஒன்றை நிறுவினார், இது பல்வேறு சிக்கல்களுக்குப் பிறகு தடைசெய்யப்பட்டது. பின்னர் குளோப் என்னும் மாத இதழில் எட்டு ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றினார். 2002 ஆம் ஆண்டில் அயோவா பல்கலைக்கழகத்தின் சர்வதேச எழுத்துத் திட்டத்திற்கு வருகை தரு அறிஞராகவும், 2007 ஆம் ஆண்டில் நியூயார்க் பல்கலைக்கழகத்திற்கு வருகை தரு பேராசிரியராகவும், 2009 இல் கனடாவின் விக்டோரியா பல்கலைக்கழகத்திற்கு கீழையியல் அறிஞராகவும் இருந்தார்.

பல்வேறு மொழிகளில் வெளிவந்துள்ள அவரது படைப்புகள் இன்றுவரை ஐந்து கவிதைத் தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. மேலும் முக்கியமான மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றுகிறார், எஸ்ரா பவுண்ட், ஜார்ஜ் லூயிஸ் போர்ஹேஸ், செஸ்ஸாவ் மிலோஸ் மற்றும் ஓலாவ் ஆகியோரின் படைப்புகளையும் அவர் மொழிபெயர்த்துள்ளார். கவிதைகளுக்காக பல்வேறு விருதுகள் பெற்றிருக்கும் இவர், தற்போது பீகிங்கில் உள்ள மத்திய நுண்கலைகள் கழகத்தில் செவ்வியல் சீன இலக்கிய விரிவுரையாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

Xi Chuan (official name Liu Jun), poet, essayist, translator, was born in the City of Xuzhou, Jiangsu province, in 1963. He studied English literature at the Peking University from 1981 to 1985, and later worked as an editor for the magazine Huangqiu (Globe Monthly) for eight years. He was a visiting scholar to the International Writing Program of the University of Iowa, in 2002, and a visiting adjunct professor to New York University in 2007, the Orion Scholar to the University of Victoria, Canada in 2009. He is currently teaching Classical Chinese Literature at the School of Liberal Arts, Central Academy of Fine Arts in Beijing.

Xi Chuan is one of the most influential poets in contemporary China. He has been well known in the Chinese literary scene since his student days. In 1988, he founded, with friends, the unofficial poetry journal Qingxiang (Tendency), which was, however, banned after three issues. From 1990 to 1995 he worked as an editor for the unofficial magazine Xiandai Hanshi (Modern Chinese Poetry). He is now one of the two chief-editors of the magazine Dangdai Gouji Shitan (Contemporary World Poetry).

He has published five collections of poems to date. His series of poems Jinghua Shuiyue (Flowers in the Mirror and the Moon on the Water) was adapted into an experimental play directed by Meng Jinghui and was well accepted at the 35th Festival Internacional Cervantino, Mexico, 2007. In 2005, the Italian visual Artist Marco Mereo Rotelli made a giant installation named Poetry Island with 12 poems from 12 poets (including Adonis, Yves Bonnefoy, Charles Tomlinson, Tadeusz Rozewicz and Xi Chuan) and exhibited it at the 51st La Biennale di Venezia. The composer Guo Wenjing turned Xi Chuan’s poem ‘Yuanyou’ (Long Journey) into a piece of music and was performed in 2004 by the Hong Kong Philharmonic Orchestra conducted by Edo de Waart.

In 1997 he edited the collected works of the poet-hero Hai Zhi, who committed suicide in 1989. He also works as a translator, mainly of poetry. In addition to African and English poetry, he has translated works by Ezra Pound, Jorge Luis Borges, Czesław Miłosz and Olav. H. Hauge into Chinese. The translations of his poems and essays appeared in American, Canadian, French, British, Dutch, Belgian, Spanish, Danish, Italian, Russian, Bulgarian, Hungarian, Indian, Korean, Brazilian, Venezuelan anthologies, magazines and journals, including the London Times Literary Supplement and the Boston Review.

Xi Chuan has been awarded numerous prizes, including: in 1994, the Modern Chinese Poetry Prize; in 1999, one of the top ten winners at the Weimar International Essay Prize Contest; in 2001, the national Lu Xun Prize. A series of grants made his long visits abroad possible, in various places, including India (UNESCO-ASCHBERG bursaries of artists), the United States (Freeman Foundation fellowship), Italy (Civitella Ranieri Foundation Fellowship), and Germany (Kulturstiftung des Bundes fellowship). He attended the 1995 Poetry International Festival in Rotterdam, the 1997 Biennale Internationale des Poètes en Val-de-Marne in Paris, the 2002 Chicago Humanities Festival, USA, and the 2004 and 2008 Berlin International Literature Festival, Germany. He was the Curator for Chinese Poetry Posters Exhibition of the 2009 Frankfurt Book Fair. Xi Chuan lives in Beijing.

unnatham

One thought on “BIRDS – Xi Chuan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top