TAMILI

தமிழி

Hindustani Musalmaan: An Indian Muslim – Hussain Haidry

 

Hindustani Musalmaan: An Indian Muslim
– Hussain Haidry
English translation : Dipika Mukherjee and Udit Mehrotra
Tamil translation : Gouthama Siddarthan

இந்துஸ்தானி முசல்மான்: ஒரு இந்திய முஸ்லீம்
– ஹுசைன் ஹைத்ரி

ஒரு மாலை நேர உலாவலுக்காக என் தெருவில் இறங்குகிறேன்,
மசூதியில் ஒலிக்கும் பாங்கின் எதிரொலி, என் கால்களை நிறுத்துகிறது,
பிரார்த்திக்க வேண்டிய நேரம் இது என நினைவூட்டுகிறது,
ஆனால், நான் அக்கணம் யோசிக்கத் தொடங்குகிறேன்:

பாய், என்ன வகையான முஸ்லீம் நான்?

நான் ஷியாவா அல்லது சன்னியா?
நான் கோஜாவா அல்லது போஹ்ரியா?
கிராமத்தானா அல்லது நகரத்தானா?
நான் கிளர்ச்சியாளனா அல்லது ஆன்மீக ஞானியா ?
நான் இறை பக்தியாளனா அல்லது சாதுர்யமானவனா ?

பாய், என்ன வகையான முஸ்லீம் நான்?

நான் மண்டியிட்டு தொழலாமா,
அல்லது தலையை தரையில் வைத்துப் பணியலாமா,
என் தொப்பி என் அடையாளமா,
அல்லது முழுவதுமாக மொட்டையடித்து முகத்தில் வளர்ந்துள்ள தாடியா,
குர்ஆனிய வசனத்தை ஓதும் நானா,
அல்லது பாலிவுட்டின் பாடல்களை முணுமுணுக்கலாமா?
ஒவ்வொரு நாளும் அல்லாஹ்வின் திருநாமத்தை பாடும் நானா?
அல்லது அதிகார வர்க்க ஷேக்குகளுடன் போராடலாமா?

நான் என்ன வகையான முஸ்லீம், பாய்?
எனக்குத் தெரியும், நான் ஒரு இந்திய முஸ்லீம்.

நான் தக்காண பீடபூமிக்காரன் உத்திர பிரதேசக்காரன்
நான் போபால்காரன், டெல்லிக்காரன்,
நான் குஜராத்தி,  நான் பெங்காலி,
நான் உயர் சாதியினன், தாழ்த்தப்பட்டவன்,
நான் நெசவாளன், செருப்பு தைப்பவன்,
நான் மருத்துவன், தையல்காரன்.
புனித கீதை என்னில் பேசுகிறது,
ஒரு உருது செய்தித்தாள் என்னுள் வளர்கிறது,
தெய்வீகத்தன்மை  என்னில் ரமலான் ஆகிறது,
கங்கை என்னுள் பாவங்களைக் கழுவுகிறது.
நான் என் எண்ணங்களின்படி வாழ்கிறேன், உங்களுக்காக அல்ல,
நான் சிகரெட் புகைக்கிறேன்
எந்த அரசியல்வாதியும் என் நரம்புகளை ஆளவில்லை,
எந்தக் கட்சியும் என்னை தங்களின் கண்ணியில் பிணைத்திருக்கவில்லை

நான் ஒரு இந்திய முஸ்லீமாக இருக்கிறேன்.

நான் பழைய டெல்லியின் ரத்தக்களரியான வாசலில் இருக்கிறேன்,
நான் லக்னோவின் மாயாதீதக் குழப்பத்தில் இருக்கிறேன்,
நான் பாப்ரியின் இடிக்கப்பட்ட குவிமாடத்தில் இருக்கிறேன்,
நான் மங்கலான எல்லைகளில் உள்ள வீட்டில் இருக்கிறேன்,
சேரிக் குடியிருப்புகளின் வறுமையிலும்,
மதரசாவின் சிதைந்த கூரைகளிலும்,
நீறு பூத்த நெருப்பாய் எரியும் கலவரங்களிலும்,
நான் ரத்தக் கறை படிந்த உடையில் இருக்கிறேன்.

நான் இந்துஸ்தானி முசல்மான்.
இந்துக் கோவில் கதவு என்னுடையது,
அதே போல உயர்ந்த மசூதி ஸ்தூபியும் என்னுடையது,
சீக்கிய குருத்வாரா மண்டபம் என்னுடையது,
தேவாலயங்களில் உள்ள திருக்கோயில் இருக்கைகள் என்னுடையவை;
நான் நூறில் பதினான்கு,
ஆனால் இந்த பதினான்கு, மற்றவர்களில் அல்ல,
நான் நூற்றுக்குள்ளேயே இருக்கிறேன்,
நூறு என்பது, என்னையும் கொண்ட  மொத்தம்.

என்னை வேறு விதமாக பார்க்க வேண்டாம்,
நூற்றுக்கணக்கான கதைசொல்லிகளிடமிருந்து
நூறு விதமான சிறு சிறு வேறுபாடுகள் கொண்ட கதாபாத்திரங்களாக இருக்க
எனக்கு நூறு வழிகள் உள்ளன.

சகோதரனே, நான் முஸ்லீமாக இருப்பதுபோல,
மிகுதியாக, இந்தியனாகவும் இருக்கிறேன்.

நான் இந்துஸ்தானி முசல்மான்,
நான் இந்துஸ்தானி முசல்மான்.

 

இந்தக் கவிதை உருது / இந்தியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தவர்கள் : தீபிகா முகர்ஜி,  உதித் மெஹ்ரோத்ரா.

 

தமிழில் : கௌதம சித்தார்த்தன்

ஹுசைன் ஹைத்ரி (Hussain Haidry) கவிஞர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர். அவர் தனது வேலையை விட்டுவிட்டு முழுநேர எழுத்தாளராக மும்பைக்குச் செல்லும் வரை கொல்கத்தாவில் உள்ள ஒரு சுகாதார நிறுவனத்தில் நிதித் தலைவராக இருந்தார். மும்பையில்  கவிதை வாசிப்பு வடிவம் கொண்ட காட்சி நாடகங்களில் நடிப்பதன் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் Gurgaon, Qarib Qarib Single, and Mukkabaaz  போன்ற திரைப் படங்களுக்கும், Chacha Vidhaayak Hai Humaare, Yeh Meri Family, and Tripling போன்ற இணையத் தொடர்களுக்கும் பாடல் எழுதினார். ஒரு திரைக்கதை எழுத்தாளராக, அமேசான் இணையத் தொடரான Laakhon Mein Ek (சீசன் இரண்டு) உடன் இணைந்து எழுதியுள்ள அவர், தற்போது Takht படத்தின் உரையாடல்களில் பணியாற்றி வருகிறார்.

தீபிகா முகர்ஜி (Dipika Mukherjee) நவீன ஆசிய சமூகங்களின் அரசியலை மையமாகக் கொண்ட எழுத்துக்களை வழங்கும் நவீன நாவலாசிரியர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இவரது, Ode to Broken Things (Man Asia Literary Prizeக்கான பட்டியலில் நீண்டகாலமாக உள்ளது) மற்றும் Shambala Junction (புனைகதைக்கான UK Virginia Prize வென்றது) ஆகிய நாவல்கள் இந்த வகையில் முக்கியமானவை. தென்கிழக்கு ஆசிய புனைகதைகளின் ஐந்து தொகுப்புகளின் தொகுப்பாசிரியர், மேலும்,  தென்கிழக்கு ஆசிய எழுத்தாளர்களுக்கான வழிகாட்டுபயிற்சியாளராகவும் செயல்படுகிறார். மற்றும் சிகாகோ பல்கலைக்கழகத்தின் கிரஹாம் பள்ளியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியராகவும் பணிபுரிகிறார்.

உதித் மெஹ்ரோத்ரா (Udit Mehrotra)தாய்லாந்தில் பிறந்து சிங்கப்பூரில் வளர்ந்தவர், மேலும், டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் புள்ளிவிவரங்களைப் படித்தார், தற்போது ஆஸ்டினில் data scientist ஆக பணிபுரிகிறார்.

 

Hussain Haidry is a poet, screenwriter, and lyricist. He was head of finance at a healthcare company in Kolkata until he left his job and moved to Mumbai to become a full-time writer. He started his career by performing at spoken-word poetry forums in Mumbai such as Kommune, then went on to write lyrics for films like Gurgaon, Qarib Qarib Single, and Mukkabaaz and web series like Chacha Vidhaayak Hai Humaare, Yeh Meri Family, and Tripling. As a screenwriter, he has co-written the Amazon web series Laakhon Mein Ek (season two) and is presently working on the dialogues of the film Takht.

Dipika Mukherjee’s work, focusing on the politics of modern Asian societies, includes the novels Ode to Broken Things (longlisted for the Man Asia Literary Prize) and Shambala Junction (which won the UK Virginia Prize for Fiction). She has been mentoring Southeast Asian writers for over two decades and has edited five anthologies of Southeast Asian fiction. She is a contributing editor for Jaggery and serves as core faculty at StoryStudio Chicago and teaches at the Graham School at University of Chicago.

Udit Mehrotra prides himself on his diverse upbringing, which has led to an interest in poetry, food, sports, politics, mathematics, and psychology. Born in Thailand and brought up in Singapore, he studied statistics at the University of Texas and now works in Austin as a data scientist.

World Literature today இதழில் வெளியிட்டிருக்கும் இக்கவிதை, தமிழில் மொழியாக்கம் செய்து இங்கு தரப்பட்டுள்ளது. இதழுக்கு நன்றி!

Courtesy Source : World Literature today

unnatham

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top