TAMILI

தமிழி

Month: November 2019

You Dawn in All My Limbs – Malka Lee

  நீ எழுகிறாய் என் கருவறையிலிருந்து  – மல்கா லீ என் செல்லமே, அந்த விடியலில் என் கருவறை முழுக்கவுமான உன் அளைதலில் நான் உன்னுடன் நனைந்திருக்கிறேன், காற்றுடன் கூடிய மரம் போல. என் உடலின் அடியாழங்களிலிருந்து உன்னுடன் சேர்ந்து வளர்கிறேன் நீ என் சதையிலிருந்து எழுகிறாய், மரபுவழியின் தூக்கத்திலிருந்து எழுவதைப்போல. என் ஒவ்வொரு சுவரும், ஒவ்வொரு பாதையும் மணியோசையாக…

A Voiceless Cry  – Nadia Anjuman

ஒரு குரலற்ற அழுகை  – நதியா அஞ்சுமன்  மழையினூடே பசுமையாய் ஒலிக்கிறது காலடிகளின் ஓசை அவர்கள் வருகிறார்கள்,  இப்போது சாலையிலிருந்து. பாலைவனத்திலிருந்து கொண்டு வரப்பட்ட  தாகமான  ஆன்மாவுடனும், அழுக்கான ஆடைகளுடனும் கானலில் கலந்து கனலும் தங்களது மூச்சும், உலர்ந்த உதடுகளும், தூசிகளுடனுமாய் அவர்கள் இப்போது சாலையில் இருந்து வருகிறார்கள் வாதையின் உடலுடன் வலியை சுமந்துவரும் பெண்கள் சந்தோசம் எரிந்த முகங்கள் உடைந்து விரிசலுற்ற இதயங்கள் எந்த…

John Freeman’s poem

John Freeman’s poem

  வழியாக.. – ஜான் ஃப்ரீமேன் பாரிஸில் ஆண்கள் சிவப்பு கால்சட்டைகளில், பெண்கள் நாய்களுடன் நான் பின்தொடர்கிறேன் உன்னை அவர்களின் தோற்ற மயக்கமாக. இது குளிர்ச்சிமிகுந்த ஜுலை, லாவெண்டர் மலர்கள், தூசி நிறைந்த தெருக்களின் தளங்கள், மோட்டார் சைக்கிள்கள், மற்றும் சிகரெட் புகை. பின்னர், அங்கிருந்தது ஸெய்ன் நதி, யாருமற்ற இறுதிச் சடங்கின் கண்ணியமான பண்டைய…

Ancient Eve – Simin Behbehani

பண்டைய ஏவாள் – சிமின் பெஹ்பஹானி எண்பது வயதில் காதல்? அதை ஒப்புக்கொள்: இது மாற்றுத்தன்மையானது. பண்டைய ஏவாள், மீண்டும் ஆப்பிள்களை வழங்குகிறாள் : செவ்விதழ்கள் மற்றும் பொற்கூந்தலுடன். பேரழகு, ஆனால் தெய்வீகமானதல்ல. என் முகத்தில் நிறம் இருந்தால் இது வெறும் ஒப்பனை, பசப்பு.ஆனால் என் இதயம் அதன் சிறகுகளை தாபத்துடன் துடிக்கிறது, ஒவ்வொரு எழுபதானதுடிப்புகளின் வரம்பு…

The Starry Night – Anne Sexton

நட்சத்திரங்கள் நிரம்பிய இரவு  – அன்னே செக்ஸ்டன்  “அது என் பயங்கரமான ஏக்கத்திலிருந்து என்னை மீட்காது. மதம் என்னும் அச்சொல்லை இங்கு வைத்துவிட்டு,   பின்னர், நான் நட்சத்திரங்களை வரைவதற்கு இரவில் வெளியே செல்கிறேன்.” – வின்சென்ட் வான் கோ தனது சகோதரருக்கு எழுதிய கடிதத்தில்.*   நகரம் என எதுவும் இல்லை. கருங்கூந்தல் போர்த்திய ஒரு மரம்…

The game – Ana Kolesnikova

    ஆட்டம் – அனா கோல்ஸ்னிகோவா    இந்த விளையாட்டு விதிகளின்  விளக்கம் எங்கே? விதிகள் இல்லாமல் நாம் எப்படி விளையாடுவது ? விதிகள் இல்லாது விளையாடுவது குற்றமானால்,  அதிலிருந்து  வெளியேறும் வழி என்ன?   கடந்த காலத்தின் துயரங்களாய் துவங்குகிறது ஆட்டம். நம் நினைவுகளில், உலகம் அணிந்திருக்கும் நிறத்தில் இரவின் கருத்த நிறமாலையாக உறைந்து    *தடை செய்யப்பட்ட பழத்தின் நிறத்தில் ஒளிர்கிறது  …

Ithaca – Konstantinos Kavafis

  இதாகா – கான்ஸ்டான்டைன் கவாஃபி   நீங்கள் இதாகாவுக்கு புறப்படும்போது, உங்கள் பயணம் நீண்டதாக இருக்கட்டும் சாகசங்களும் அறிவுத்தேடலும்  கொண்டதாகவும். லாஸ்ட்ரிகோனியர்கள், சைக்ளோப்ஸ்கள் மற்றும் சீற்றம் கொண்ட போஸைடான்களுக்கும் பயப்பட வேண்டாம் உங்கள் வழியில் நீங்கள் இதுபோன்றவைகளைக் காண மாட்டீர்கள் உங்கள் எண்ணம் உன்னதமானது என்றால், அற்புதமான அனுபவங்களும், உணர்வலைகளும் உங்கள் உடலைத் தொடும். லாஸ்டிரிகோனியர்கள் மற்றும் சைக்ளோப்ஸ், கோபமான போஸிடான்களை…

Knowledge – Reesom Haile  

அறிவு – ரீஸோம் ஹைலே முதலில் பூமி, அதன் பிறகு கலப்பை: எனவே அறிவு, அறிவிலிருந்து எழுகிறது. எங்களுக்குத் தெரியும், அதே சமயத்தில் எங்களுக்குத் தெரியாது. எங்களுக்குத் தெரியாது என்பது எங்களுக்குத் தெரியும் எங்களுக்குத் தெரியும் என்பது எங்களுக்குத் தெரியாது. நாங்கள் நினைக்கிறோம் இது போன்ற நினைப்புகள் – இந்த எலுமிச்சையின், அந்த ஆரஞ்சின் – கசப்பை ருசிக்கும் வரை. தமிழில் :…

Poetry – Xiaoming Liang

Poetry – Xiaoming Liang

  கவிதை   – ஷியோமிங் லியாங்   என்னுள்ளிருந்து எழுகிறது கவிதை, என் புருவங்களூடே விரிந்து என் தலை முடியில் அளைந்து பரவி உச்சந்தலை முழுக்க பயிரை நடவு செய்கிறது பிறகு, என் நாசியில் சுவாசமாக விழித்து, பற்றிப் படர்ந்து  நதியில் தாவி படகேறி விரைகிறது. கவிதையின் அபாரமான இந்தப் பாய்ச்சலில் பறவைகளின் றெக்கையடிப்பையும் அதில் பட்டுச் சிதறும் சூரியஒளியையும் கண்டு…

César Vallejo’s poem

César Vallejo’s poem

  சீஸர் வலேஜோ (César Vallejo : 1892 – 1938) பெரு நாட்டுக் கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர் மற்றும் பத்திரிகையாளர் ஆவார். 20 ஆம் நூற்றாண்டின் எந்தவொரு மொழியிலும் சிறந்த கவிதை படைப்பாளர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார். அவருடைய ஒவ்வொரு புத்தகமும் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டது, அதன் சொந்த அர்த்தத்தில் புரட்சிகரமானது. அவரது மொழிபெயர்ப்பாளரான தாமஸ் மெர்டன்…

Back to top