TAMILI

தமிழி

Zaki Ovais : Poem

ஏதோஒன்றுக்கு நான் பயப்படுவது குறித்து.  
ஸகி ஓவைஸ்

 

வெறுப்பு மிக்க மேகங்களால் மூடப்பட்ட வானத்தின்
ஒரு பசி கொண்ட  நட்சத்திரம் நான்.
பகல்நேரத்தில் நிழலாடும்
*ஒரு தங்க மீன் தாவரம் நான்.
குருட்டுச் சுவரின் எல்லையில் முணுமுணுக்கும்
ஒரு சமையலறை ஈ நான்.
வேலியின் குறுகிய எல்லைக்குள் ஒடுங்கும்
ஒரு தாய்க்கோழியின் சிறகுக்கு கீழ் ஒரு குஞ்சு நான்.
மனிதாபிமானமற்ற சிறைக் கூண்டில் அடைக்கப்பட்ட
ரங்கோன் வீதியின் ஒரு புறா நான்.
சுதந்திரக் காற்றைத் தொலைத்த
 **மயூ நதியில் பாயும் நீர் நான்.
அடிப்படை உரிமைகள் மறுத்த  பிரபஞ்சத்தில்
ஒரு மனிதன் நான்.
இனம்புரியாத ஒன்று குறித்து அஞ்சும்
யாரோ ஒருவன் நான்.

 

தமிழில் : கௌதம சித்தார்த்தன் 

 

* தங்கமீன் போன்ற தோற்றத்துடன் கூடிய பூக்கள் மலரும் ஒரு வகைச் செடி. இது தென்கிழக்கு அமெரிக்காவிற்கும் பர்மா மற்றும் இந்தியாவிற்கும் சொந்தமானது,  அதிக வெப்பத்தைத் தாங்காத  வீட்டுத் தாவரங்களான இவை, அறையை ஈரப்பதத்தின் கதகதப்புடன் வைத்திருக்கும் தன்மை கொண்டவை.

 

**மியான்மரின் அடையாளச் சின்னங்களில் ஒன்று  இந்த மயூ நதி.

 

ஸகி ஓவைஸ் தற்கால ரோஹிங்கியா கவிஞர். அவர் தனது முதல் கவிதைகளில் சிலவற்றை பயிற்சிப் பட்டறைகளின் போது எழுதினார். ஸகி மியான்மரை விட்டு வெளியேறிய ஒரு சமூக மேம்பாட்டு ஊழியரும் ஆவார்.

 

இந்தக் கவிதை I AM A ROHINGYA (Arc Publications,Todmorden, Lancashire, England.) என்ற கவிதைத் தொகுப்பு நூலில் வெளிவந்துள்ளது. ஏப்ரல் 2019 – ல்,   James Byrne மற்றும் Shehzar Doja ஆகியோர் ரோஹிங்கியா அகதிகளுடன் பணியாற்ற பங்களாதேஷ் சென்றனர். அங்கு அகதிகளாக இருக்கும்  காக்ஸ் பஜார் முகாம்களில் முதல் படைப்பு எழுத்துப் பட்டறைகளை அமைப்பதே அவர்களின் நோக்கம் ஆகும், அங்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஆபத்தான நிலையில் வாழ்கின்றனர். அதிர்ச்சியடைந்த மற்றும் நிலையற்ற, அவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் அனுபவித்த கொடூரமான காட்சிகளைப் பற்றிச் சொல்ல பல கதைகளும் கவிதைகளும் உண்டு: அரகன் என்னும் இடத்தில் உள்ள கிராமங்களை எரிப்பது, மியான்மரில் உள்ள அவர்களின் வீடு; இனப்படுகொலை, கற்பழிப்பு மற்றும் சித்திரவதை போன்றவைகள்.

பைர்ன் மற்றும் டோஜா ஆகியோரால் தொகுக்கப்பட்ட, “நான் ஒரு ரோஹிங்கியா” என்னும் இந்த நூல், உயிர் பிழைத்தவர்களிடமிருந்து வெளிவந்த கவிதை பதில். ரோஹிங்கியா கவிதைகளின் சக்திவாய்ந்த புதிய குரல்களை கொண்டாடவும் ஆவணப்படுத்தவும் முயன்ற ஒரு புத்தகம் இது.

Someone I’m Afraid Of
Zaki Ovais

I’m a hungry star in the sky,
covered by jealous clouds.
I’m a goldfish plant in the garden,
shaded from daylight.
I’m a fly in the kitchen, buzzing
on the boundary of a blind wall.
I’m a chicken under mother’s wing,
confined to the narrows of a wattle.
I’m a dove on the street of Yangon,
jailed in the cage of inhumanity.
I’m the water flowing in Mayu river,
missing my partner — Air.
I’m a human in the universe,
denied the most basic rights.
I’m someone I’m afraid of.

Zaki Ovais is a new Rohingya poet. He wrote some of his first poems during the workshops (including “I’m someone I’m afraid of”). Zaki is also a community development worker who fled Myanmar.

 

Source courtesy: Two Poems from I Am a Rohingya : POETRY DAILY

(Photo courtesy : Mohammad Rakibul Hasan)

unnatham

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top