TAMILI

தமிழி

Poem – Iya Kiva

 

உக்ரேனியக் கவிஞரான இயா கிவா (Iya Kiva ) தற்கால கவிஞர்களில் கவனம் பெற்று வருபவர். அவரது கவிதைகள் ஆங்கிலம், பிரஞ்சு, போலந்து மற்றும் லிதுவேனியன் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ரஷ்ய எழுத்தாளரான மரியா கலினாவின் “Avtokhtony” என்னும் ரஷ்ய நாவலை உக்ரேனிய மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார்.

 

– இயா கிவா 

அவர்கள் என் தந்தையைக் கொல்லும்போது,
வேரோடு பிடுங்கப்பட்ட மரங்களும்
சேறும் சகதியும் நிரம்பிய
கொடுங்கனவுகளால் கவ்வப்பட்டிருந்தேன்  நான்.

நெருங்கிவருகிறது அதல பாதாளத்தின் விளிம்பு
இரண்டாவது மாடியின் பால்கனியில்
ஓரடி முன்வைத்து தழுவுகிறது கபிலம்.

அது மிகவும் அழகாக இருக்கிறது
ஒரு தார்கோவ்ஸ்கி படத்தைப் போல*   

மேலும், வலதுபுறத்தில்
மலைகளிலிருந்து  மேலெழும்  பூமி
வசிப்பிடம் விட்டுச் செல்ல நினைப்பதில்லை 

நீங்கள் ஒரு தெப்பத்தில் இருக்கலாம்
அல்லது ஒரு தச்சுவேலையில்,
மாறுபட்டதாகிறது தோற்றக்காட்சி.** 

தந்தையே தந்தையே ஏன் என்னைக் கைவிட்டீர்?

 

தமிழில் : கௌதம சித்தார்த்தன் 

 

குறிப்புகள் :

*ரஷ்யாவின் புகழ்பெற்ற ஓவியரான ஆந்த்ரேய் ரூப்லெவ் (Andrei Rublev : 1360 – 1429) வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்துள்ளார் ரஷ்ய இயக்குனர் தார்கோவ்ஸ்கி.

**reverse perspective – (மாறுபட்ட தோற்றக்காட்சி) என்பது  ஒரு ஓவியத்தில் சித்தரிக்கப்படும் பொருட்களின் இடையில் வைக்கப்படும் மாறுபட்ட ஒரு வடிவத்தைப் பார்க்கும் தோற்றக் காட்சி. இது ஒரு விதத்தில் பறவைப் பார்வையின் பல்வேறு விளைவுகளைக் கொண்டிருக்கிறது, பார்க்கும் பறவையிலிருந்து வெகு தொலைவில் உள்ள பொருள்கள் பெரிதாக வரையப்படுகின்றன, மேலும் நெருக்கமான பொருள்கள் சிறியதாக வரையப்படுகின்றன, இது வழக்கமான நேரிய முன்னோக்குக்கு மாறாக, நெருக்கமான பொருள்கள் பெரிதாகத் தோன்றும். முப்பரிமாண இடைவெளியில் இணையாக இருக்கும் கோடுகள், நேரிய பார்வையில் அடிவானத்திற்கு எதிராக வேறுபடுவதாக வரையப்படுகின்றன.

இதை பைசாண்டியன் தோற்றக்காட்சி (Byzantine perspective) என்றும் குறிப்பிடுகிறார்கள். பைசாண்டியன் காலம் மற்றும் பண்டைய ரஷ்ய மரபோவியங்களில் இந்த கலை பயன்பாட்டிலிருந்து வந்தது;  இது சில நேரங்களில் கியூபிசம் மற்றும் நவீன கலையின் பிற இயக்கங்களிலும், குழந்தைகளின் வரைபடங்களிலும் பயன்படுத்தப்பட்டது.

கிறித்துவ மரபோவியங்கள் மற்றும் உருவ ஓவியங்களின் சிறந்த ரஷ்ய ஓவியரான  ஆந்த்ரேய் ரூப்லெவ் (Andrei Rublev : 1360 – 1429) தலைசிறந்த படைப்பான “Annunciation” (1405) இதற்கு ஒரு உதாரணமாக வழங்கப்படுகிறது. பின்னணியின் சிக்கலான கட்டடக்கலை கட்டமைப்பில், பார்வையாளரை நோக்கி எதிரான, மாறுபட்ட தோற்றக் கோடுகளின் வடிவம் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது, அதே நேரத்தில் படத்தின், ஒரு கட்டிடம் வழக்கமான நேரிய பார்வையில் பார்வையாளர்களைக் காட்டிலும் அதிகமான முகங்களை நோக்கி திரும்பும் எதிரான பார்வை.  கேப்ரியலிடமிருந்து கன்னி மேரி ஏற்றுக் கொள்ளும் பீடமும் சிம்மாசனமும் இதுபோன்ற மாறுபட்ட தோற்றக்காட்சியைக் காட்டுகின்றன.  மேலும் இவர் வரைந்த Ascension of Jesus போன்ற பல கிறித்துவ மரபோவியங்களில் இந்தக்கூறுகளைக் காணலாம்.

 

– Ия Кива

как убили отца
снилось я в окружении
вывороченных деревьев
мутной воды

подступающей к самой пятке балкона
второго этажа
шаг и обнимет сепия

и ведь красиво
как у Тарковского

а по правую руку
земля стала горы
из дому и не думай

то ли ты плот
то ли плотник
обратная перспектива

отче отче для чего ты меня оставил

when they kill my father i dream
i’m surrounded
by uprooted trees
muddy waters

coming up to the very edge
of the second story balcony
one step more until its sepia embrace

and it’s really beautiful
like in a Tarkovsky film

and to the right
the earth rises in mountains
don’t even think of leaving the house

either you’re a raft
or a carpenter
reverse perspective

father father why hast thou forsaken me

Translated by Katherine E. Young

 

Iya Kiva was born in Donetsk, Ukraine, where she graduated from Donetsk National University. In the summer of 2014 she fled the military conflict in Donetsk and since then has lived in Kiev. Kiva is the author of Podalshe ot raia (Kaiala, 2018). Her poems, reviews, and translations have been published in the journals StudiiaSlovo/WordNevaRadugaPlavuchii mostNovaia yunostNovyi mirBelyi voronKreshchatikOktiabrInterpoeziaPoemPo&sie, and on the websites ArtPapierLitcentrLiterraturaPolutona, and others. Kiva is the laureate of a number of international and Ukrainian poetry festivals: the Konstantin Romanov International Youth Competition (St. Petersburg, 2013, 2014), the International Festival of Literature and Culture Slavic Traditions (2013), the Yurii Kaplan Literary Contest (2013), and the International Poetry Festival Emigrantskaia Lyra (2016). She won the All-Ukrainian Poetry Competition Malachite Rhinoceros (2014) and was long-listed for the 2014 “Bella” and 2015 “Debut” (nominated by Poeziia) literary prizes. Her poems have been translated into English, French, Polish, and Lithuanian. She translated Maria Galina’s novel Avtokhtony into Ukrainian (Folio, 2016).

Katherine E. Young is the author of Day of the Border Guards, 2014 Miller Williams Arkansas Poetry Prize finalist, and two chapbooks. Young is also the translator of Farewell, Aylis by Azerbaijani political prisoner Akram Aylisli (forthcoming in 2018), as well as Blue Birds and Red Horses (forthcoming in 2018) and Two Poems, both by Inna Kabysh. Young’s translations of Russian and Russophone authors have won international awards and been published widely, including in SubtropicsThe White ReviewWords without BordersThe Penguin Book of Russian PoetryWords for War: New Poems from Ukraine, and 100 стихотворений о Москве: Антология (100 Poems about Moscow: an Anthology), winner of the 2017 Books of Russia award in poetry. Several translations have been made into short films. Young was named a 2017 National Endowment for the Arts translation fellow and currently serves as the inaugural poet laureate for Arlington, Virginia.

 

Source: Asymptote journal

unnatham

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top