TAMILI

தமிழி

I am Vertical – Sylvia Plath

நான் செங்குத்தானவள் 
– ஸில்வியா பிளாத்

ஆனால் நான் கிடைமட்டமாக இருக்க விரும்புகிறேன்.
நான் மண்ணில் வேர்களைக் கொண்ட மரம் அல்ல
தாயன்பான தாதுக்களை உறிஞ்சி
ஒவ்வொரு மார்ச் மாதத்திலும் இலைகளில் ஒளிரும்
பூந்தோட்டப் படுகையும் அல்ல
ஆஹா வென கவர்ச்சியான வண்ணங்களால் ஈர்க்கும் இதழ்கள்
விரைவில் உதிர நேரிடும்  என்ற அறியாமையும் அல்ல.
என்னுடன் ஒப்பிடும்போது, ஒரு மரம் அழியாது
மற்றும் ஒரு பூவின் உச்சி, உயரமில்லாவிட்டாலும் கூட, வலிமையானது:
ஒன்றின் நீண்ட ஆயுளையும் மற்றதின் தைரியத்தையும் நான் விரும்புகிறேன்.

இன்றிரவு,  நட்சத்திரங்களின் மங்கலான ஒளியில்,
மரங்களும் பூக்களும் அவற்றின் குளிர்ந்த நறுமணத்தை பரப்பியுள்ளன.
நான் அவைகளிடையே நடக்கிறேன், ஆனால் அவைகளில் யாரும் கவனிக்கவில்லை.
சில நேரங்களில் – நான் தூங்கும்போது என்று நினைக்கிறேன் –
நான் அவைகளை மிகச் சரியாக ஒத்திருக்க வேண்டும்
எண்ணங்கள் மங்கிவிட்டன.
படுத்துக் கொள்வது எனக்கு மிகவும் இயல்பானது.
பிறகு, வானமும் நானும் திறந்த இதயத்துடன் உரையாடுவோம்,
அது, நான் இறுதியாக படுத்துக் கொள்ளும்போது பயனுள்ளதாக இருக்கும்:
பின்னர் மரங்கள் என்னை ஒரு முறை தொடக்கூடும், பூக்களுக்கான தருணமும் வாய்க்கும்.

 

தமிழில் : கௌதம சித்தார்த்தன் 

 

சில்வியா பிளாத் 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் போற்றப்பட்ட, ஆற்றல் மிகுந்த கவிஞர்களில் ஒருவர். 30 வயதில்  அவர் உயிரை மாய்தபோது, இலக்கிய சமூகத்தில் ஒரு மகத்தான பார்வையைக்  கொண்டிருந்தார்.  அவரது கவிதைகள் ஏராளமான வாசகர்களின் கவனத்தை ஈர்த்தன, அவர் தனது கவிதைகளில் விரக்தி, வன்முறை உணர்ச்சி மற்றும் மரணத்தின் மீதான ஆவேசத்தை கவித்துவமாக்கும் முயற்சியை உருவாக்கினார். புகழ்பெற்ற எழுத்தாளரான ஜாய்ஸ் கரோல் ஓட்ஸ், “ஆங்கிலத்தில் எழுதப்பட்ட போருக்குப் பிந்தைய கவிஞர்களில் மிகவும் புகழ்பெற்ற மற்றும் சர்ச்சைக்குரியவர்” என்று பிளாத் குறித்து போற்றினார். சக கவிஞர் டெட் ஹியூஸுடனான அவரது சிக்கலான திருமணம், அவளுடைய பெற்றோருடனான தீர்க்கப்படாத மோதல்கள், தன்னைப் பற்றிய அவளுடைய சொந்த பார்வை ஆகியன பிளாத்தின் கவிதைகளில் கருக்கொண்டு அவரது சொந்த மன வேதனையை ஆழ்ந்த சுயசரிதையுடன் ஆராய்கின்றன, சில்வியா ப்ளாத் (1932 – 1963)  கவிஞர் மட்டுமல்லாது, நாவலாசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளரும் ஆவார். அவர் 1963 இல் தற்கொலை செய்து கொண்டார். தனது மரணத்திற்குப் பிறகு  1982 ஆம் ஆண்டில், புலிட்சர் பரிசை வென்றார்.

 

I am Vertical
– Sylvia Plath

But I would rather be horizontal.
I am not a tree with my root in the soil
Sucking up minerals and motherly love
So that each March I may gleam into leaf,
Nor am I the beauty of a garden bed
Attracting my share of Ahs and spectacularly painted,
Unknowing I must soon unpetal.
Compared with me, a tree is immortal
And a flower-head not tall, but more startling,
And I want the one’s longevity and the other’s daring.

Tonight, in the infinitesimal light of the stars,
The trees and the flowers have been strewing their cool odors.
I walk among them, but none of them are noticing.
Sometimes I think that when I am sleeping
I must most perfectly resemble them —
Thoughts gone dim.
It is more natural to me, lying down.
Then the sky and I are in open conversation,
And I shall be useful when I lie down finally:
Then the trees may touch me for once, and the flowers have time for me.

 

Sylvia Plath was one of the most dynamic and admired poets of the 20th century. By the time she took her life at the age of 30, Plath already had a following in the literary community. In the ensuing years her work attracted the attention of a multitude of readers, who saw in her singular verse an attempt to catalogue despair, violent emotion, and obsession with death. In the New York Times Book Review, Joyce Carol Oates described Plath as “one of the most celebrated and controversial of postwar poets writing in English.” Intensely autobiographical, Plath’s poems explore her own mental anguish, her troubled marriage to fellow poet Ted Hughes, her unresolved conflicts with her parents, and her own vision of herself. On the World Socialist web site, Margaret Rees observed, “Whether Plath wrote about nature, or about the social restrictions on individuals, she stripped away the polite veneer. She let her writing express elemental forces and primeval fears. In doing so, she laid bare the contradictions that tore apart appearance and hinted at some of the tensions hovering just beneath the surface of the American way of life in the post war period.” Oates put it more simply when she wrote that Plath’s best-known poems, “many of them written during the final, turbulent weeks of her life, read as if they’ve been chiseled, with a fine surgical instrument, out of arctic ice.” Plath has inspired countless readers and influenced many poets since her death in 1963.

unnatham

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top