TAMILI

தமிழி

Two poems : Nikolai Zvyagintsev

Nikolay Zvyagintsev Poems
நிகோலாய் ஸ்வ்யாகின்செவ் கவிதைகள்

English Translation : Robert Reed, Svetlana Bochaver
ஆங்கில மொழியாக்கம் : ராபர்ட் ரீட், ஸ்வெட்லானா போச்சர்

Tamil Translation : Gouthama Siddarthan
தமிழ் மொழியாக்கம் : கௌதம சித்தார்த்தன்

 

தற்கால ரஷ்ய கவிஞரான நிகோலாய் ஸ்வ்யாகின்செவ் (Nikolai Zvyagintsev : 1967-) மாஸ்கோவின் கிராண்ட் விருது பெற்றவர். ரஷ்ய மற்றும் சர்வதேச கவிதை விழாக்களில் பெரிதும் பேசப்படும் இவரது கவிதைகள் இதுவரை 7 தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. பல்வேறு விருதுகள் பெற்றிருக்கும் இவரது கவிதைகள் ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், இத்தாலியன், ரோமானியன், எஸ்டோனியன் மற்றும் உக்ரேனிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக, நவீன மற்றும் இடைக்கால சீனக் கவிதைகளை மொழிபெயர்த்து வருகிறார்.

பல முறை, காரிலிருந்து இறங்கும் போது,
பயணப் பெட்டி மீது ஒரு சிறிய மேகத்தை உணர்ந்திருக்கிறேன்,
என் காலணிகளுக்குக் கீழே மழையின் சிரிப்பு, 
*பைபிளஸ் பட்டாம்பூச்சி போன்ற உறிஞ்சு தாளின் தூவல்.
 
ஒரு டஜன் புத்தகங்கள், ஆனால், ஒரே ஒரு தோள்பட்டை. 
மற்றும் சோப் பற்பசை, முக சவரப் பொருட்கள் கொண்ட 
அந்தப் பெட்டியில் பிதுங்கியிருந்த நுரை 
ஒரு நூற்றாண்டுப் படிகளை குமிழ்க்கிறது. 
 
இப்போது, கபில நிற முகம் கொண்ட அந்த நீர்த்துளி 
தனது தக்கையில் இரண்டு விஷயங்களை வரைகிறது:
ஒரு முயல்குட்டியாகவும், புஷ்கினின் கவிதையாகவும் 
மற்றும், கண்ணாடியில் ஒரு பாதத்துடன் தன்னை வெளியேற்றுகிறது.
*bibulous butterfly : ரஷ்யப்பகுதிகளில் அதிகமாகக் காணப்படும் கழுகுத் தன்மை கொண்ட பட்டாம் பூச்சி.  இந்த பட்டாம்பூச்சியைப் பற்றி பல புராணங்களும் மூடநம்பிக்கைகளும் உருவாவதற்கான அடிப்படையாக அமைந்தது.

Несколько раз, покидая вагон,
Чувствовал облачко с полки багажной,
Хохот дождя под моим сапогом,
Лист штукатурки, как бабочка-бражник.​

С дюжиной книг, одиноким плечом,
Парочкой тюбиков с мыльною пеной
Кто-то в железный влезал сундучок,
Ехал ко мне через сотню ступеней.

Двое да пробочка минус вершок,
Рыльце кофейное сторожа капель.
Беленький заяц, как Пушкин – стишок,
Сам барабанил по зеркалу лапой.

 

Several times, on leaving the carriage,
I’ve sensed a small cloud over the luggage rack,
The laughter of rain under my shoes,
A fragment of plaster like a bibulous butterfly.

With a dozen books but only one shoulder,
Like a couple of tubes of shaving cream,
Someone has squeezed into this iron trunk,
Scaled a century of steps for me.

Two people and a cork just drawn,
The coffee-coloured face of the keeper of drops.
There’s a white hare who looks like Pushkin – a verse
Drumming itself out with a paw on the mirror.

 

*********

 

தியோ, என் சகோதரனே, நான் காத்திருப்பது எதற்கெனில் –
என் கைகளில் பாலையின் வெம்மையும், என் தூரிகையில் உறைந்த பனியும்,
என் செவிக்கு நெருக்கமாக இருப்பதால், சத்தம் வலுவாகக் கேட்காது.
எனவே, நான் உனக்கு எழுதுவதற்கு இதுதான் தருணம்.

அண்மையின் வாசலில் நுழைவது குறித்து,
ஒரு துப்பாக்கி இலக்கில் சூரியனைச் சுட்டிக்காட்டு,
உன் மனதில் என்ன நடக்கிறது,
செந்தணல் புற்களைப் பார்க்கும்போது

பேரழகுடன் சாளரங்களும், கதவுகளும்
ஸ்படிகமாக மினுக்கும் கண்களில்
வெள்ளி நாணயங்களின் அளைதலில்
நீரில் மீனாய் கைப்பிடித்திருக்கலாம் நீ.

 

Брат мой Тео, чего я жду –
Мои руки в сахаре, хвост во льду,
Если ближе к уху, сильнее шум.
Лучше я тебе напишу,

Как войти в соседнюю дверь,
Направить солнце на револьвер,
И что случится в твоей голове,
Когда увидишь в рыжей траве

Окна и двери такой красоты,
Глаза из олова и слюды,
Все монеты, которые ты
Мог бы выловить из воды.

 

My brother Theo, what am I waiting for –
I have sugar on my hands, and my tail in the ice,
If it’s closer to my ear, the noise is stronger.
I’d better write to you.

How to enter a neighboring door,
Point the sun at a revolver,
and what will happen in your head,
when you’ll see in read grass

Windows and doors of such beauty,
Eyes of tin and mica,
All the coins, that you
Could have fished out of the water.

***********

Nikolay Zvyagintsev was born in 1967 in Moscow. He graduated from the Moscow Architectural Institute. Zvyagintsev worked as an architect-restorer for several years, than left architecture for advertising, where he has worked for the last fifteen years. At present Zvyagintsev is the chief art director in an international advertizing agency.

Nikolay Zvyagintsev became a member of the “Poluostrov” (“Peninsula”) group, together with Igor Sid, Maria Maksimova, and Mikhail Laptev at the beginning of the 1990s and participated in Bosporus forums on contemporary art and culture (1993-1995).

Zvyagintsev’s poems were first published late 1991 in “Russian Courier” newspaper. Since that time he has published poetry in numerous newspapers, magazines and almanacs. Zvyagintsev has seven published books of poetry including Спинка пьющего из лужи (The Spine of the One Who’s Drinking from a Puddle, 1993), Законная область притворства (The Legal Terrain of Hypocrisy, 1996), Крым НЗ (Crimea ES, 2001), Туц (Toots, 2008), and Все пассажиры (All the Passengers, 2017). Poems by Nikolay Zvyagintsev were translated into English (Essays in poetics, 1994), French (Lettres Russes, 2003), Ukrainian, German, Spanish, Romanian, and Estonian.

Zvyagintsev was shortlisted for the 2008 Andrei Bely Award for his collection of poems, Toots.

unnatham

2 thoughts on “Two poems : Nikolai Zvyagintsev

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top