TAMILI

தமிழி

Two poems : Raúl Zurita

Raúl Zurita Poems
ராவுல் ஸூரிட்டா கவிதைகள்

English Translation : Anna Deeny Morales
ஆங்கில மொழியாக்கம் : அன்னா டீனி மொரல்ஸ்

Tamil Translation : Gouthama Siddarthan
தமிழ் மொழியாக்கம் : கௌதம சித்தார்த்தன்

 

லத்தீன் அமெரிக்காவின் மிகவும் பிரபலமான மற்றும் சர்ச்சைக்குரிய கவிஞர்களில் ஒருவரான ராவுல் ஸூரிட்டா (1950 – ) ஒரு சிலிக் கவிஞர். சால்வடார் அலெண்டேவின் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை அகற்றிய அகஸ்டோ பினோசேவின் 1973 அமெரிக்க ஆதரவு இராணுவ சதித்திட்டத்திற்குப் பிறகு, ஸூரிட்டாவின் கவிதைகள், சிலி மக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் அட்டூழியங்களையும் காத்திரமான கவிதை மொழியில் முன்வைத்தன . 2000 ஆம் ஆண்டில் சிலி இலக்கியத்திற்கான தேசிய பரிசை வென்றவர். உலகெங்கிலும் ஸூரிட்டாவின் பாடல்களும், கவிதைகளும் புகழ் பெற்று விளங்குகின்றன. இவரது படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

 

இறுதிக் கவிதை

பிறகு, தரை நோக்கும் என் எரிந்த கன்னத்தை
இந்தக் கடினமான சரளை பூமிக்கு எதிராக
– ஒரு நல்ல தென் அமெரிக்கனைப் போல –
ஒரு நிமிடம் வானத்தை நோக்கி என் முகத்தை உயர்த்துவேன்
தேம்பலுடன் ஏனெனில், நான் நம்பும் மகிழ்ச்சீகரத்தை,
திரும்பியிருக்கும் தகர்க்க முடியாத நட்சத்திரங்களில் மீண்டும்காண.

 

POEMA FINAL

Y entonces, aplastando la mejilla quemada
contra los ásperos granos de este suelo pedregoso
–como un buen sudamericano–
alzaré por un minuto más mi cara hacia el cielo
llorando
porque yo que creí en la felicidad
habré vuelto a ver de nuevo las irrefutables estrellas.

 

LAST POEM

Then, ground my burned cheek
against this rough gravel stone earth
– like a good South American –
I’ll lift up my face one minute more toward the sky
weeping
because I who believed in happiness
will have turned to see again the irrefutable stars.

 

*********

 

அனைத்தும் உள்ளன  உங்களிடம்
வானம், நெருப்பு, பூமி,
சூரியன், கிரகங்கள்

நீர், காற்று. அல்லது நாம் அனைவரும் அல்லது அனைத்துமான ஒரு கானல். குளிரும் பனியும் போர்த்திய காலையில், மெல்லிய சாரல்காற்றினூடே மணலில் தவழும்  சிறு சிறு வண்டுகளின் ரீங்காரமும்,  கப்பல்துறைமுகத்தின் மையப்பகுதிகளுக்கு இடையில் காற்றின் வளைச்சலும், கடலின் அலைச்சலும். . .

நிலையூன்றி நிமிரும் என் கால்களில், என் விற்கரங்களில் பாருங்கள். கைகளின் தசைநார்கள் முறுக்குகின்றன: நீங்கள் அனைவரும் என்னுடன் துடுப்பு வலிக்கிறீர்கள்; அது, நாம் ஒருவருக்கொருவர் பார்க்கும் எல்லா சூரிய உதயங்களும், வானங்களில் நிகழ்த்தும் பித்தஒளி, மேலும், நட்சத்திரங்களின் முதல் இழை அவிழும்போது, நம் வாழ்வில் முன்பே இருந்த சத்த ஒலி.  
 
அல்லது நாம் எல்லோருமே அல்லது எல்லாமே ஒரு கனவுதான்: கடற்படைகளுடன் வீங்கிய நீரோடைகள் மற்றும் நகரங்கள்,  ஒடுங்கிய கன்னங்களுடன் மக்கள், அவர்களின் பிளவு பட்ட தோள்கள், அவர்களின் திறக்க முடியாத வாய்களின் உமிழ்ச்சி  (கடல் போல, காற்று போல,  அல்லது இரண்டும் இணைந்த அலைகள்போல) அல்லது நாம் அனைவரும் குரல்கள் அல்லது அது வீசும் காற்று மட்டுமே…  நீரின் மேற்பரப்பை வெறித்தனமாகச் சுழட்டும் சூறாவளியால் பளீரிடும் உங்கள் கண்களின் கூச்சம் என்னுடையது.  மின்னல், மழை, நிரம்பி வழியும் ஆறுகள்…
தன்னைத்தானே நிரம்பி வழியும் காதல், ஒளி, நாம் புனைந்த தொன்மங்கள் (இறுகும் வலையாக, கழுத்துத் துண்டு போல குரல்வளையை நெரிக்கின்றன ).
வளைந்த என் முதுகையும், விரல் நுனியில் பின்னிப் பிணைந்திருக்கும் நரம்புகளின் வார்ப்பையும் பாருங்கள்,  என் விலா எலும்புகள் கடினமாகின்றன. நாம் வரலாற்றின் வீர சாகசக்கதைகள் கொண்டவர்கள் : உலகியலுக்குள் நீளும் நரம்புகளின் நீரோட்டத்தில் சுண்டுகின்றன விரல்கள்.  ஆம், உன் நிலப்பகுதிகளில் ஒலிக்கும் எல்லாக் குரல்களிலும்,  என் குரல்.   
 
காட்டுப் பறவைகள் இடம் பெயரும் வானத்தின் கீழ் மலரும், பூவின் மொட்டு திறக்கும் கணம், சிலந்தி வலையின் மௌனம், சிவந்த  செவுள்கள் படபடக்கும் மீன் மற்றும் நாம் ஒன்றாகக் கடந்து வந்த கடல் அலைகள்.   
அல்லது, இது எதுவும் இல்லை; புல் மீது படர்ந்த பனிப் படிகமும் காற்றில் நகர்ந்த இலைகளும் (நாடுகள், கட்டாய அணிவகுப்புகள், அழிக்கப்பட்ட படைகள், மற்றும் இலைகளின் சரசரப்பில் விசும்பும்  உயிரற்ற நகரங்கள்) 
என் மார்பின் ஓலம்,  நான் பாடும் அழியாத நிலங்களை நோக்கி சுவாசம் கொள்கிறது : பசிபிக். இது உங்களுடையது,  அறியப்படாத பனிப்பாறைகள் குறித்த சீற்றத்தின் பாடல்,  ஆதாம் என்று பெயரிடப்பட்ட முதல் ஆண்களின் பாடல், மற்றும் ஏவாள் என்று பெயரிடப்பட்ட முதல் பெண்களின் குரல் ஒலிக்கிறது  “எழுந்து நட”. எங்களுடன் ஈர மண்ணில் கால் பதித்து நடந்து வரும் அன்பாக, நிலப்பரப்புகளிலிருந்து உயர்ந்தெழும் குரலாக. 

காற்றில் திறக்கும் நீரோடைகளின் ஒலியைக் கேளுங்கள்: அவை உங்களின் உருவங்கள், உங்களின் அவதாரங்கள், ஒலிகள்.. இது போன்ற ஒரு வானத்தில் நீங்கள் கனவு கண்டது என்னுடைய கனவில் பாயும் நதிகளையும்தான்.  
இப்படியான ஒரு நாளில் நான் உங்களுடன் பேசும் இந்தக் கவிதையை முடிக்கிறேன். 18 ஆண்டுகளுக்கு முன்பு தசாப்தம் தொடங்கியது. வெளியே இரவு மற்றும் மேகங்கள் சில நட்சத்திரங்களை வெட்டுகின்றன.
TODO ESO ESTÁ EN TI
el cielo, el fuego, la tierra,
el sol, los planetas

el agua, el aire. O somos todo eso o todo es un espejismo. El fresco de la mañana y el rocío, la luz de la tempestad y el temor del pequeño escarabajo escurriéndose en la arena, el graznido del viento entre los pivotes de los muelles, las ondas del océano . . .
Mira así mis piernas flectadas, mis arqueados brazos. el nudo de mis manos torciéndose sobre los remos: son todos los hombres bogando con nosotros; todos los amaneceres, la locura de los cielos entrevistos, el rumor que ya antes había alojado a nuestra vida cuando se desprendió el primer filamento de las estrellas.
O somos todo eso o todo es un sueño: las corrientes henchidas de ciudades, de flotas, de gentes que nuestras mejillas pegadas fueron surcando, que nuestros hombros, que nuestras inseparables bocas fueron surcando (adheridas como el mar, como el aire, como dos rompientes que nacieron juntas).
O somos todas las voces o es sólo el aire el que habla . . . el huracán que enloquece la superficie de los lagos y el crujido de las quillas en la marejada, el fulgor de tus ojos cruzados con los míos, el relámpago, la lluvia, los ríos que se desbordan . . .
El amor que se desborda, la luz, los grandes mitos en que fuimos tejidos (entrampados, tejidos como una bufanda que nos estrangula).
Mira entonces la curva de mi espalda, la urdiembre de nervios que se van entramando hasta las yemas, hasta los dedos crispados contra las cuadernas. Somos nosotros esa saga entonces y la historia: la deriva de venas que los ríos prolongaron a la carne del universo. Sí, mi voz que es todas las voces y tu continente.
Las salvajes emigraciones de los pájaros y el celeste de la flor abriéndose en su capullo, el instantáneo silencio de la araña en su red, el aleteo rojo de los peces y ese ponto tumultuoso que cruzamos juntos.
O somos todo eso o nada; el copo helado sobre la hierba y las hojas movidas por el viento (países, marchas forzadas, ejércitos destruidos, ciudades que ya no existen, son los que pasan silbando entre las hojas).
El aliento, el fuelle de mi pecho inclinándose hacia los territorios indomables que canto: el Pacífico. Es tuyo entonces el canto de las furias, de los témpanos desconocidos, de la muchedumbre de primeros hombres que se llamaron Adán y de primeras mujeres que se llamaron Eva cuando el barro, cuando el amor inmovilizado en la piedra respondió a la voz: “camina”, y de amor los paisajes se levantaron del barro como velámenes caminando con nosotros.
Escucha entonces el rumor de los torrentes abriéndose en el viento: son imágenes que te pertenecen, encarnaciones que nacieron contigo, sonidos, ríos del sueño que es mío y que tú soñaste en un cielo como éste.
En un día como éste en que termino este poema hablándote. Hace 18 años comenzó el milenio. Afuera es de noche y las nubes recortan algunas estrellas.

ALL OF THAT IS IN YOU
the sky, the fire, the earth,
the sun, the planets

the water, the air. Or we are all that or all is a mirage. The morning cool and the dew, the light of the tempest and fear of the small beetle scurrying in the sand, the grain of wind among the pivots of piers, and the waves of the sea . . .
Look like this at my bent legs, my arched arms. The knot of my hands twisting over the oars: they are all men rowing with us; all sunrises, the madness of those skies seeing each the other, the noise that already before had been lodged in our life when it unfastened itself that first filament from the stars.
Or we are all of that and all is a dream: the currents bloated of cities, of floats, of peoples who our cheeks struck went on scoring, that our shoulders, that our inseparable mouths went on scoring (stuck like the sea, like the air, like the breakers that were born together). Or we are all the voices or it is only the air that speaks . . . the hurricane that goes mad the surface of the lakes and the snap of the breastbone in the heavy seas, the brightness of your eyes crossed with mine, the lightning, the rain, rivers that overflow . . .
Love that overflows itself, the light, the great myths that we were sewn (snared, sewn like a scarf that strangles us).
Look then at the curve of my back, the warp of nerves that go on making my framework to my fingertips, to my fingers stiff against my ribs. We are that saga then of history: the drift of veins that rivers prolong to the universe flesh. Yes, my voice that is all the voices and your continent.
The wild emigrations of birds and the celeste of the flower opening itself in its bud, the instantaneous silence of the spider in its web, the red palpitation of fish and that tumultuous point we cross together.
Or we are that or nothing; the flake frozen over grass and leaves moved by the wind (countries, forced marches, armies ruined, cities that don’t exist anymore, they are they who whistle with leaves).
The breath, the bellows of my chest bending over toward the indomitable territories I sing: the Pacific. It is yours then the song of the furies, of unknown icebergs, of the throng of first men whose names were Adam and first women whose names were Eve when mud, when the love immobilized in the stone answered the voice: “walk,” and of love for the landscapes they got up from mud like sails walking with us.
Listen then to the noise of the torrents opening themselves up in the wind: they are the images that belong to you, incarnations that were born with you, sounds, rivers of the dream that is mine and that you dreamed in a sky like this.
On a day like this one in which I finish this poem speaking with you. 18 years ago the millennium began. Outside it’s night and the clouds cut against a few stars.

 

Raúl Zurita is one of Latin America’s most celebrated and controversial poets. After Augusto Pinochet’s 1973 US-supported military coup that ousted Salvador Allende’s democratically elected government, Zurita’s poetry sought to register the violence and atrocities committed against the Chilean people and the corruption of the Spanish language. During the dictatorship that lasted from 1973 to 1990, Zurita published a trilogy of books (Purgatory, Anteparadise, and The New Life), wrote poems in the sky above New York City, bulldozed poems in the Chilean desert, and helped to form the art collective “Colectivo de Accion de Arte” that used performance as an act of political resistance. Of his early poetry, C.D. Wright has written: “Under the eyes of church and dictatorship, he began to write and publish his poetry, juxtaposing secular and sacred, ruled and unruled. With a mysterious admixture of logic and logos, Christian Symbols, brain scans, graphics, and a medical report, Zurita expanded the formal repertoire of his language, of poetic materials, pushing back against the ugly vapidity of rule by force.”

Zurita was awarded the Chilean National Prize for Literature, a scholarship from the Guggenheim Foundation, and he has held poetry readings at numerous American universities including Harvard, Yale, Stanford and Berkeley. His books in English translation include Anteparadise (translated by Jack Schmitt), Purgatory (translated by Anna Deeny), INRI (translated by William Rowe) and Song for His Disappeared Love (translated by Daniel Borzutzky). He lives in Chile.

 

unnatham

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top