TAMILI

தமிழி

Li-Young Lee’s poem

நான் என் அம்மாவைப் பாடச் சொல்கிறேன்..

– லி-யங் லீ

அவள் ஆரம்பிக்கிறாள், என் பாட்டி அவளுடன் சேர்ந்து கொள்கிறாள்.
தாயும் மகளும் இளம் பெண்களாகப் பாடுகிறார்கள்.
என் தந்தை உயிருடன் இருந்தால், அவரும் இணைந்து கொள்வார்
அவரது அக்கார்டியனை இசைத்தவாறு, ஒரு படகோட்டத்தின் லாவகத்துடன்.

நான் ஒருநாளும், பீக்கிங் அல்லது கோடைகால அரண்மனையில் இருந்ததில்லை
நான் பார்க்க, படகுவீடும் மிதக்கவில்லை.
குயென் மிங் ஏரியில் மழை தொடங்குகிறது,
சுற்றுலாப் பயணிகள் புல்வெளியில் ஓடிக் களிக்கின்றனர்.

ஆனால், பாடுவதைக் கேட்க நான் விரும்புகிறேன்;
நீர் அல்லிகள் மழையை தங்களுக்குள் நிரப்புகின்றன
அவை கவிழ்ந்து, தண்ணீரை மழையில் கொட்டுகின்றன,
பின் மீண்டும் மிதக்கின்றன, மேலும், நிரப்புகின்றன.

இரு பெண்களும் அழத் தொடங்கினர்.
ஆனால் தாங்கள் பாடுவதை நிறுத்தவில்லை.

 

தமிழில் : கௌதம சித்தார்த்தன் 

 

அமெரிக்காவில் வசிக்கும் கவிஞரான லி-யங் லீ (Li-Young Lee – 1957) சீன அரசியல் நாடுகடத்தப்பட்ட பெற்றோர்களுக்கு பிறந்தவர்.  லீயின் பெற்றோர் இருவரும் சக்திவாய்ந்த சீன குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்: லீயின் தாத்தா சீனக் குடியரசின் முதல் ஜனாதிபதியாக இருந்தார், லீயின் தந்தை மாவோ சேதுங்கின் தனிப்பட்ட மருத்துவராக இருந்தார். இந்தோனேசியாவில், கமலியேல் பல்கலைக்கழகத்தை உருவாக்க டாக்டர் லீ உதவினார். இருப்பினும், இந்தோனேசியாவில் சீன எதிர்ப்பு உணர்வு தூண்டத் தொடங்கியது, லீயின் தந்தை கைது செய்யப்பட்டு ஒரு வருடமாக அரசியல் கைதியாக கைது செய்யப்பட்டார். விடுதலையான பிறகு, லீ குடும்பம் ஹாங்காங், மக்காவ் மற்றும் ஜப்பான் வழியாக தப்பி ஓடி, 1964 இல் அமெரிக்காவிற்கு வந்து சேர்ந்தது. கவிதைகளுக்கான பல்வேறு விருதுகள் பெற்றுள்ள இவரது கவிதைகள், இதுவரை ஐந்து கவிதை தொகுப்புகளாக வெளிவந்துள்ளன.

************

I Ask My Mother To Sing
– Li-Young Lee

She begins, and my grandmother joins her.
Mother and daughter sing like young girls.
If my father were alive, he would play
his accordion and sway like a boat.

I’ve never been in Peking, or the Summer Palace,
nor stood on the great Stone Boat to watch
the rain begin on Kuen Ming Lake, the picnickers
running away in the grass.

But I love to hear it sung;
how the waterlilies fill with rain until
they overturn, spilling water into water,
then rock back, and fill with more.

Both women have begun to cry.
But neither stops her song.

 

****************

Le Pido a Mi Madre Que Cante
Trad. Enrique Solinas

Ella comienza, y mi abuela se une a ella.
Madre e hija cantan como niñas.
Si mi padre estuviera vivo, él tocaría
su acordeón y lo mecería como un barco.

Nunca estuve en Pekín, o en el Palacio de Verano,
ni permanecí en el gran Barco de Piedra para ver
el comienzo de la lluvia en el lago Kuen Ming Lake,
los excursionistas corriendo en la hierba.

Pero me encanta escucharlo cantado;
cómo los lirios acuáticos se llenan de lluvia hasta
volcarse, derramando agua en el agua,
luego vuelven a flotar, y siguen llenándose.

Ambas mujeres han comenzado a llorar.
Pero ninguna detiene su canción.

***********

 

Li-Young Lee – 1957 is an American poet. He was born in Jakarta, Indonesia, to Chinese parents. His maternal great-grandfather was Yuan Shikai, China’s first Republican President, who attempted to make himself emperor. Lee’s father, who was a personal physician to Mao Zedong while in China, relocated his family to Indonesia, where he helped found Gamaliel University. In 1959 the Lee family fled Indonesia to escape widespread anti-Chinese sentiment and after a five-year trek through Hong Kong and Japan, they settled in the United States in 1964. Li-Young Lee attended the University of Pittsburgh and the University of Arizona, and the State University of New York at Brockport.

unnatham

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top