TAMILI

தமிழி

Four Poems : Nader Naderpour

நாடர் நாடர்பூர் கவிதைகள்
Nader Naderpour  Poems
தமிழில் : கௌதம சித்தார்த்தன்
Translation in Tamil: Gouthama Siddharthan
பாரசீக மொழியிலிருந்து ஆங்கிலத்தில் :
ரோஜர் செடரத், ரூஹொல்லா ரேய்.
Translations from the Persian
By Rouhollah Zarei with Roger Sedarat
நாடர் நாடர்பூர் (1929-2000) தெஹ்ரானில் பிறந்தவர் மற்றும் ஐரோப்பாவில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றவர்.1940 களில் தனது முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட ஈரானுக்குத் திரும்பினார். 1960 களின் பிற்பகுதியில், “ஈரானின் எழுத்தாளர்கள் சங்கத்தை உருவாக்கினார், மற்றும், ஈரானிய தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சித் துறையின் இலக்கியத் துறையையும் இயக்கினார்.அவர் 1980 இல் புரட்சி சூழல் காரணமாக ஈரானை விட்டு வெளியேறினார், 1980 களின் பிற்பகுதி வரை பிரான்சில் வாழ்ந்தார், பின்னர் அமெரிக்காவுக்குச் சென்றார். ஈரானில் “புதிய கவிதை” இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராகக் கருதப்பட்ட அவர் பத்து கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டார். மேலும், இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
இரவு மலர்

நிலவொளி எரிந்தபோது
நட்சத்திரங்கள் பூத்த போது
கடற் தென்றல் வெண் நுரை மீது வீசியடிக்கும் போது
நீ நிர்வாணமாக தனிமையாகத் திரும்பி வருகிறாய்
வயலட் மற்றும் *டஃபோடில்ஸின் மணத்துடன்.

 
நெருப்பின் உயிரோட்டம் : உன் உதடுகள்
உருகும் தாமிர நிறம் : உன் கைகள்   
சூரியனுக்கு மேகமூட்டத்தின் படுக்கை போல
நான் உன் உடலில் நிரம்பியிருக்கிறேன்.

நட்சத்திரங்களுக்கு மத்தியில் தேர்ந்து நின்று  
மயக்கமூட்டுகிறாய்  
 
நான் வானத்தைப் பார்க்கிறேன் : அமைதியாக.
நீ என் கண்களைப் பார்க்கிறாய் : மர்மமாக.
இருஜோடி இமைகளும்  கிறங்குகின்றன
ஒரு மழை இரவில் இரு பறவைகளின் இறக்கைகள் போல

நீ புன்னகையுடன் இதழ் விரிக்கிறாய்.

காற்று உன்னுடன் சிணுங்குகிறது :
“இன்றிரவு என்ன ஒரு ஆழமான அமைதியான இரவு
தாலாட்டும் இல்லை, அழுகையும் இல்லை! ”


திடீரென்று ஒரு முத்தம் உன் உதடுகளை எரிக்கிறது

ஒரு பூ இதழைக் கொட்டும் தேனீ போல,  
சூடான முத்தம் திராட்சை ரசத்தை கொட்டுகிறது
நம் வாயில்.
உன் உதடுகள் புதிய நிறம்  பெறுகின்றன,
நீ கண்களை மூடி முத்தத்தை அனுபவிக்கிறாய் :
“என்ன ஒரு ஆழமான இரவு!”
நீ மெல்லிய கிறக்கத்துடன் கிசுகிசுக்கிறாய்.
 
விடியற்காலை வாத்துகள்
அடிவானத்தில் சிதறியிருந்த நட்சத்திரங்களைப் பொறுக்குகின்றன 
நிலவொளியில் விரித்திருந்த மணல் படுக்கையில் 
இருநிழல்கள் இணைந்த ஒற்றையைப் பார்க்கின்றன.

 

گل شب – نادر نادرپور

وقتی که چراغ ماه روشن شد
وقتی که گل ستاره ها روئید
وقتی که نسیم شور دریاها
کف های سفید آب را بوئید
تنها و برهنه باز می آیی
با عطر بنفشه ها و نرگس ها
لبهایت به رنگ زندۀ آتش
بازو ات به رنگ تفتۀ مس ها
پر میشود از تن تو آغوشم
چون بستر ابر از تن خورشید
میخندی و با کرشمه میگویی
کی میشود این ستاره ها را چید؟
من مینگرم به آسمان خاموش
تو مینگری به چشم من حیران
پلک من و تو به زیر می افتد
چون بال دو مرغ در شب باران
میخندی و باز میگشایی لب
همراه تو ناله میکند بادی
امشب چه شب عمیق آرامی است
در او نه نوازشی ، نه فریادی
ناگه لب تو ز بوسه میسوزد
چون برگ گلی ز نیش زنبوری
در کام من و تو – هر دو – می پیچد
زان بوسۀ تند طعم انگوری
لبهای تو رنگ تازه میگیرد
از لذت بوسه دیده میبندی
امشب چه شب عمیق آرامی است!
میگویی و زیرکانه میخندی
هنگام سپیده دم که اردکها
از بام افق ستاره برچینند
در بستر ماسه های مهتابی
از دور ، دو سایه را یکی بینند

 

Night Flower

When the lamp of the moon turned on
when the stars bloomed
when the briny breeze of the seas
sniffed at the white foam
you return, naked and alone
with the fragrance of violets and daffodils,
your lips: bright fire
your arms: molten copper
like a cloudy bed for the sun
I engulf your whole being
you giggle and coquettishly ask
to choose among the stars.
I look at the sky: silent.
You look at my eyes: mystified.
Our lids droop
like the wings of two birds on a rainy night
You laugh and open your lips,
the wind moans simultaneously:
“What a deep calm night is tonight
No caress, no cry!”
Suddenly a kiss burns your lips
like a bee stinging a flower petal,
the hot kiss emanates the tang of grapes
in our mouths.
Your lips get a new colour,
you close your eyes savoring the kiss with relish:
“What a deep calm night is tonight!”
You whisper with a sly chuckle.
At dawn when ducks
pick stars from the horizon’s rooftop
in a bed of moonlit sands
they see the two shadows as one!

 

இயற்கை வரைபடம்

அவள் பூமியின் நிர்வாணத்தை உடலாகக் கொண்டவள் :
வெண் மண்ணின் மென்மையுடன்,
பற்றி எரியும் இரு மலைகளுடன்
சூரியனைத் தழுவிக் கொண்டவள்
மற்றும் இரண்டு கரங்கள் ஒரு நதியாகக்
கீழே பாய்கின்றது
ஒரு பள்ளத்தாக்கின பிளவுக்கு.
அதன் அடிப்பகுதியில்
வளர்ந்திருக்கும் ஈரமான புல்
அவளின் சிவந்த புன்னகை போன்ற
நீரூற்று மூலம் பாய்ச்சப்பட்டது
அவளது குறுகிய பள்ளத்தாக்கிலிருந்து
தேம்பி அழுகிறது  சூர்யாஸ்தமனம்.

 

نقشه ی طبیعی

او ،‌ پاره ای ز پیکر عریان خاک بود
خاک سپید نرم
با آن دو تپه ای که در آغوش آفتاب
می سوخت گرم گرم
با آن دو رودخانه ی بازو
جاری به سوی دره ی آزرم
آن دره ای که سبزه ی نمناک انتهاش
از چشمه ای به سرخی لبخند رسته بود

 

Natural Map

She belonged to the earth’s naked body:
soft white soil
with two burning hills
embraced by the sun
and two arms of a river
flowing down
to an embarrassing cleft
at the bottom of which
grew a wet patch of grass
watered by a spring
as red as a smile.
I wept in the evening
of her narrow ravine.

 

விருந்து

இலையுதிர் நிலவு எரியும் ஒரு அறை,
மேசையின் மூலையில் ஒரு சிவப்பு விளக்கு,
இனிமையான உறக்கத்தில் பூமியும் வானமும்,
கண்காணிப்பு கடிகாரத்தின் இதயத் துடிப்பு.
இரண்டு கப் கசப்பான ஒயின்,
*இனிப்பு நட் நிரம்பிய இரண்டு கிண்ணங்கள்,
சீன பட்டின் மென்மையான உரை கொண்ட மெத்தை,
இரண்டு நிர்வாண கைகளின் மேல்
இரண்டு நிர்வாண கால்களின் கீழ்.

 

Feast

A room lit by the autumnal moon,
a red lamp on the corner of the table,
the earth and the sky in sweet sleep,
the heartbeats of the watchful clock.
Two cups of bitter wine,
two bowls of sweet nougat,
a soft quilt of Chinese silk,
the upper of two naked arms
the lower of two naked legs.

 

வேட்டை நாள்

இன்று வேட்டை நாள்.
நான் புறப்பட்டேன்,  மலையை நோக்கி
அடர்ந்த காடு முகம் சுளிக்கிறது
சூரியனின் பரந்த புன்னகையின் கீழ்.

தோட்டாவை உட் செலுத்தும் போது, நான் மறைந்துவிடுவேன்.
தாக்கிய பாறையிலிருந்து,
தீப்பொறி போல பாய்கிறது  சிறுத்தை
அதன் கூறிய பற்களை என் தொண்டையில் பதித்து,
என் சட்டையில் வண்ணமேற்றுகிறது பசுங்குருதியால்
மஞ்சள் கரு போன்ற என் மூளை தரையில் தெறிக்கிறது.
அது முந்திரிக் கொடிகளின் கீழ் ஈரத்துடன் பாய்கிறது.

روز شکار

روز شکار است
می روم امروز ، سوی دامنه ی کوه
می روم آنجا که زیر خنده ی خورشید
ابرو در هم کشیده جنگل انبوه
می روم آنجا که چون صفیر زند
تیر
ماده پلنگی چو شعله بر جهد از سنگ
دندان را در گلوی من بفشارد
پیرهنم را به خون تازه کند رنگ
مغزم چون زرده تخم ریخته بر خاک
جوشد در زیر شاخه های تر تاک

Hunting Day

Today is hunting day.
I set out to the mountain’s edge
where the dense forest frowns
under the sun’s broad smile.
When the bullet zips, I vanish.
The lioness leaps like the spark
from a struck stone,
sinking her fangs in my throat,
coloring my shirt with fresh blood
that splashes to the ground like yolk.
My brain gushes under the wet vines.

 

Nader Naderpour (1929–2000) published his first collection of poetry in the 1940s. In the 1960s he directed the literature department of the Iranian National Radio and Television. He left Iran in 1980. Regarded as one of the leaders of the movement of “New Poetry” in Iran, he published nine collections of poems. Naderpour was nominated for the Nobel Prize in Literature and was awarded the Human Rights Watch Hellman-Hammett Grant in 1993.

Rouhollah Zarei is an assistant professor of English, Yasouj University, Iran. He is the author of Edgar Allan Poe: An Archetypal Reading and co-authored The Unsaid: Nature and Nostalgia in the Poetry of Nader Naderpour (forthcoming).

Roger Sedarat is an Iranian American poet and translator. He is the author of two poetry collections: Dear Regime: Letters to the Islamic Republic and Ghazal Games

unnatham

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top