TAMILI

தமிழி

Ismail Kadare’s poems

நியூஸ்டாட் விருது  (The Neustadt Prize) என்பது அமெரிக்காவில் தோன்றிய முதல் சர்வதேச இலக்கிய விருது. சர்வதேச மொழிகளில்  இலக்கியத்தில் சிறந்து விளங்கும்  இலக்கிய ஆளுமைகளை அங்கீகரிக்கும் செயல்பாடாக  இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை  வழங்கப்படும் இந்த விருது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மார்க்வெஸ், ஆக்டேவியா பாஸ்,  செஸ்லோ மிலோஸ், தாமஸ் ட்ரான்ஸ்ட்ரோமார்  போன்ற மிகப்பெரும் இலக்கிய ஆளுமைகள் கடந்த வருடங்களில் இந்தப் பரிசை பெற்றுள்ளார்கள். பெரும் இலக்கிய கௌரவத்திற்குரிய இந்த விருது, இந்த வருடத்திற்காக (2019- 2020) அல்பேனிய எழுத்தாளரான இஸ்மாயில் கதாரேவுக்கு  வழங்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே சர்வதேச மேன் புக்கர் விருது பெற்றுள்ளதும் இங்கு குறிக்கத் தக்கது.
“சர்வாதிகாரமும் உண்மையான இலக்கியமும் என்றைக்கும் இணையாது … எழுத்தாளன் சர்வாதிகாரத்தின் இயல்பான எதிரி.”  என்று பிரகடனப்படுத்தும் இஸ்மாயில் கதாரே  (Ismail Kadare : 1936 -) புகழ்பெற்ற அல்பேனிய நாவலாசிரியர், கவிஞர், கட்டுரையாளர் மற்றும் நாடக ஆசிரியர் ஆவார், அவர் அல்பேனியாவில் தனது கவிதைகளின் வலிமை குறித்து புகழ் பெற்றார்.  ஃபிரான்ஸ் காஃப்கா மற்றும் ஜார்ஜ் ஆர்வெல் போன்ற இலக்கிய தீர்க்கதரிசிகளின் வரிசையில் பேசப்படும் இவர், தன்னைச் சுற்றியுள்ள தார்மீக, அரசியல் மற்றும் இன மோதல்களைக் கவனித்து உலகியல் வாழ்வை மறுபரிசீலனை செய்கிறார்.

 

இஸ்மாயில் கதாரே கவிதைகள் 

 

இந்த மலைகள் எதைப் பற்றிச் சிந்திக்கின்றன…
 
1
 
இந்த உயர்ந்த மலைகள் எதைப் பற்றிச் சிந்திக்கின்றன
நெடுஞ்சாலைக்கு அப்பால் தொலைவில் சூரியன் மறைந்தவுடன்?
இரவு கவிழும் அந்தியில் ஒரு மலையேறுபவர் புறப்படுகிறார்,
அவரது நீண்ட துப்பாக்கி,
நூறு மைல் நீள நிழலைத் தரையில் வீசுகிறது..துப்பாக்கி நிழல் விரைகிறது
மலைகள், சமவெளிகள், கிராமங்கள் மீது;
அதன் குழாய்களின் நிழல் அறையிருளாக விரைகிறது.
நானும் புறப்பட்டேன் மலையடிவாரத்தை நோக்கி
என் மனதில் எழும்பும்  ஒரு சிந்தனையின்
அலைக்களிப்பில்.சிந்தனையின் நிழல் மற்றும் துப்பாக்கியின் நிழல்
குறுக்கும் நெடுக்குமாக மோதிக் கொள்கின்றன  அந்திக் கருக்கலில்

 
2
 

அல்பேனியா, நீ எப்போதுமே இப்படித்தான் புறப்படுகிறாய்
உன் விரையும் கால்களில்
மற்றும் தோள்களில் தாங்கிய துப்பாக்கியுடன்.
நீ எங்கு செல்ல வேண்டும் என்று தெரியாமல் அலைகிறாய்,
மேகங்களும் மூடுபனியும் நிறைந்த காலையை நோக்கி,
சாம்பல் பூத்த திரட்சியான, இரவில் பிறந்ததைப் போல.
 
3
 
மேகமூட்டங்கள் நிலத்தைத் தின்றன
மற்றும் செங்குத்தான குன்றின் தளங்களை வெட்டின.
இவ்வாறு, பல நூற்றாண்டுகள் உங்கள் உடலைக் கொறித்தன
உங்கள் தசைநார்களும் விலா எலும்புகள் வெளிப்படும் வரை.

தசைகள்,  தசைநார்கள் மற்றும் விலா எலும்புகள்,
கற்பாறைகள், பாறைகள் மற்றும் மலைகள் மட்டுமே,
சிறிய சமனான நிலம்,
ஓ, எவ்வளவு சிறிய சமவெளி
பல நூற்றாண்டுகள் உங்களை விட்டுச் சென்றன !
பல நூற்றாண்டுகள் உங்களை வேட்டையாடுகின்றன
எங்கிருந்தாலும் அவர்கள் உங்களை அணுகலாம்.

நீங்கள் அவர்களை சந்தித்தபோது
அவர்கள் உங்களைத் தாக்கினர்,
காலத்தின் பற்கள்
உங்கள் தொடையில் பதிந்தன,
ஆனால் நீங்கள் பின்வாங்கவில்லை,
நீங்கள் விட்டுக்கொடுக்கவில்லை.
 
4
 
நீண்ட துப்பாக்கியை அகற்றவில்லை,  நீ
உன் தோள்களில் இருந்து,
காயங்களால் மூடப்பட்ட தோள்களிலிருந்து,
சதையும் எலும்புகளும் பிய்ந்துபோன தோள்களிலிருந்து.

நீ உப்புநீரில் ரொட்டி சாப்பிட்டாய்,
ஒவ்வொரு இரவும் உப்புநீரும் மக்காச்சோளமும்,
நீங்கள் கொஞ்சம் கொழுப்பை சேமித்தீர்கள்,
ஓ, அந்த சிறு துண்டுக் கொழுப்பு
நண்பர்களுக்கும்
நீண்ட துப்பாக்கிக்கான எண்ணெய்ப் பசைக்கும்.

குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள் பெண்கள்,
ஆனால் ஒரு துப்பாக்கி பெற்றெடுக்கிறது,  தோட்டாக்களை.
புனிதமான சேவையில் இரண்டும் சமம்.
அல்பேனியருக்கு:
தோட்டாக்கள் மற்றும் குழந்தைகள்.
குழந்தை நாளை உழவுக்கு அழைத்துச் செல்லும்
மேலும் இரவில் துப்பாக்கி அவனைப் பாதுகாக்கும்.
காலம், அல்பேனியாவின் தோள்களில் தோட்டாக்களை வீசும்,
மணமகளின் தோள்களில் போடும் அரிசி போல.

 
5
 
உரத்த மணியோசை
இரவில் ஆரவாரிக்கிறது
மலை முகடுகளில் எதிரொலிக்கும் .
அதன் நாவுகள் என்ன சொல்கின்றன,
பூசாரிகள் என்ன முணுமுணுத்தார்கள்
உயர்ந்தோங்கிய தேவாலயங்களில்

ஒலிப்பது மேற்கத்திய நாவுகளா?
அவர்களின் உயர் தேவாலயங்களுக்கு
அவர்களின் வெளிநாட்டு மொழிகளில்?
லத்தீன் தர்க்கப்படி, நீண்ட வாக்கியங்களில் சொன்னால்,
நீண்ட துப்பாக்கியை வளைக்கப் பாடுபடுங்கள்.
 
*இந்தக் கவிதை அல்பேனிய மொழியில் மிகவும் பிரசித்தம் பெற்றது.  கவிதையின் அல்பேனியத் தலைப்பான  “Përse mendohen këto male”  என்ற பெயரில் விக்கிபீடியா பக்கமே உள்ளது. 24 பகுதிகளாகக்கொண்ட இந்தக்கவிதையின் 5 பகுதிகள் மட்டுமே இங்கு மொழியாக்கம் பெற்றுள்ளன. இதன் மூலமான அல்பேனிய மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ள ராபர்ட் எல்ஸி எழுதிய முக்கியமான நூல் : Albanian Literature: A Short History.அவசியம் படிக்க வேண்டிய நூல்.

 

What are these mountains thinking about

– Ismail Kadare

1

What are these lofty mountains thinking about
As the sun sets in the distance beyond the highway?
A mountaineer sets out at the fall of night,
His long rifle
Casting a hundred-mile-long shadow on the ground.

The shadow of the rifle hurries
Over mountains, plains, villages;
The shadow of its barrels hastens through the dusk.
I too set forth along the hillside
With a thought in my mind
Somewhere.

The shadow of the thought and the shadow of the rifle
Cross and collide in the twilight.

2

This is how you have always set out, Albania,
On your long legs
And with a long rifle.
You wandered without knowing where to go,
Onwards toward the morning full of clouds and mist,
Grey and ponderous, as though born of night.

3

Cloudbursts ate away at the land
And bared the bases of the cliffs.
Thus, the centuries have gnawed away at your body
Until your very sinew and ribs were exposed.

Sinew, sinew and ribs,
Only boulders, rocks and mountains,
Little flat land,
Oh, how very little flat land
The centuries left you!
The centuries gnawed at you like hounds
Wherever they could get at you.

When you met them
They attacked you,
The teeth of time
Dug into your thighs,
But you did not turn back,
You did not yield.

4

You never removed the long rifle
From your shoulders,
From shoulders covered in wounds,
From shoulders of skin and bone.

You ate bread in brine,
Brine and maize every night,
And you saved a little fat,
Oh, that little bit of fat
For friends and for the long rifle,
To grease the long rifle.

Women give birth to babies,
But a rifle gives birth to bullets,
And the two have been equally sacred
To the Albanian:
The bullets and the babies.

The child will tomorrow take to the plough
And the rifle will protect him at night.
Time fired bullets over the shoulders of Albania
Like rice thrown over the shoulders of a bride.

5

The pealing of bells
Rung by night
Resounded over the mountain slopes.
What were the bells saying,
What were the priests murmuring
To their high churches
In their foreign tongues?
Latin logic, in long sentences,
Strove to bend the long rifle.

Translated by : Robert Elsie

unnatham

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top