TAMILI

஥ தமிழி

Emilio Paz’s poems

 

எமிலியோ பாஸ் கவிதைகள்

 

நித்யத்துவம்

மனிதன் ஒரு உலகியல் வஸ்து
ஓர் ஆற்றைப் போல
ஏரியைப் போல
நஞ்சுக் கொடியைப் போல
நட்சத்திரங்களை போல
வெறுமையையும், வாழ்வையும் போல
கைகளால் காலத்தோடு பிணைக்கப் பட்டவன்
ஆனால் மனிதன் நித்தியத்துவத்தை பிடித்துக் கொண்டிருக்கிறான்
காலத்தை வென்று விடுவோமென்கிற நினைப்பில்
மனிதன் கடவுள் விளையாட்டை ஆடுகிறான்.

ஆனால் சலிப்பூட்டுவதாய் உள்ளது, கடவுளின் தனிமை
மனிதன் தன் முகத்தை கண்ணாடியில் பார்க்கிறான்
அவன் நிலவின் மேற்பரப்பில் தெரியும்
இருக்கமான உருவத்திடம் வேண்டிக் கொள்கிறான்.
முன்னோர்களை சந்தித்த முயல் குட்டியிடம் வேண்டிக் கொள்கிறான்.
அதன் பயனை உங்கள் பேரன்கள் அனுபவிப்பார்கள்
சாய் மாலை வட்டத்துடன் மனிதன் விளையாடுகிறான்.
அதன் மூலம் விடை தெரியக் கூடிய புதிர் வினா ஒன்றினை சொடுக்கி விடுகிறான்.

மனிதன் நித்யத்துவத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறான்.
காதலிலும், கவிதையிலும்
அதனுடனே தொக்கி வருகிறான்.
அழகியலின் கைவினைஞனாக,
ஞான குருவாக வருகிறான்.
மனிதன் கவிதை எழுதும் வேளையிலும்
நித்யத்துவத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறான்.

 

AETERNUS

Man is a temporal being
like a river,
like a lake,
like the placenta,
like the stars,
like emptiness and existence.
Fastened to the time, by the hand.
But man clings to the eternal,
to the possibility of stopping time.
Man plays to be God,
but without that boredom of stillness.
Man looks himself in front of a mirror
and he prays to the tense image
that rest on the face of the moon;
to that Rabbit who saw the ancients
and now your grandchildren will see.
Man plays with parabola and gear
of a mystery that can be solved.
Man clings to eternity
in love and in verse,
as the artisans of beauty,
as the wisdom gurus.
Man clings to eternity in a poem.

***********

 

மெல்லிசை VII

உன் மார்பில்,
நெஞ்சுக் குழியில்
என் நிம்மதியை நான் அடைந்தேன்.
இழக்கப்பட்ட ஆன்மாக்கள்
இன்று வீட்டின் முகப்பறையில்
இங்கே, வேடர்களைக் கண்டு
நடுங்காத பறவைகளுக்கிடையில் நான்!

உன் ஒரு வார்த்தை என் ஆன்மாவை
கட்டிப் போட்டிருக்கிறது.
உன் கரங்களின் இடையே
உன் மடியில்
அமர்ந்திருக்கிறான் கடவுள்.
அவன் என் மேல் கரிசனம் கொண்டு
என் முப்பாட்டன்களின் கதைகளை
என் காதுகளில் ஓதுகிறான்.

இங்கே தனிமையில் தவிக்கும் ஏவாள் இல்லை.
அவள் குற்றமற்றவளும் இல்லை.
உன்னுடைய ஆதி யோனி!
அங்கே தான் என் எண்ணங்கள் உரைகின்றன
அங்கே தான் மனித உணர்வுகள் தளர்வுறுகின்றன
பாலைவனத்தில் வளரும் நறுமண செடியை தான்
உன் கண்களில் நான் பார்க்கிறேன்
உன் புலன்கள் எனக்கு கவிதையாய் தெரிகின்றன
அவற்றை தேவதூதர்கள் தன்னுடையதாக அறிவிக்கின்றனர்
உன்னுடைய மலர்ச்சியான இருப்பிலே
என்னுடைய இருண்ட அறிவு
ஒளி பெருகிறது. இவ்வுலகின் அனைத்துக்கும்
ஒரு அர்த்தமும், ஒழுங்கும் உள்ளதாக தோன்றுகிறது.
இதோ இங்கே நீ இருக்கிறாய்
என் பயங்களை களைகிறாய்
ஒரு பறவையாக என்னை வானுயர அனுமதிக்கிறாய்

அந்தப் பறவை
ரத்தம் சிந்தாமல்
தன் மூச்சை நிறுத்திக் கொள்கிறது
நீ போகாதே!
நீ சாகாதே!
நீயாக இருப்பதில் இருந்து சற்றும் விலகாதே
என் உயிரே!

MELODÍA VII

On your chest,
Over your breasts,
I found my peace.
Soul that were lost,
today is in its home.
There, where the birds
are not afraid of hunters,
your word is holding my soul.
Between your hands,
on your thighs
there is God who takes pity on me
and he talks to me,
softly,
about my ancestors stories.
Here there is no exiled Eva
neither innocent
In your marine meats,
there´s the origin of my thoughts,
the nobility of human feelings.
Carnations that are born in the deserts
are the ones I find in your eyes,
and yoursenses are poetry
that is proclaimed by archangels.
In your luminiscent precence,
the darkness of my reason
find light and all the world
begin to have sense and order.
Here you are,
embracing my fears
and allowing me to be a bird
which cuts the breath,
without causing blood.
Never leave,
never die,
never stop being you,
My dear.

தமிழில் : கண்ணன் ராமசாமி

 

Emilio Paz (Lima, 1990) professor of philosophy and religion, graduated from the Universidad Católica Sedes Sapientiae. Author of Septiembre en el silencio (Club de lectura poética, 2016), “La balada de los desterrados” (Ángeles del Papel Editores, 2019) and Laberinto en versos (La tortuga ecuestre, n ° 394, 2018). Winner of the Month of letters contest of the Marco Antonio Corcuera Foundation and IX International Competition “El Parnaso del Nuevo Mundo” category “story”. He has publications in magazines and anthologies from Peru, Mexico, USA, Venezuela, Argentina, Chile, Costa Rica and Spain. He has participated in different international and national recitals of Peru. He teaches philosophy and poetry workshops. Directed the blog El Edén de la poesía (https://edenpoetico.wordpress.com)

unnatham

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top