TAMILI

தமிழி

Gabriela Mistral Poems

கேப்ரியேலா மிஸ்ட்ரல் (1889 – 1957) புகழ் பெற்ற சிலி கவிஞர்,  இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்.

நோய்வாய்ப்பட்ட தனது தாயைப் பராமரிப்பதற்காக மிஸ்ட்ரல் தனது பதினைந்து வயதில் முறைப்படி பள்ளியில் சேருவதை நிறுத்தினார், ஆனால் தொடர்ந்து கவிதை எழுதினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது காதலரான ரோமியோ யுரேட்டா மற்றும் நெருங்கிய மருமகனின் சோகமான மரணங்களுக்குப் பிறகு இதயம்
முற்றிலுமாக உடைந்தது.  அவருடைய பிற்கால கவிதைகளில் பெரும்பாலானவை மரணத்தின் கருப்பொருளை மையமாகக் கொண்டிருந்தன.

தமிழில் : கௌதம சித்தார்த்தன் 

 

உங்கள் கரத்தை எனக்குத் தாருங்கள் 

– கேப்ரியேலா மிஸ்ட்ரல்  

அன்பு கெழுமிய உங்கள் கரத்தை எனக்குத் தாருங்கள்,
நீட்டிய கரங்களை என்னுடன் பிணைந்து  நடனமாடுங்கள்.
உங்கள் கையை எனக்குக் கொடுத்து என்னுடன் நடனமாடுங்கள்.
ஒரே ஒரு மலர், அதற்கு மேல் எதுவும் இல்லை,
ஒற்றை மலர் என்பது நாம் தான்.

அதே லயத்தில் இணையும் நடனத்தில்,
நீங்கள் என்னுடன் பாடலைப் பாடுவீர்கள்.
காற்றில் அசைகிறது புல், அதற்கு மேல் எதுவும் இல்லை,
காற்றில் அசைபடும் புல் என்பது நாம் தான்.

நான் *ஹோப் என்று அழைக்கப்படுகிறேன், நீங்கள் *ரோஸ் என்று அழைக்கப்படுகிறீர்கள்:
ஆனால் நாம் பெயர்களை மறந்து  ஆடுகிறோம்
மலைகளில் ஒரு நடனம், அதற்கு மேல் எதுவும் இல்லை,
மலை நடனம் என்பது நாம் தான்.

தமிழில் : கௌதம சித்தார்த்தன்

குறிப்புகள் :

* நடனமாடும் இருவரின் பெயர்களையும்,  ஆணின் பெயரை Hope (நம்பிக்கை)  என்றும், பெண்ணின் பெயரை Rose (ரோஜாமலர் ) என்றும்,  இரு பொருள்படும் அர்த்தத்தில் சொற்களை  உருவாக்கி கவிதையின் இன்னொரு பரிமாணத்தை ஏற்படுத்துகிறார் கவிஞர்.

புகழ் பெற்ற இந்தக் கவிதையை பலரும் மொழிபெயர்த்திருக்கிறார்கள். புகழ்பெற்ற விஞ்ஞான புனைவு எழுத்தாளரான உர்ஸுலா கே. லாகின்,  மொழிபெயர்ப்பு வழியாக தமிழில் நான் செய்தேன். நன்றி  “கேப்ரியல் மிஸ்ட்ரலின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்”

Dame la Mano

Dame la mano y danzaremos
dame la mano y me amarás.
Como una sola flor seremos,
como una flor, y nada más…

El mismo verso cantaremos,
al mismo paso bailarás.
Como una espiga ondularemos,
como una espiga, y nada más.

Te llama Rosa y yo Esperanza:
pero tu nombre olvidarás,
porque seremos una danza
en la colina, y nada más.

 

Give Me Your Hand

Give me your hand and give me your love,
give me your hand and dance with me.
A single flower, and nothing more,
a single flower is all we’ll be.

Keeping time in the dance together,
you’ll be singing the song with me.
Grass in the wind, and nothing more,
grass in the wind is all we’ll be.

I’m called Hope and you’re called Rose:
but losing our names we’ll both go free,
a dance on the hills, and nothing more,
a dance on the hills is all we’ll be.

Translation: Ursula K. Le Guin, “Selected Poems of Gabriela Mistral”

********

நான் தனியாக இல்லை

வெறிச்சோடியிருந்தது இரவு,
மலைகளிலிருந்து கடல் வரை.
ஆனால் உன்னை உலுக்கியவன் நான்
நான் தனியாக இல்லை!

வெறிச்சோடியிருந்தது வானம்,
நிலவு வீழ்கிறது கடலில்
ஆனால், உன்னைத் தாங்கியவன் நான்,
நான் தனியாக இல்லை !

வெறிச்சோடியிருந்தது  உலகம்,
எல்லா தசைகளும் துயருறுகின்றன.
ஆனால், உன்னைத் தழுவியவன் நான்
நான் தனியாக இல்லை!

Yo no tengo soledad

Es la noche desamparo
de las sierras hasta el mar.
Pero yo, la que te mece,
¡yo no tengo soledad!

Es el cielo desamparo
si la luna cae al mar.
Pero yo, la que te estrecha,
¡yo no tengo soledad!

Es el mundo desamparo
y la carne triste va
Pero yo, la que te oprime,
¡yo no tengo soledad!

 

I am Not Alone

The night, it is deserted
from the mountains to the sea.
But I, the one who rocks you,
I am not alone!

The sky, it is deserted
for the moon falls to the sea.
But I, the one who holds you,
I am not alone !

The world, it is deserted.
All flesh is sad you see.
But I, the one who hugs you,
I am not alone!

Translated by Mary Gallwey

*********

நீல நடனம்

கால்களிழந்த ஒரு  குழந்தை கேட்டது :
‘நான் எப்படி நடனமாடுவேன்?’
நாங்கள் சொன்னோம்,
“உங்கள் இதயம் ஆடட்டும்”

சோகையான ஒரு குழந்தை கேட்டது :
‘நான் எப்படி பாடுவேன்?’
நாங்கள் சொன்னோம்,
“உங்கள் இதயம் பாடட்டும்”

பின்னர் நொய்ந்த மலர் ஒன்று கேட்டது :
ஆனால், நான் எப்படி நடனமாடுவேன்? ’
நாங்கள் சொன்னோம்,
“உன் இதயம் காற்றில் நடனமாடட்டும்”

பின்னர் கடவுள் மேலே இருந்து பேசினார்
‘நான் எப்படி *நீலத்திலிருந்து இறங்குவேன்?’
நாங்கள் சொன்னோம்,
“இந்த ஒளியைப் போல நடனமாட வாருங்கள்”

அதனுடன் இணையாதவரின் இதயம்
தும்பு தூசிகளாய்ச் சுழல,
சூரியனுக்குக் கீழே
பள்ளத்தாக்கு முழுவதும் நடனமாடுகிறது.

குறிப்புகள் :

*நீலம் என்பது வானதைக் குறிக்கும் ஒரு சொல். அதேசமயத்தில் பண்டைய எகிப்து கடவுள்களின் நிறம் நீலமாக இருந்தது. இந்தியக் கடவுளான சிவன் மற்றும் கிருஷ்ணன் போன்ற பெருங்கடவுள்கள் நீல நிறம் கொண்டவர்கள்.  நீலம் வானத்தையும் நீரையும் குறிக்கும். ஒரு அண்ட அர்த்தத்தில், இது அதன் அடையாளத்தை வானத்திற்கும், ஆரம்பகால வெள்ளத்திற்கும் நீட்டித்தது. இந்த இரண்டு நிகழ்வுகளிலும், நீலம் என்பது வாழ்க்கை மற்றும் மறு பிறப்புக்கான ஒரு பொருளைப் பெற்றது.  நீலம் இயற்கையாகவே நைல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பயிர்கள், பிரசாதம் மற்றும் கருவுறுதல் ஆகியவற்றின் அடையாளமாகவும் இருந்தது.

மூலத் தலைப்பை நான் மாற்றியுள்ளேன்.

Los que no danzan
– Gabriela Mistral

Una niña que es inválida
dijo: «¿Cómo danzo yo?»
Le dijimos que pusiera
a danzar su corazón…

Luego dijo la quebrada:
«¿Cómo cantaría yo?»
Le dijimos que pusiera
a cantar su corazón…

Dijo el pobre cardo muerto:
«¿Cómo danzaría yo?»
Le dijimos: – «Pon al viento
a volar tu corazón…»

Dijo Dios desde la altura:
«¿Cómo bajo del azul?»
Le dijimos que bajara
a danzarnos en la luz.

Todo el valle está danzando
en un corro bajo el sol,
y al que no entra se le hace
tierra, tierra el corazón.

 

Those Who Do Not Dance

A crippled child
Said, ‘How shall I dance?’
Let your heart dance
We said.

Then the invalid said:
‘How shall I sing?’
Let your heart sing
We said

Then spoke the poor dead thistle,
But I, how shall I dance?’
Let your heart fly to the wind
We said.

Then God spoke from above
‘How shall I descend from the blue?’
Come dance for us here in the light
We said.

All the valley is dancing
Together under the sun,
And the heart of him who joins us not
Is turned to dust, to dust.

Translated by Helene Masslo Anderson

unnatham

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top